Cinema News Specials Stories

என்றென்றும் தேவா!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. காரணம் அவருடைய கானா பாடல்களின் வழியே கடைக்கோடி தமிழர்கள் வரை அவர் சென்று சேர்ந்திருக்கிறார்.

90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் இவருக்கென ஒரு தனி இடம் உண்டு. 90ஸ் கிட்ஸ் மட்டுமல்ல 80ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என அனைவரும் ரசிக்கும் வகையில் தேவாவின் இசை இருக்கும். சந்தேகமிருந்தால் இப்போது இசையமைப்பாளர் தேவாவின் பிரபலமான 10 பாடல்கள் பற்றி சொல்கிறேன். கேட்டுப் பாருங்கள்.

  • சலோமியா : (கண்ணெதிரே தோன்றினால்)
    பூக்கள் எல்லாமே அழகு தான் ஆனா அந்த பூக்கள்ல மிக அழகான பூ நட்பு(பூ). அந்த நட்ப கடலோர உப்பு காத்தோட, கடற்கரை அழகு குறையாம கானா பாட்டா பாடியிருப்பார் தேனிசை தென்றல் தேவா. 90’ஸ் கிட்ஸ் பல பேருக்கு தங்களோட நட்ப பிரதிபலிக்கும் பாட்டா இப்போ வரைக்கும் இருக்கு “சலோமியா ”
  • குன்றத்துல கோவில கட்டி : (நேசம்)
    பொதுவா இருமனம் இணைந்து இருக்கும் காதல்ல “Break up” ஆகிருச்சுனா, மனசு ஒடஞ்சு போய் சோக பாட்ட கேட்டுட்டு சோர்ந்து போயிருவாங்க. ஆனா நம்ம தேவா-வோட இந்த “break up” சாங்க கேட்டா கவலைய தூக்கி கடாசிட்டு ஆட்டம் போட்டு கொண்டாட ஆரம்பிச்சுருவோம்.
  • வித விதமா சோப்பு : (காதலே நிம்மதி)
    இப்போ இருக்க 2k கிட்ஸ் அவங்க மனசுக்கு புடிச்ச பொண்ண “Crush” னு சொல்ராங்க ஆனா 90’ஸ் கிட்ஸ்க்கு அவங்க மனசுக்கு புடிச்ச பொண்ணு என்னைக்குமே “அஞ்சல” தான். அந்த அஞ்சலய, போன் இல்லாத காலத்துல எப்பயாவது மீட் பண்ணிட்டு, கண்ணுலயே பேசிகிட்டு அவங்கள நெனச்சுகிட்டே வாழ்ந்த பல பேருக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுன்னா அது இது தான்.
  • மீசைக்கார நண்பா : (நட்புக்காக)
    இந்த உலகத்துல காதல் இல்லாதவங்க இருக்காங்க, கல்யாணம் பண்ணாதவங்க இருக்காங்க, அவ்வளவு ஏன் குடும்பம் இல்லாதவங்க கூட இருக்காங்க, ஆனா நண்பன் இல்லாதவங்க யாரும் இல்ல. வாழ்க்கைல எல்ல தருணத்துலயும் நம்ம கூட வர ஒரு உறவு இது தான். அப்பேற்பட்ட நட்ப நியாபகப்படுத்தி நம்ம கண்ணுல கண்ணீர் வர வக்கிற பாட்டு தான் மீசைக்கார நண்பா. நட்பு இருக்க வரைக்கும் இந்த பாட்டுக்கு முடிவு இல்ல.
  • கவலை படாதே சகோதரா : (காதல் கோட்டை)
    நாம கவலைல இருக்கும் போது, கவலை படாதனு சொல்ற அளவுக்கு ஒருத்தரயாவது நம்ம வாழ்க்கைல நாம சம்பாதிச்சு வச்சிக்கணும். ஆனா இப்போ அப்டி ஒருத்தர கண்டுபுடிக்கறது தார் ரோட்டுல தக்காளி செடி வக்கிற மாதிரி தான். ஆனா காதல் கோட்டை படத்துல வர இந்த பாட்ட கேட்டா ஆட்டோக்கார அண்ணா நமக்கு ஆறுதல் சொல்ற மாதிரியே இருக்கும்.
  • மேகம் கருக்குது : (குஷி)
    மழை காலம் வந்தாலே நம்ம எல்லாரும் குஷி ஆகிருவோம், குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே மழைல நனையனும்னு ஆச கண்டிப்பா இருக்கும். அதே மாதிரி மழைல ஆடும் போது இந்த பாட்ட பாடிகிட்டே ஆடணும்னு தான் எல்லாரும் ஆச பாடுவாங்க. மழைல நனையாட்டியும் கூட தகச்சிமி தகச்சும்-னு கண்டிப்பா பாடுவோம். சின்ன வயசுல இந்த பாட்ட கேட்டு ஆடாத குழந்தைகளே இல்ல.
  • மீனம்மா : (ஆசை)
    தேனிசை தென்றல் தேவா அப்டினு சொன்னாலே கானா பாடல் தான் எல்லாருக்கும் நியாபகம் வரும். ஏன்னா அதுல அவர் கிங். ஆனா அதுல மட்டும் இல்ல மெலடி பாட்டுலையும் அவரு கிங் அப்படிங்கறது இந்த பாட்ட கேட்கும் போது தெரியும். இப்போ 2k கிட்ஸ் கூட இந்த பாட்ட Whatsapp-ல Status வச்சு என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க. அந்த அளவுக்கு தேவா அவர்கள் எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சிருக்காரு.
  • காத்தடிக்குது (நினைவிருக்கும் வரை)
    பொதுவா பார்ட்டி அப்டினாலே DJ வச்சு வெஸ்டர்ன் மியூசிக் போட்டுட்டு டான்ஸ் ஆடணும் அப்டினு தான் பல பேரு நினைச்சிட்டு இருந்தாங்க. ஆனா நம்ம தேவா வெஸ்டர்ன்-ல மட்டும் இல்ல கானா பாட்டுலயும் பார்ட்டி பண்ணலாம்னு இந்த பாட்டு மூலமா உலகத்துக்கு காமிச்சிட்டாரு. இப்போ வரை இந்த பாட்டு இல்லாத ஒரு பார்ட்டிய பாக்க முடியாது.
  • கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு : (வெற்றிக் கொடி கட்டு)
    வண்ணங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம், நம்ம எல்லாருக்குமே ஒவ்வொரு கலரு புடிக்கும் இதுல பெரும்பாலும் நெறய பேருக்கு கருப்பு கலர் ரொம்ப புடிக்கும் ஆனா கருப்பு கலர் குடும்பத்துக்கு ஆகாது நெருப்பில்லாம அரிசி வேகாதுனு சொல்லி கருப்பு மேல வெறுப்பு வர வைப்பாங்க, ஆனா இந்த பாட்டுல கருப்பு கலரு ஸ்பெஷல சொல்லி அத பெருமை படுத்திருப்பாரு நம்ம தேவா. இந்த பாட்ட கேட்டு பாருங்க உங்களுக்கு கருப்பு கலரும் புடிக்கும். தேவா-வும் புடிக்கும்.
  • நான் ஆட்டோக்காரன் : (பாட்ஷா )
    பாட்ஷா படம் வந்ததுக்கு அப்புறம் ஆயுத பூஜ வந்தா வேல செய்ற இடத்துல இருக்க பொருளுக்கெல்லாம் பூஜை போடுறாங்களோ இல்லையோ கண்டிப்பா நான் ஆட்டோக்காரன் பாட்ட போட்ருவாங்க. 27 வருசமா தமிழ்நாட்டுல இதை மிஸ் பண்ணாம கடைபிடிச்சிட்டு வரோம். இதுக்கு காரணம் நம்ம தேனிசை தென்றல் தேவா தான்.

தேவா என்றால் கானா மட்டுமல்ல, அதையும் தாண்டி பன்முகங்கள் கொண்ட இசையமைப்பாளர் என்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்படி இன்னும் பல பாடல்கள் உண்டு. தமிழ் சினிமா வரலாற்றில் இசையமைப்பாளர் தேவாவின் காலம் ஒரு பொற்காலமாக என்றும் நிலைத்திருக்கும்.

Article By Roopan Kanna