இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பென்குயின். இப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழிலும் தெலுங்கிலும் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் டிரெண்ட் ஆக தொடங்கிவிட்டது. பென்குயின் படத்தின் ட்ரெய்லரை கீழே காணுங்கள்.
திரில்லர் படமான பென்குயின் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தில் நடித்துள்ளதால் அவரின் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாட தயாராக இருக்கின்றனர். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது அடர்ந்த காட்டுப் பகுதியில் தொலைந்துபோன சிறுவனை தேடும் முயற்சியில் கதை நகர்வது போல தெரிகிறது.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை இப்படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது.