Parents-ஆ இருக்கிறது ரொம்பவும் பெரிய கமிட்மென்ட். parents-னு சொன்னதுமே daily காலைல பசங்கள எழுப்பி ஸ்கூலுக்கு அனுப்புறத்துல இருந்து ஈவினிங் அவங்க வந்ததும் தாலாட்டி சீராட்டி தூங்க வைக்கணும், யூ டியூப்-ல இருக்கிற சமையல் program முழுசா பாத்து நல்ல சமைச்சு “இந்த ரெசிபி பசங்க சாப்பிடுவாங்களா?”னு try பண்ணுறதுல இருந்து, சனி-ஞாயிறு என்றாலே outing, shopping, cinema, insta pic – எல்லாத்தையும் balance பண்ணுறது.
அவோலோதா parenting ஆ? இதெல்லாம் எல்லாம் நல்ல விஷயங்கள்தான். ஆனா இது மட்டும் போதுமா? இல்ல! ஒரு நல்ல Parents-ah இருக்க, இன்னும் முக்கியமான விஷயங்கள் இருக்கு. அதில இருந்து முக்கியமான 10 விஷயங்களை தான் இப்போ நாம பாக்கப் போறோம்.
- முதல் விஷயமே உங்க குழந்தைகளுக்கு நீங்க குடுக்கிற நேரம். அவங்க கூட நீங்க நேரம் செலவு செய்யணும். குழந்தைகளோடு quality டைம் செலவு செய்றனால அவங்களுக்கும் உங்களுக்கும் ஒரு understanding கிடைக்கும். இதனால அவங்க உங்ககூட ரொம்பவும் attechment ஆ இருப்பாங்க. குழந்தைக்கு நீங்க கொடுக்கக்கூடிய சூப்பரான Gift – உங்க நேரம் தான்.
- ரெண்டாவதா அவங்க என்ன பன்றாங்க, என்ன சொல்ல வராங்க, அவங்க நடவெடிக்கை வச்சே அவங்களோட mood-ஆ புரிஞ்சுக்கணும். கவலை-ல இருக்காங்களா, பிரச்சனை-ல மாட்டிருக்காங்களா.-னு உங்களுக்கு ஒரு நல்ல understanding வேணும்.
- mutual-ஆ மனம் விட்டு பேசுங்க.. உங்க குழந்தை ஸ்கூல் படிச்சாலும் சரி, காலேஜ் படிச்சாலும் சரி.. அவங்க எந்த விசயத்துல ஆர்வமா இருக்காங்க. அவங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு. home work பண்ணிட்டாங்களா? அவங்க studies எப்படி இருக்கு? இது எல்லாமே உங்களுக்கு தெரியணும். உங்க குழந்தைகள maturity-ஆ டீல் பண்ண தெரியணும். ஓவர் செல்லம்-மு ஆபத்து, ஓவரா அடிக்குறதும் ஆபத்தும்.
- எந்த சூழ்நிலை-லையும் comparission பண்ணதிங்க. உங்க குழந்தையா மத்தவங்க கூட ஒப்பீடு செஞ்சு பேச வேண்டாம். இதனால inferiority complex-னால பாதிக்கப்படுவாங்க. சின்ன வயசுலயே inferiority complex வந்துட்டா அது அவங்களோட confidence-ஆ ரொம்பவே பாதிக்கும்.
- பொறுமையா இருங்க காத்துக்கொடுங்க.. தப்பு பண்ற பசங்கள அடுச்சு திருத்த நினைக்காதீங்க. ஒரு நல்ல parents மாதிரி maturity ஆ deal பண்ணுங்க.. அவங்க அடிக்குறதுக்கு பதிலா பொறுமையா அவங்க பண்ண தப்ப புரிய வைக்க பழங்குங்க. இதனால அவங்களுக்கு நம்பிக்கை வரும். உங்க குழந்தைக்கு ஒரு வயசுக்கு மேல வாழ்றதுக்கு தேவையான விஷயங்கள சொல்லி educate பண்ணுங்க.
- அவங்க மனசுல நினைக்குறத வெளிப்படையா யோசிக்கவும், அத executive பண்றதுக்கான independent (சுதந்திரம்) கொடுங்க. உங்க குழந்தையோட வாழ்க்கை உங்க கட்டுப்பாட்டுல இருக்கனும்-னு நினச்சா அது அவங்க வாழ்க்கைக்கு ரொம்பவும் ஆபத்தானதா மாறிடும். உங்கள தாண்டி அவங்க னால எதனையும் யோசிக்க முடியாது. வெளியுலகத்தை தைரியமா டீல் பண்ண விடுங்க.
- உங்க குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள சொல்லி பழக்குங்க. காலை-ல எதனை மணிக்கு எந்திருக்கலாம், எதனை மணிக்குள்ள தூங்கணும்.. எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கணும். மரியாதையா எப்படி ஒருத்தர் கூட பேசணும்.. இந்த மாதிரியான பழக்கவளத்தை பழக்குங்க. முக்கியமா இந்த மாதிரியான விஷயங்களை நீங்க முத செய்யணும்.. உங்க பாத்துதான் உங்க குழந்தைகள் வளருவங்க. அவங்களுக்கு முன்னுதாரணமா சொல்றது நாம தான்!
- பாராட்டுங்க.. “அருமை”, “சூப்பர்”, “வாவ்! நீங்க செஞ்சது ரொம்ப நல்லா இருக்கு!”
இது மாதிரி சொன்னீங்கன்னா – உங்க பசங்க உற்சாகமா feel பண்ணுவாங்க. இதனால அவங்களுக்கு confidence மட்டும் இல்ல consistency mind செட்-யும் நல்ல இருக்கும். - குடும்ப சூழல் எல்லாத்தையும் சொல்லி வளர்க்க பாருங்க. உங்க கஷ்ட சூழலை மறச்சு உங்க குழந்தைகளை வளர்க்க நினைக்காதீங்க. உங்க குடும்ப சூழல் அவங்களுக்கு கண்டிப்பா தெருஞ்சுருக்கணும். இதனால அவங்க சின்ன வயசுலயே உங்கள புரிஞ்சுகிட்டு உங்களுக்கு support-ஆ இருப்பாங்க.
- உங்க பசங்களோட intrest என்ன? அவங்க intrest-கு future என்ன? இத நீங்க analyse பண்ணனும், அவங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டிய இருக்க உங்கள நீங்க upgrade செஞ்சுக்கணும். ரொம்ப முக்கியமா அவங்களுக்கு நம்ம சட்டங்கள பத்தி சொல்லிகுடுங்க. ஒரு வயசுல ஆர்வக்கோளாறு தனமா அவங்க செய்யுற சின்ன தப்புக்கு எந்த மாதிரியான தண்டனை கிடைக்கும், இதனால அவங்க future என்ன ஆகும்.. இது எல்லாத்தையும் நீங்க guide பண்ணனும். இதனால அவங்க maturity super-ஆ இருக்கும்.
Article By Sakthi Harinath

