ரெஜினா கெஸன்ட்ரா நடிக்கும் சூர்ப்பனகை திரைப்படத்தின் டைட்டில் மற்றும் First Look போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் Trailer விரைவில் வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சமீப காலங்களில் Heroine Centric படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சூர்ப்பனகை திரைப்படமும் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படமாகும்.
ஏற்கனவே ரெஜினா கெஸன்ட்ராவை மையமாக வைத்து வெளிவந்த “நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்தது. சூர்ப்பனகை திரைப்படத்தின் போஸ்டர் இப்படத்தின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
திருடன் போலீஸ், உள்குத்து, கண்ணாடி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் ராஜூ தான் சூர்ப்பனகை திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் C.S இசையமைக்கிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகிறது. தெலுங்குவில் இப்படத்திற்கு “நேனே நா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டரை வைத்து பார்க்கும்போது ரெஜினா கெஸன்ட்ரா இப்படத்தில் ஒரு தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
வெளியிடப்பட்ட போஸ்டரில் மண்ணுக்குள் புதைந்திருக்கும் ஒரு எலும்புக்கூட்டை ரெஜினா ஆய்வு செய்யும் ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் இருந்தே திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் ரெஜினா கெஸன்ட்ராவுக்கும், படக்குழுவினருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- Samantha Ruth Prabhu Latest Traditional Looks Go Viral
- பார் போற்றும் பாரதி
- லட்சாதிபதிகள் மட்டும் படிக்கவும்!
- ஐயப்பனின் பதினெட்டு படிகள் சொல்லும் பாடம்
- திரு, திருமதி பெயரில் இருக்கும் ரகசியம்
இந்த போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரெஜினா கெஸன்ட்ரா, இப்படம் தனக்கு ஒரு புதிய Mile Stone என குறிப்பிட்டுள்ளார். மேலும் படம் வெற்றியடைவதற்காக ரசிகர்களின் ஆசியை தான் பெற விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சூர்ப்பனகை திரைப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். இப்படத்தின் First Look போஸ்டரை கீழே காணுங்கள்.

