Cinema News Specials Stories

2 Years of ‘Doctor’

கொரோனாவுக்கு அப்புறம் தியேட்டருக்கு படம் வரும்… ஆனா படம் பார்க்க மக்கள் வருவாங்களா?- ன்னு ஒருபெரிய கேள்வி இருந்தது. அந்த நேரத்துல இந்த கேள்விக்கு பதிலா வந்த படம் தாங்க டாக்டர்.

மக்களை சிரிக்க வைக்கிற படத்த மக்கள் தேடிவந்து பார்ப்பாங்கன்னு எல்லாருக்கும் நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி புரிய வச்ச படம் தான் டாக்டர். சிவகார்த்திகேயன் இந்த படத்துல வழக்கமான துரு துரு பையனா இல்லாம ஒரு ஸ்டிரிக்ட்டான டாக்டரா பொறுப்பான டாக்டரா நடிச்சிருப்பாரு.

இவர் இந்த படத்துல நடிக்க மட்டும் செய்யல, இந்த படத்தை தயாரித்ததும் இவர்தான்… சிவகார்த்திகேயன் கூடவே இந்த படத்துல கொஞ்சம் மக்கான கேரக்டரா இருந்தாலும் மெழுகு பொம்மையா பிரியங்கா மோகன், “நானெல்லாம் வியாபாரம் ஆக மாட்டேனா உனக்கு?”அப்படின்னு கேட்டு குபீர் சிரிப்பு வரவழைக்கிற கிங்ஸ்லி, நான்சிங்க்கா இருந்தாலும் நம்மளை எல்லாம் சிரிக்க வைத்த தீபா, ஒரு கிட்னிக்காக படம் ஃபுல்லா உயிரைப் பணயம் வச்சு ஹீரோக்கு ஹெல்ப் பண்றது மூலமா நம்மள எல்லாம் சிரிக்க வச்ச யோகி பாபுன்னு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்துல இருந்துச்சு.

படத்துல யோகி பாபு ஒரு கேம் விளையாடுவார் பாருங்க, அப்பப்பா அதெல்லாம் மறக்கவே முடியாது… கடைசி சீன்ல அவரை சிலுவையில் அறையும்போது கூட சிரிப்பு வர வைக்கிற மாதிரி ஒரு பிளாக் காமெடி பண்ணுவாரு பாருங்க…வேற லெவல். வைபவோட அண்ணா சுனில் சுமதி அதாவது நம்ம அர்ச்சனாவ காலேஜ் செகண்ட் இயர் படிக்கிற பொண்ணுன்னு நம்பி அவங்க மேல காதல் வயப்பட்டு கடைசியில, “இந்தா பெப்பர் லாஸ்ட் சப்பர் சாப்பிட்டு சாவு” னு, கூட இருக்கிற கிளியே சொல்ற அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்.

Intervel-க்கு முன்னாடி ஒரு Train Fight Scene வருமே அந்த Scene எல்லாம் Life-ல மறக்க முடியாது… Climax ல “முடி மறைக்குதுனா”ன்னு சொல்ற Heroin, “ஓ எரிக்க போறீங்களா”ன்னு கேட்டுட்டு பாட்டு பாடுற Comedian. இப்படி இந்த படத்துல வர ஒன்னு ஒன்னும் Director Nelson ஓட Iconic Dark Comedy Scenes தான்.இந்த படம் 2 வருஷம் தாண்டி மட்டும் இல்ல, இன்னும் இருபது வருஷம் ஆனாலும் நினைக்கும் போதெல்லாம் சிரிக்க மறக்காத ஒரு படமா தான் இருக்கும்.

அனிருத் ஓட கசகசா BGM படத்துக்கு கூடுதல் Plus ன்னு சொல்லலாம். And More Than An Actor & Producer சிவகார்த்திகேயன் ஒரு Lyricist ஆவும் Oh Baby பாட்டுல அவர Prove பண்ணி இருப்பாரு. Overall பாக்க Family Entertainment Movie தாங்க Doctor.

Article by RJ Barathi