கோலிவுட் பருத்திவீரன் கார்த்தி !!

கடவுள் வேடம் அப்படின்னா தெலுங்கு சினிமால NTR , தமிழ் சினிமாவுல நம்ம சிவகுமார் தான்..

அப்படிப்பட்ட நடிகருக்கு முதல்ல பிறந்தது சிங்கம், அடுத்ததாக பிறந்தது சிறுத்தை.

25.5.1977 ல பிறந்த சிறுத்தை பேரு கார்த்தி. தமிழ் நாட்டுல படிச்சு முடிச்சிட்டு வெளிநாட்டிலும் படிப்ப முடிச்சிட்டு ஒரு அமெரிக்கா பையனா software company ல வேலைக்கு போவாருனு பார்த்தா, நம்ம மணிரத்னம் sir கிட்ட assistant- ஆ சேர்ந்துடாரு.

அதோட நிக்கல அப்படியே முகம் full-ஆ தாடியோட 2010-ல  ஒரு பருத்திவீரனா தன்ன prove பண்ணாரு. ஆயிரத்தில் ஒருவனாக இருந்த இந்த அழகான பையா, நான் மகான் இல்லைனு சொல்லாம சொன்னாரு.தோள் கொடுப்பான் தோழன்-னு சொல்வாங்க, Telugu நடிகர் நாகார்ஜூனாவுக்கும் தோழாவாக நின்னாரு.

விவசாயத்திற்கு ஒரு கடைக்குட்டி சிங்கமா. வீரமான காவல் துறைக்கு ஒரு தீரனா, தன்னோட அன்னிக்கு திரைல ஒரு உருத்தான தம்பியா,100 அண்ணனுக்கு வழிகாட்டும் ஒரு தைரியமான சுல்தானா,நம்ம எல்லாரோட மனசையும் தன்னோட எதார்த்தமான நடிப்பால் ஆழும் பொன்னியின் செல்வனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமிதம் கொள்கிறது சூரியன் FM.

Article by RJ Surya.

About the author

shafin

உங்களில் ஒருவன்