“பிகில்” தளபதி ரசிகர்கள் மட்டுமில்லாம, தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லாரும் எதிர்பார்த்து காத்திருந்த படம். பிகிலுக்கு இருந்த எதிர்பார்ப்புக்கு காரணம் LCU மாதிரி, ACU- Atlee Cinematic Universe எதும் இல்ல, தளபதி விஜயும் அட்லியும் அதுக்கு முன்னாடி தெறியா செஞ்ச மெர்சலான சம்பவங்கள் தான்.
தீபாவளிக்கு தளபதிய Screen-ல பாக்க வந்த ரசிகர்களுக்கு Intro சீன்லயே தளபதி விஜய் சொன்ன “ஹேப்பி தீபாவளி நண்பா” டயலாக் விஜய்யே நேர்ல Wish பண்ண மாதிரி இருந்துச்சு. மைக்கேல் Intro-க்கு அப்பறம் வெறித்தனம் பாட்டு வந்ததும், Screen-ல தளபதி கூட ஆடுற Dancers-அ விட ஒட்டு மொத்த ரசிகர்களும் Screen முன்னாடி போய் தங்களோட நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் தளபதியோட Dance ஆடினாங்க.

இன்னொரு பக்கம், பெண்களுக்கான Football கோச்சா இருந்த கதிருக்கு, வில்லன் கேங்கால கத்தி குத்துபட்டு Hospital-ல இருக்க, அங்க தான் Flashback ஆரம்பமாகுது. அதுவரை தளபதி Intro, வெறித்தனம் பாட்டு, நயன்தாரா Intro, அங்கங்க தளபதிக்கே தானா வர காமெடிஸ் எல்லாம் நல்லா போய்ட்டு இருந்தாலும்… அதெல்லாம் சரவெடில திரிய பத்த வச்ச மாதிரி தான், ஏன்னா திரி எரிய எரிய வெடி வெடிக்க நாம காத்திருக்க மாதிரி எல்லாரும் காத்திருந்தது ராயப்பனோட என்ட்ரிக்கு.
கண்டிப்பா உங்க காதுகளுக்குள்ள இந்நேரம் ராயப்பன் BGM கேக்கலாம். எம்ஜிஆர் பாட்ட தளபதி பாட, கைல ஒரு கத்தி, ஏகப்பட்ட ரவுடிகள் சுத்தி, ஏ.ஆர் ரஹ்மான் BGM-ல தளபதி ராயப்பன் என்ட்ரி, ஒட்டுமொத்த தியேட்டரும் அந்த ஒரு நொடி அதிர்ந்துச்சு.

அதுக்கப்புறம் ராயப்பன், மைக்கேல்குள்ள இருக்க அந்த அப்பா, பையன் Chemistry நல்லாவே Workout ஆகியிருந்துச்சு, குறிப்பா தான் ஒரு ரவுடியா இருக்கதால தன்னோட பையனுக்கு Football Selection-ல கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கலையேனு ஜாக்கி ஷ்ராஃப் கிட்ட பேசுற அந்த சீன், பையன் கிட்ட Football Player-அ என் மைக்கேல் இருக்கனும்னு பேசுற சீன் ரொம்பவே நல்லாருக்கும்.
இப்படி படம் போயிட்டே இருக்க, Interval Scene நெருங்க பையனோட கனவு பயணத்துக்கு வழி அனுப்ப வந்த ராயப்பன், மைக்கேல் ரயில் ஏறினதும், கப்பு முக்கியம் பிகிலுனு சொல்ல, வில்லன் கேங்க் கத்தில குத்தி மைக்கேல் கண்ணு முன்னாடியே கொன்னுடுவாங்க. பின்னணில காலமே காலமே பாட்டோட, மைக்கேல் அப்பானு ஓடி வர மொத்த தியேட்டரும் அமைதியா இருந்துச்சு.

ஒரு பக்கம் தியேட்டர்ல இந்த சீனுக்கு எல்லாரும் பீல் பண்ணாலும், இன்னொரு பக்கம் மீம் கிரியேட்ர்ஸ் மைக்கேல் ஓடி வர சீன மீம்ஸ்களா போட்டு கிண்டல் பண்ணாங்க. கதிரோட Students-க்கு கோச்சா போற மைக்கேல அந்த டீம்ல இருக்க எந்த பொண்ணுக்கும் பிடிக்கல, அப்பறம் கொஞ்ச கொஞ்சமா மைக்கேல தன்னோட கோச்சா ஏத்துக்கிட்ட பெண்கள் அவர் கத்து கொடுத்த மொத்த வித்தையையும் தங்களோட விளையாட்டுல காட்டுவாங்க.
பிகிலோட First Half முழுக்க முழுக்க கமர்ஷியலா இருந்தாலும் Second Half முழுக்க பெண்களை Motivate பண்றதா தான் இருந்துச்சு, Acid விசப்பட்டு வீட்டுக்குள்ள முடிங்கியிருந்த பொண்ணையும், கல்யாணம் ஆகி கனவுகள தொலைச்ச பொண்ணையும், அவங்க கனவ நோக்கி சமூகத்துத்துல பயணம் பண்ண வைக்க ரொம்ப Motivate பண்ணுச்சு.

அதுவும் சிங்கப்பெண்ணே பாட்டு பெண்களுக்கான Anthem-மா மாறிடுச்சு. படத்தோட கிளைமாக்ஸ் இதுவாதான் இருக்கும்னு நமக்கு தெரிஞ்சிருந்தாலும் , நம்மல ரசிக்க வச்சது அட்லியோட திரைக்கதையும், இசைப்புயலோட பின்னணி இசையும் தான். இன்னைக்கு பிகில் படம் ரீலிஸ் ஆகி நாலு வருஷம் ஆகுது, படத்துல அங்கங்க சில குறைகள் இருந்தாலும், இன்னமும் டிவில பிகில் போட்டா அதுக்கான டிஆர்பி ரேட்டிங் எகிரத்தான் செய்யுது.
இந்த வருஷம் பிகில் ரிலீஸ் ஆகி நாலாவது வருஷம், அதுபோல நாலு வருஷத்துக்கு ஒரு முறை வர உலகை கோப்பையும் நடக்குது… பிகில்ல வர வசனம் போல கப்பு முக்கியம் பிகிலுனு நமக்கு உலக கோப்பை கிடைச்சா சந்தோஷம் தான்.