Specials Stories

90’S கிட்ஸின் சுதந்திர தினம்… மறக்க முடியாத நாட்கள்!

90’ஸ் கிட்ஸ பொறுத்த வரைக்கும் சுதந்திர தினம்னாலே நம்ம எல்லாருக்கும் மறக்க முடியாத நினைவுகளா இருக்க கூடியது பள்ளிக்கால நினைவுகள் தான்.

சுதந்திர தினம் Weekdays-ல வந்தா ஸ்கூல் லீவா இருக்கும். ஒரு மணி நேரம் மட்டும் ஸ்கூல் போய்ட்டு வருவோம். அதே சுதந்திர தினம் Weekend-ல Holidays-ல வந்தாலும் கொடியேத்துறதுக்காக ஒரு மணி நேரம் ஸ்கூலுக்கு போய்ட்டு தான் வருவோம். அதனால நம்ம பள்ளிப்பருவத்துல சுதந்திர தினம் எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கும்.

அப்ப நடக்குற சம்பவங்கள எப்பவும் நம்மளால மறக்க முடியாது. பள்ளிக்கூடத்துக்கு பாட புத்தகம் இல்லாம, ஸ்கூல் பேக் இல்லாம காலைல சீக்கிரம் ஜாலியா கிளம்பி போவோம். போய் ஒவ்வொரு கிளாஸ் வாசல்லயும் Co-Education-னா பொண்ணுங்க சீக்கிரம் வந்து கோலம் போடுவாங்க, பசங்க Board-ல தேசியக்கொடி வரைஞ்சு கலர் சாக்பீஸ்ல கலர் கொடுத்துட்டு இருப்பாங்க.

Boys School, Girls School-னா அவங்களே எல்லா வேலையும் பண்ணிருவாங்க. Class-ல தோரணம் கட்டுறது அது இதுனு வித விதமா டெகரேஷன் பண்ணி வைப்பாங்க. அதுவும் தேசியக்கொடி கலர்ல தான் முழு டெகரேஷனும் இருக்கும். பள்ளிக்கூடத்துல எல்லா டீச்சர்ஸும் வந்தாலும் அன்னிக்கு பாடம் நடக்காது. எவ்ளோ சத்தம் போட்டாலும் டீச்சர்ஸ் அடிக்க மாட்டாங்க. ஸ்கூல்ல படிக்குற Students எல்லாரும் Class வித்தியாசம் இல்லாம ஒன்னா Ground-ல இருப்போம்.

எல்லாரோட நெஞ்சுலயும் தேசியக்கொடிய குண்டூசி வச்சு குத்திட்டு நிப்போம். சில பேர் பேப்பர் கோடி, சில பேர் பிளாஸ்டிக் கொடி குத்தியிருப்போம். சிலர் கைல கொடி வாங்கிட்டு போவோம். HM தேசியக்கொடி ஏத்தி முடிச்சதும் தேசிய கீதம் பாடும். அது முடிஞ்சதும் நமக்கு ஆரஞ்சு மிட்டாய் தந்து அனுப்பிடுவாங்க.

அதில்லாம சில பள்ளிக்கூடங்கள்ல சின்ன சின்ன போட்டிகள் கூட நடக்கும். போட்டி முடிஞ்சு HM பரிசு குடுப்பாங்க. இன்னும் சில பள்ளிக்கூடங்கள்ல சுதந்திர தினத்துக்கு முன்னாடியே அது சம்மந்தமான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி எல்லாம் நடந்து முடிஞ்சுருக்கும். சுதந்திரம் வாங்கி குடுத்த சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்கள் பத்தி நாமளும் பேசிருப்போம், எழுதியிருப்போம், வரைஞ்சிருப்போம்.

சுதந்திர தினத்தன்னைக்கு போட்டில வெற்றி பெற்றவங்களுக்கான பரிச எல்லார் முன்னாடியும் HM கொடுப்பாங்க. ரொம்ப சந்தோஷமான நாளா இருக்கும். எல்லாம் முடிஞ்சதும் உடனே கிளம்பி டிபன் சாப்பிட வீட்டுக்கு போயிருவோம். ஒரு சிலர் ஜாலியா நண்பர்களோட சேர்ந்து அங்க இங்க ஊர சுத்திட்டு பொறுமையா வீட்டுக்கு போவோம். போகும் போது நாம கைல வச்சிருந்த கொடிய சைக்கிள்ல குத்தி வச்சுருவோம்.

கட்சிக்காரங்க கார்ல கொடி பறக்குற மாதிரி நம்ம சைக்கிள்ல தேசியக்கொடி பறந்துட்டு இருக்கும். நேரா வீட்டுக்கு வருவோம். வீட்டுக்கு வந்ததும் யூனிபார்ம்ல இருக்க கொடிய கழட்டி பத்திரமா எங்கயாவது வைப்போம். இல்லனா நம்ம வீட்ல இருக்க முகம் பார்க்குற கண்ணாடில சொருகி வச்சுருவோம். அப்றம் யூனிபார்ம அப்டியே கழட்டி கொடில மாட்டிருவோம், அடுத்த நாள் போட்டுட்டு போக.

ஏன்னா ஒரு மணி நேரம் தான போட்டுருக்கொம், அடுத்த நாள் போட்டுட்டு தொவைக்க போடுனு அம்மா சொல்லுவாங்க. டிவிய ON பண்ணா அர்ஜுன் படம் ஜெய்ஹிந்த் ஓடும். அன்னைக்கு முழுக்க தாய்மணிக்கொடி தாய்மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் பாட்ட எங்கயாவது கேட்டுட்டே இருப்போம். அப்படியே அந்த நாள் உணர்ச்சிப்பூர்வமா முடிஞ்சுடும். அந்த அழகான பள்ளி நாட்கள நம்மால என்னைக்கும் மறக்கு முடியாது.

Article By MaNo