H வினோத் இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் ‘துணிவு ’ படத்தில் பணியாற்றிய நடிகை மஞ்சு வாரியர் மற்றும் பாடகர் வைசாக் சமீபத்தில் சூரியன் FM டிஜிட்டலுக்கு நேர்காணல் அளித்தனர். அப்போது அவர்களிடம் துணிவு படப்பிடிப்பில் நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பேசினோம்.
மேலும், வைஷாக்கிடம் உங்களுக்கு MUSICIAN ஆகணும்கிற ஆசை எப்போ வந்துச்சு என்று கேட்டதற்கு, “School Competition-ல ஓ பெண்ணே பெண்ணே Song பாடினேன். அப்போ கெடச்ச கை தட்டும் அங்கீகாரமும் என்ன ரொம்ப Inspire பண்ணுச்சு… அப்போ தன் ஏதாச்சும் பண்ணனும்னு முடிவு பண்ணேன்” என்று கூறினார்.
- Samantha Ruth Prabhu Latest Traditional Looks Go Viral
- பார் போற்றும் பாரதி
- லட்சாதிபதிகள் மட்டும் படிக்கவும்!
- ஐயப்பனின் பதினெட்டு படிகள் சொல்லும் பாடம்
- திரு, திருமதி பெயரில் இருக்கும் ரகசியம்
அடுத்து, இன்ஸ்டாகிராமில் வைரலாக பேசப்பட்ட அஜித் குமாரின் Bike Ride வீடியோவில் நீங்களும் இருக்கீங்க தான? என்று மஞ்சு வாரியரிடம் கேட்டதற்கு, “நானும் இருக்கேன்” என்று பதிலளித்தார். மேலும், அந்த பயணத்தின் அனுபவம் குறித்து கேட்டபோது, “அந்த Trip-ல இருந்த ஒவ்வொரு Moment-ம் Unforgettable, எனக்கு ஒரு புது Experience , Bike-ல லே லடாக், அப்டி ஒரு Group of Bikers கூட போனது. ரொம்ப Professional & Passionate-ஆ இருந்துச்சு அந்த Trip” என்று கூறினார்.
பின்னர், யாரு இந்த ட்ரிப்ப First Initiate பண்ணாங்க என்று கேட்டதற்கு, “இந்த Trip-அ பத்தி சொல்லி Invite பண்ணது அஜித் சார் தான், எனக்கு Travel பண்ண ரொம்ப புடிக்கும், அத பத்தி Shooting Time-ல நிறைய பேசிட்டு இருந்தோம் நாங்க. அந்த டைம்ல தான் சார் ரொம்ப அன்பா Invite பண்ணாரு” என்று கூறினார். மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
முழு நேர்காணலை கீழுள்ள இணைப்பில் காணுங்கள்…

