Cinema News Stories

மாரி செல்வராஜின் அருமையான படைப்பு மாமன்னன்! – சூப்பர் ஸ்டார்

நேற்று மாமன்னன் திரைப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார். படத்தை பார்த்த பின் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார். படம் குறித்து நிறைய விஷயங்களை இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் பேசியுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,“மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்” என ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே கபாலி, காலா என சமத்துவம் பேசக்கூடிய இயக்குநர் பா.ரஞ்சித்தின் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.