Specials Stories

இது மூடநம்பிக்கை இல்ல அறிவியல்!

நம்ம எவ்வளவோ விஷயங்கள, மூட நம்பிக்கைப்பா இது… அப்படின்னு சொல்லிருப்போம். ஆனா அது மூட நம்பிக்கை இல்ல அதுக்கு பின்னாடி ஒரு பெரிய அறிவியலே இருக்குன்னு சொன்னா எவ்வளவு ஆச்சரியமா இருக்கும். அப்படி ஒரு விஷயத்ததான் இப்ப நாம பாக்க போறோம்.

நம்ம பழைய சாமி படங்கள்ல கவனிச்சிங்கன்னா Climax Scene-ல ஹீரோக்கு உடம்பு சரி இல்லாமா எந்திரிக்க முடியாத அளவுக்கு போயிடும். அந்த Hero சாவ கூடாதுங்கறதுக்காக Heroine சாமி முன்னாடி பாட்டு பாடுவாங்க, கடைசில அந்த ஹீரோவும் உயிர் பொழச்சிடுவாங்க.

அதெப்படி சாத்தியமாகும்? கேக்கவே சிரிப்பா இருக்குல, ஏன் நிறைய பேர் யாகம் பண்ணுவாங்க, அதிக பிராத்தனைகள் நடக்கும், இதோட முடிவுல அவங்க அந்த நோய்ல இருந்து தப்பிச்சுடுவாங்க. இதெல்லாம் உண்மையா அப்படின்னா? கண்டிப்பா உண்மைதான்.

நம்மளுடைய உடல்நிலையோ, மனநிலையோ சரி இல்லைன்னா ஒரு பாட்டு கேக்கனும்னு தோணும், அந்த பாட்ட கேட்ட உடனே அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரியான மன நிலைக்கு நம்மளும் மாறிடுவோம். இதெல்லாம் எப்படி நடக்குதுன்னு கவனிச்சிங்களா? இதுக்குப் பின்னாடி எவ்வளவு பெரிய விஞ்ஞானம் இருக்குனு தெரியுமா?

2010, Mexico வளைகுடாவில் நடந்த எண்ணெய் விபத்துல பில்லியன் கணக்கான லிட்டர் Oil கடல்ல கலந்துடுச்சு. அதை எப்படி சுத்தப்படுத்தலாம்னு யோசிக்கிறப்போ, ஜான் ஹட்ச்ஹின்சன் என்ற மின் காந்த ஆற்றல் நிபுணர் 528Hz கொண்ட இசையின் மூலமா அந்த மொத்த கடல்ல கலந்த எண்ணெயையும் 4 மணி நேரத்துல சுத்தப்படுத்துனதா சொன்னாங்க.

இதுல என்ன முக்கியமான விஷயம் அப்படின்னா, அந்த 528Hz க்கு அவ்வளவு Power இருக்குன்னு சொல்லலாம். 528Hz க்கு நம்ம உடல்ல இருக்குற DNA வை சரிசெய்யக்கூடிய சக்தி இருக்குன்னு சொல்றாங்க. 528Hz அப்படிங்குறது தியானத்திற்கான ஒலி அதிர்வு-னு சொல்றாங்க.

அடையாளத்தை மாற்ற முடியுமா ?

கரஞ்சித் கவுர் அப்டினா யாருனு தெரியுமா? ஆனா நமக்கெல்லாம் இவங்கள சன்னி லியோன் அப்டின்னு சொன்னா தான் தெரியும். அடல்ட் இண்டஸ்ட்ரி மூலமா பிரபலாமான இவங்க, இந்த அடல்ட் இண்டஸ்ட்ரில இருந்து விலகுனத்துக்கு அப்புறமும் அவங்கள போர்ன் ஆக்ட்ரேஸ்ங்கிற கண்ணோட்டத்துல தான் எல்லாரும் பாத்தாங்க. அது ஒரு விதத்தில உறுத்துனாலும் அத எல்லாம் பத்தி கவலை படாம அவங்க வளர்ச்சியை பத்தி மட்டுமே யோசிச்சாங்க. அதுல மட்டுமே அக்கறை செலுத்துனாங்க. பல சர்ச்சைகள் இவங்களுக்கு எதிரா வந்துச்சு…

Continue reading

“6 YEARS OF IRUMBUTHIRAI”

பொதுவா கோடை காலத்துல ரிலீஸ் ஆகுற படங்கள் எல்லாம் A,B,C மூணு சென்டர் ரசிகர்களையும் தியேட்டருக்கு வர வைக்குற குடும்ப படங்கள், காமெடி படங்கள் , குழந்தைகளுக்கு பிடிச்ச கார்டூன் படங்களா தான் இருக்கும். ஆனா 2018- சம்மருக்கு யாரும் எதிர்பாராத ஒரு கதைகளத்தோட, எங்கயும் போர் அடிக்காத திரைக்கதையோட , அட்டகாசமான நடிகர்களோட , மிரட்டலான இசையோட,தியேட்டர்களை நோக்கி ரசிகர்களை வர வச்ச படம் தான் இரும்புத்திரை. நடிகர் விஷாலோட சினிமா பயணத்துல முக்கியமான படங்கள்…

Continue reading

‘GOOD NIGHT’ IS THE BEGINNING OF GOOD LIFE!

நம்ம ஊரு சினிமால இன்னைக்கு ஆக்ஷன், Horror, திரில்லர்-னு எவ்ளோ genre மாறி மாறி வந்து ஹிட் ஆனாலும் என்னைக்கும் தமிழ் சினிமால மவுசு குறையாம எப்போதும் மக்களால கொண்டாடப் படுறது நல்ல குடும்ப காதல் கதைகள் தான். அந்த வகைல காதலுடன் குடும்பத்தோட குட் லைப் பத்தி சொன்ன படம் தான் குட் நைட். 12.05.2023 தமிழ் சினிமால வெளியான காதல், குடும்பம் மற்றும் நகைச்சுவை திரைப்படம் தான் குட் நைட். அறிமுக இயக்குனர் விநாயக்…

Continue reading

மீண்டும் 5 வயது சிறுவனாக மாறிடுவேன் அம்மா! (Mother’s Day)

அழகிய வெண்ணிலவு போல இருட்டில் மெல்லிய ஒளி அம்மா, அவள் பூமியில் பறக்க மாட்டாள், அவளால் தான் இந்த பூமி சற்றே பறந்து கொண்டுள்ளது, ஆயிரம் கவிதைகள் அவளை பற்றி இருப்பினும்… ஓடிக் கொண்டிருக்கும் நதிகளின் தூய்மை போல் அவளை பற்றி எழுத அவ்வளவு இருக்கிறது. அனைத்தும் எழுத இப்பிறவி போதாது. அந்த பால் நிலவாகிய தாயையும், அந்த வெண்மையான தாய்மையையும் வணங்கி வரம் கேட்டேன். அந்த வரம் மீண்டும் ஐந்து வயது சிறுவனாக மாறி, உன்னிடம்…

Continue reading

இந்த பெண் தான் ’செவிலியர் தினம்’ கொண்டாட காரணம்!

குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம், காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் என என எத்தனையோ தினங்கள் கொண்டாடப்படுகின்றது. அது ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். அந்த வகையில் வருடம் தோறும் மே மாதம் 12ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை கொண்டாட வேண்டும் என்று 1953 ஆம் ஆண்டு டாரத்தி சதர்லாந்து என்பவர் அப்போது ஐநா சபையில் செயலாளரிடம் அனுமதி கேட்ட பொழுது அது அப்போது மறுக்கப்பட்டது. பின்னாளில்…

Continue reading

வெந்து தணிந்தது காடு TR-க்கு வாழ்த்துக்களை போடு!

பொதுவாவே நாம ஆல்ரவுண்டர்-ன்ற ஒரு வார்த்தைய cricket ல பயன்படுத்துவோம். ஆனா அதே வார்த்தைய சினிமால பயன்படுத்தினா அது அவருக்கு தான் perfect ah செட் ஆகும். பாடகரா, நடிகரா, இயக்குனரா, நடனக்கலைஞரா, எழுத்தாளரா, தயாரிப்பாளரா இருக்குறவரு தான் இவரு. அடுக்கு மொழி வசனம் பேசறதுல expert இவரு, தங்கச்சி செண்டிமெண்ட்-ல புலியும் இவரு, வேற யாரு நம்ம “T ராஜேந்திரன்” சாரு. அவர் சினிமாக்கு கொடுத்தது ரெண்டு சொத்துக்கள், அவங்க ரெண்டுபேருமே இந்த துறைல முத்துக்கள்,…

Continue reading

இது மாதிரியான ஒலி அதிர்வுகள் நம்முடைய உடம்ப சரி செய்யுது அப்படினும், இதனாலதான் தியானம் பண்ணுறவங்க உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னும் சொல்றாங்க. நீங்க கோவில்ல பஜனை பாடுறதெல்லாம் கேட்டிருப்பீங்க… அதெல்லாம் 432Hz-ல இருக்கும்.

இது நம்மல இந்த உலகத்தோட இயற்கையோட இணைக்கும். இது நம்மளுடைய மனச தூய்மைப்படுத்தும்னு சொல்றாங்க. நம்ம தியானம் பண்ணும்போது கவனிச்சிங்கன்னா Aum, Ham, Om அப்படிங்குற வார்த்தைகளெல்லாம் இந்த ஒலி அதிர்வுலதான் இருக்கும்.

இன்னைக்கும் நிறைய வீட்டுல சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் போன்ற பாட்டை போட்டு கேக்குறதால நம்முடைய உடம்பு சுருசுருப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்குதாம். இந்த மாதிரியான பல விஷயங்கள மூடநம்பிக்கைகளா இருக்கும் அப்படிங்குறத தாண்டி அதுக்குப்பின்னாடி என்ன அறிவியல் இருக்கும்னு கண்டிப்பா யோசிக்கனும். இந்த மாதிரி உங்களுக்கு எதாவது விஷயங்கள் தெரிஞ்சா கமெண்ட் பண்னுங்க.

Article By Smily Vijay