Specials Stories

மாத விடாய் நாட்கள்ல பெண்களுக்கு விடுமுறை தேவையா? தேவை இல்லையா?

பெண்களின் மாதவிடாய் அதாவது Periods, இத பத்தி ரகசியமா பேசறதுக்கு எதுவும் இல்ல… இப்ப இருக்கக்கூடிய ஆண்களுக்கு இத பத்தின Awarness எல்லாம் ரொம்பவே அதிகம். இப்படி நாம முன்னேறிக்கிட்டு இருக்கோம் பகுத்தறிவு நமக்கு அதிகம் ஆயிடுச்சுனு நெனைக்கும்போது , கேரளா-ல இது சம்மந்தமா ஒரு விஷயம் நடந்து இருக்கு, அத பத்தின பதிவு தான் இந்த வீடியோ.

கேரளா-ல Girls-க்கு Periods சமயத்துல 3 நாட்கள் விடுமுறை அப்படிங்குறது தான் செய்தி. கேரளா, கொச்சி மாநிலத்துல இருக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துல மாணவிகளுக்கு Periods- சமயத்துல Leave எடுக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கு. இது சம்மந்தமா Students Council-ல Already Leave தரணும்னு கோரிக்கை வச்சிருக்காங்க,

இப்போ அந்த கோரிக்கை நிறைவேறி இருக்கறதுனால, அந்த முடிவ எடுத்த அந்த University-க்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் வந்துட்டு இருக்கு. ஒரு பக்கம் இந்த Move-அ சிலர் பாராட்டினாலும், எதுக்கு இந்த Leave-னு தோணுது. இப்ப வர கூடிய Sanitary Pads Ad-ல கூட பெண்கள் மலை ஏறுற மாதிரி காட்றாங்க, Sports விளையாடுற மாதிரி காட்றாங்க, இப்படி பல கடினமான வேலைகள பண்ற மாதிரி தான் காட்றாங்க, In fact Reality-ல கூட அதான் நடக்குது.

இப்படி பெண்கள் முன்னேறி வராங்க, வந்துட்டாங்கனு பேசிட்டு இருக்கும்போது, இப்போ இப்படி ஒரு Leave தேவையா? அப்படினு ஒரு கேள்வி வருது. அந்த மூன்று நாட்கள், சிலருக்கு உடல் உபாதை, வயிறு வலி, Excessive Bleeding-லாம் இருக்கும், ஆனா It’s Just a Routine ah மாறிடுச்சு, இப்படி முன்னேறி இருக்க சமயத்துல இந்த மாதிரி விடுமுறை குடுத்து இருக்கறது பெண்களால அந்த periods நாட்கள்ல பெருசா எதையும் செய்ய முடியாதுனு குறிக்கற மாதிரி இருக்கு.

ஆண், பெண் இதுல யாரு புத்திசாலி? யாரு பல சாலி? அப்டிங்குற வாக்கு வாதத்துக்கு உள்ளேயே போக வேணாம். இந்த Periods காரணத்த சொல்லி பெண்களுக்கு தரக்கூடிய லீவு உண்மையாவே தேவையா? நமக்கு முன்னாடி எத்தனையோ பெண்கள் வேலைக்கு போய் இருக்காங்க, வீட்டு வேலைகள பாத்து இருக்காங்க, ஏன் விண்வெளி கூட போய் சாதனை பண்ணி இருக்காங்க.

இப்படி பெண்கள் எத்தனையோ கனவுகள தேடி ஓடிட்டு இருக்கும்போது, இப்போ இந்த விடுமுறை தேவையான கேள்விகள் வருது. உங்களோட கருத்து என்ன? மாத விடாய் நாட்கள்ல பெண்களுக்கு விடுமுறை தேவையா? தேவை இல்லையா? கமெண்ட் section-ல ஷேர் பண்ணுங்க.

Article By RJ Ranjani

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.