Cinema News Specials Stories

5 Years of ராட்சசன்!

ஒரு டைரக்டருக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது அவரோட முதல் படத்தின் வெற்றி, அதைவிட முக்கியமானது இரண்டாவது படத்துல அவர் மேல இருக்கக்கூடிய எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யனும்ன்ற கட்டாயம்… அத ரொம்ப அழகா கையாண்டுருந்தாரு முண்டாசுப்பட்டி படத்தினுடைய இயக்குனர் ராம்குமார்.

இயக்குனர் ராம்குமார் அவரோட இரண்டாவது படம் ராட்சசன்.ஒரு 40 வயசு ஹீரோ அவரோட பொண்ண கொலை செய்யப் போற ஒரு சைக்கோ கொலைகாரன், அவனை அந்த பொண்ணுடைய 40 வயசு போலீஸா இருக்கக்கூடிய அப்பா எப்படி தடுத்து நிறுத்துறாரு, இதுதான் ராட்சசன் படத்தினுடைய முன்னாள் கதை.

அதேசமயம் முதல் படத்துல வெற்றி அடைந்த இயக்குனருடைய அடுத்த படமும் அதே மாதிரி இருக்கும்னுதா பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பாங்க. அந்த பெரும்பாலான எதிர்பார்ப்புக்குள்ள நம்ம சிக்கிடக் கூடாதுனு இயக்குனர் ராம்குமார் ரொம்ப தெளிவா இருந்தாரு.

முதல் படம் முண்டாசுப்பட்டி மாதிரி, இரண்டாவது படம் இருக்கவே கூடாது. அது முற்றிலும் வேறுபட்ட படமா இருக்கணும்னு குறிக்கோளோட செயல்பட்டார். நிறைய உண்மை சம்பவங்கள இந்த கதையில பயன்படுத்திருக்கார், இந்த படத்தினுடைய ஸ்கிரீன் ப்ளேக்காக மட்டுமே இரண்டு வருஷம் செலவிட்டுருக்காரு.

இந்தப் படத்தில் வரக்கூடிய வில்லன் கிறிஸ்டோபர் அவருடைய கேரக்டர், ரஷ்யன் சீரியல் கில்லர் அலெக்சாண்டர் அப்படின்ற ஒருத்தரை Base பண்ணி தான் எழுதி இருக்காரு. அலெக்சாண்டர் அவரோட காதலிய தான் முதல்ல கொலை பண்றாரு. அதுவும் அவங்க அம்மா உதவியோட… அதே மாதிரி தான் ராட்சசன் படத்துலயும் நடக்கும்.

அலெக்ஸாண்டரும் தொடர்ந்து அவங்க அம்மா உதவியோட தான் பல கொலைகளை பண்ணுவாரு. அதே மாதிரி தான் கிறிஸ்டோபர் பண்ணுவார். இவ்வளவு ஆராய்ச்சி பண்ணி பல உண்மை சம்பவங்களை அந்த படத்துல வச்சு ஜெய்-அ ஹீரோவா நடிக்க வைக்கணும்னு ரொம்ப நாள் காத்துட்டு இருந்தாரு.

அப்புறம் அது முடியாது, ரொம்ப நாள் ஆகும்னு சொல்லி விஷ்ணு விஷால இந்த படத்துல நடிக்க அணுகுறாரு. அவரும் ஓகே சொல்றாரு. விஷ்ணு விஷால் இந்த படத்துக்குள்ள வந்ததுக்கு அப்புறம் தான் 40 வயது ஹீரோ ஒரு இளைஞனா மாத்தி சினிமா டைரக்டர் ஆகணும் அப்படின்ற ஒரு கேரக்டரை புதுசா அறிமுகம் பண்றாரு.

சில பல மாற்றங்கள் எல்லாம் அந்த கதையில நடக்குது. அதுக்கப்புறம் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்கிறார். டைரக்சன் எல்லாம் முடிஞ்சு ராட்சசன் அப்படின்ற படத்தோட பெயர் வைக்கலாம் அப்படிங்குறப்போ, அந்த பேருடைய உரிமம் வேற ஒருத்தர்கிட்ட இருக்கு. அப்புறம் சிண்ட்ரல்லா, மின்மினின்ற பெயரை வைக்கலாம்னு முடிவு எடுக்குறாங்க.

இல்ல, இல்ல இதெல்லாம் சூட் ஆகாதுன்னு சொல்லி ராட்சசன் அப்படின்ற அந்த படத்தோட பேரை உரியவர் கிட்ட போயி வாங்கி அதுக்கப்புறம் தான் அந்த படம் ரிலீஸ் ஆகுது. இந்த படத்துல ஒரு காட்சி இருக்கும் விஷ்ணு விஷால் அவரோட ரூம்ல சைக்கோ கில்லர்ஸ் போட்டோஸ் எல்லாம் ஒட்டி வச்சிருப்பாங்க. அது எல்லாமே இந்த உலகத்துல நடந்த ஒரு உண்மையான இன்சிடென்ட்.

டைரக்டர் அசிஸ்டன்ட்ஸ் கிட்ட சொல்லி… சைக்கோ கில்லர்ஸ் போட்டோஸ் & இன்ஃபர்மேஷன கலெக்ட் பண்ணி கொண்டு வாங்கன்னு சொல்லவும், ஒரு மாசமா அவங்க கலெக்ட் பண்ண இமேஜஸ் & டீடைல்ஸ் தான் அந்த ரூம்ல இருக்கும். அந்த கடின உழைப்புக்கான வெற்றி எப்படி இருக்கும்னு ராட்சசன் படத்தோட டைரக்டருக்கு நல்லாவே தெரியும்.

அந்த படம் ரிலீஸ் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு. ஆனால் அந்த படம் ஏற்படுத்தின தாக்கம் இன்னும் குறையவே இல்லனு தான் சொல்லணும். டைரக்டர் ராம்குமாரோட அடுத்த படம் ஆக்சனா இருக்குமா, திரில்லரா இருக்குமா, காமெடியா இருக்குமா,ரொமான்டிக்கா இருக்குமா, இப்படி உங்களுக்குள்ள இருக்க பல கேள்வி எனக்குள்ளேயும் இருக்கு. அதுக்கு நானும் காத்துட்டு இருக்கேன்.

Article By RJ Jo