Cinema News Stories

விஜய் ஆன்டனி நடிகராக மிரட்டிய 5 தமிழ் படங்கள்..

விஜய் ஆன்டனி நடிகராக மிரட்டிய 5 தமிழ் படங்கள்.. | 5 Best Markable Movies of Actor Vijay Antony

விஜய் ஆன்டனி நடிகராக மிரட்டிய 5 தமிழ் படங்கள்.. – விஜய் ஆன்டனி நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த 5 திரைப்படங்கள் லிஸ்ட் இங்கு விரிவாக உள்ளது. இதில் ‘நான்’ முதல் ‘ரோமியோ’ வரை 5 சூப்பர் ஹிட் படங்கள் உள்ளன. இதோ.

நான்

நான் திரைப்படம் விஜய் ஆன்டனியின் கதாநாயகராக அறிமுக படம். இது ஒரு மனோதத்துவத் த்ரில்லர் வகை திரைப்படம். படத்தில், ஒரு குற்றவாளி வேறொருவரின் அடையாளத்தை ஏற்று எப்படி ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குகிறான் என்பது மையக் கருத்தாக வருகிறது.

விஜய் ஆன்டனி நடிகராக மிரட்டிய 5 தமிழ் படங்கள்.. | 5 Best Markable Movies of Actor Vijay Antony
விஜய் ஆன்டனி நடிகராக மிரட்டிய 5 தமிழ் படங்கள்.. | 5 Best Markable Movies of Actor Vijay Antony

சலீம்

நான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவான திரில்லர் திரைப்படம். இப்படத்தில் விஜய் ஆன்டனி ஒரு மருத்துவராக நடித்துள்ளார், இப்படத்தில் இவரது கதாபாத்திரம் சமூக அநீதி எதிராக நியாயம் தேடும் ஒரு விழிப்புணர்வு கொண்ட நாயகன்.

விஜய் ஆன்டனி நடிகராக மிரட்டிய 5 தமிழ் படங்கள்.. | 5 Best Markable Movies of Actor Vijay Antony
விஜய் ஆன்டனி நடிகராக மிரட்டிய 5 தமிழ் படங்கள்.. | 5 Best Markable Movies of Actor Vijay Antony

பிச்சைக்காரன்

விஜய் ஆன்டனியின் திரைப்பயணத்தில் முக்கியமான வெற்றிப் படம். ஒரு பணக்கார தொழிலதிபர் தாயின் உடல்நலம் மேம்பட பிச்சைக்காரனாக வாழும் கதையைத் தழுவியது. இது ரசிகர்களிடையே பரபரப்பான வரவேற்பைப் பெற்றது. தாய் மகன் பாசம், தியாகம் மற்றும் ஆன்மீக உணர்வுகள் கலந்த ஒரு உணர்ச்சி வசமான திரைப்படம்.

விஜய் ஆன்டனி நடிகராக மிரட்டிய 5 தமிழ் படங்கள்.. | 5 Best Markable Movies of Actor Vijay Antony
விஜய் ஆன்டனி நடிகராக மிரட்டிய 5 தமிழ் படங்கள்.. | 5 Best Markable Movies of Actor Vijay Antony

கோடியில் ஒருவன்

எளிமையான குடும்ப சூழ்நிலையில் பிறந்த இளைஞன், கல்வி மற்றும் நேர்மையின் மூலம் அரசியலில் தலைசிறந்தவராக உயர்கிறார். மக்கள் ஆதரவு, சமூக நீதிக்கான போராட்டம் மற்றும் உயர்நிலை அரசியல் தந்திரங்களை என பல விஷயங்களை படம் கொண்டுள்ளது.

விஜய் ஆன்டனி நடிகராக மிரட்டிய 5 தமிழ் படங்கள்.. | 5 Best Markable Movies of Actor Vijay Antony
விஜய் ஆன்டனி நடிகராக மிரட்டிய 5 தமிழ் படங்கள்.. | 5 Best Markable Movies of Actor Vijay Antony

ரோமியோ

விஜய் ஆன்டனியின் தீவிரமான காதல் கதையம்சம் கொண்ட சமீபத்திய படம். ரொமான்ஸ் மற்றும் சென்டிமென்ட் கலந்த கதையில் இரு வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார், விஜய் ஆன்டனி. இப்படமானது விஜய் ஆன்டனியின் ஒரு புதிய பக்கத்தை — மென்மையான கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது..

விஜய் ஆன்டனி நடிகராக மிரட்டிய 5 தமிழ் படங்கள்.. | 5 Best Markable Movies of Actor Vijay Antony
விஜய் ஆன்டனி நடிகராக மிரட்டிய 5 தமிழ் படங்கள்.. | 5 Best Markable Movies of Actor Vijay Antony

இந்த 5 திரைப்படங்களும், விஜய் ஆன்டனி ஒரு மோசமான சூழ்நிலைகளில் இருந்து எதிர்பாராதவிதமாக வெற்றி பெறும் நாயகனாக, மனோவியல், சமூக நெறிகள், மற்றும் உணர்ச்சி பூர்வமான கதைகளில் சிறப்பாக நடித்ததை நிரூபிக்கின்றன.

Article By Sakthi Harinath

About the author

Sakthi Harinath