தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடைய படங்களுக்கு தமிழ்நாட்டை தாண்டி வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். சூர்யா, கார்த்தி, விஷால் படங்களுக்கு ஆந்திரா, தெலங்கானாவில் நல்ல ஓபனிங் இருக்கும், அஜித் படங்களுக்கு கர்நாடகாவில் நல்ல ஓபனிங் இருக்கும், ரஜினிகாந்த் படங்களுக்கு இந்தியா முழுவதுமே ஓபனிங் இருக்கும். அந்த வரிசையில் விஜய் படங்களுக்கு கேரளாவில் மாபெரும் ஓபனிங் உள்ளது .
விஜய்க்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவரது படங்கள் தொடர்ந்து கேரளா பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்து வருகின்றன. பெரும்பாலும் அந்த ஊர் முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படங்களுக்கு ஓபனிங் இருக்கும். FDFS க்கு இங்கு போலவே அங்கும் ரசிகர்கள் தியேட்டர்களில் பேனர் கட் அவுட் என்று அமர்க்களப்படுத்துவார்கள். டப்பிங் செய்யாமல் தமிழிலேயே விஜய் படங்கள் அங்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ள ‘லியோ’ படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அது பான்-இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளது. அக்டோபர் மாதம் படம் வெளியாக உள்ள நிலையில் கேரளாவில் மிகப்பெரிய ஓப்பனிங்கை உறுதிப்படுத்தியுள்ளது “லியோ”.
கேரளாவில் முதல் நாளில் 650+ திரைகளில் லியோ திரைப்படம் வெளியிடப்படவுள்ளதாகவும் , மாநிலத்தில் 90% க்கும் அதிகமான திரையரங்குகளில் 3000 க்கும் மேற்பட்ட காட்சிகளை திரையிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள நடிகர்களை தாண்டி விஜயின் படம் மாஸாக கேரளத்தில் களமிறங்குவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதையும் தாண்டி தமிழ் நாட்டை அடுத்து விஜய்யின் கோட்டையாக கேரளா மார்க்கெட் மாறியுள்ளது என்பதே உண்மை.