தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உணர்வுகளின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை, அவர் கொண்டாடுகிறார் என்று சொல்வதை விட உலகெங்கிலும் உள்ள தமிழ் இசை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர் என்றே சொல்லலாம்.
தமிழ் சினிமா எண்ணற்ற பல இசையமைப்பாளர்களை நமக்கு கொடுத்திருந்தாலும், உணர்வுகளோடு உறவாடும் ஒரு உன்னத இசையமைப்பாளரை கொடுத்திருக்கிறது என்றால் அது யுவன் ஷங்கர் ராஜாவே. இவரது இசையும் குரலும் ஒருபோதும் நம் உணர்ச்சிகளோடு விளையாட தவறியதே இல்லை.

வாழ்வில் வெற்றி, தோல்வி, கஷ்டம், நஷ்டம், காதல், மோதல், மகிழ்ச்சி, இகழ்ச்சி என எந்த தருணத்தை நாம் கடக்கும் போதும் நம் செவிகளில் எதோ ஒரு யுவன் பாடல் ஒலிக்காமல் கடந்திருக்க மாட்டோம். 97-ல் தொடங்கிய இந்த இசை ரயில் 2021-லும் “வலிமை”-யுடன் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இரவு தூங்கும் வேளையில் ஏதாவது எண்ணங்கள் நமக்குள் வந்து தூங்க விடாமல் செய்யும் போது “ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூறல் போடுதே” என யுவனின் குரல் நம்மை தூங்க வைக்க தாலாட்டு பாடும். எந்த அளவிற்கு ஒரு காதலின் ஆழம் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழும் போது “மழை வாசம் வருகின்ற நேரம் எல்லாம், உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா” என யுவனின் குரல் காதலுக்கு நறுமண இலக்கணம் வகுக்கும்.
அப்படி உருகி உருகி உயிர் கொடுத்த காதல் நம்மை விட்டு பிரியும் போது “காதல் என்றால் அத்தனையும் கனவு, கண்மூடியே வாழ்கின்ற உறவு” என காதலையும் கஷ்டத்தையும் காற்றோடு கலக்க செய்யும் இந்த யுவனின் குரல். யுவன் பாடும் பாடல்களுக்கு ரசிகர்கள் சூட்டிய செல்லப் பெயர் “யுவன் Drugs”. இந்த Drugs இளைஞர்கள் Playlist-ல் தினமும் பல Dose-களாக இறங்கிக்கொண்டே இருக்கிறது.
செவிகளின் காதலனாய் விளங்கும் யுவன், BGM King என்றும் தன் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். பில்லா, மங்காத்தா, காதல் கொண்டேன், மன்மதன், புதுப்பேட்டை, ஆரம்பம், தாமிரபரணி, திமிரு, வேல் என இவரது BGM-க்காகவே பல படங்களின் முக்கிய காட்சிகளை நாம் மறவாமல் நினைவில் கொண்டிருக்கிறோம். தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து கதாநாயகர்களும் நடந்து வரும்போது பின்னணியில் யுவன் BGM ஒலித்தால், அது Top-u Tucker-u தான்.
- Ashika Ranganath Dazzles in Her Latest Viral Glamorous Photos Inside
- Soundariya Nanjundan Wins Hearts with Her Mesmerizing New Photos – Viral Clicks
- Kayadu Lohar Adorable Expressions Go Viral – Trending Photos Inside
- Vedhika Stunning Photos Go Viral on Social Media – Latest Trending Clicks
- Divyabharathi Grabs Spotlight with Her Stunning New Photos – Viral Sensation on Social Media
நூறுக்கணக்கான பாடல்களாலும், புத்துணர்ச்சியூட்டும் பின்னணி இசையாலும் யுவன் ஷங்கர் ராஜாவாக மட்டும் இல்லாமல் உணர்வுகளின் ராஜாவாகவும் வலம் வரும் Young Maestro-வுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.