Cinema News Stories

5 Years of Super Deluxe

நம்ம தமிழ் சினிமால எத்தனையோ படங்கள் வந்தாலும் இந்த மாதிரியான ஒரு inter-connection movie-ய யாராலையும் எடுக்க முடியாது.இங்க எப்படி கிழக்கு, மேற்கு ,வடக்கு ,தெற்கு அப்டின்னு நாலு திசை இருக்கோ அதேமாதிரி எங்கையோ யாரோ நாலு வெவ்வேறு திசைல இருக்க ஆட்கள் எப்படி ஒரே எடத்துல கடைசிய connect ஆகுறாங்கன்றதுதான் இந்த கதையோட அழகு.

4 கதைய ஒன்னா சேர்க்குறது பெரிய விஷயம் கிடையாது ,அந்த 4 கதைல நடிக்குற எல்லாரும் perfect-டா நடிச்ச மட்டும்தான் இந்த கதை நல்லா வரும் எல்லாருக்கும் புரியும் அப்படிங்கிறது இந்த படத்தோட Director ஆன தியாகராஜன் குமாரராஜாக்கு நல்லாவே தெரியும். ஒரு ஒருத்தரா யோசிச்சு யோசிச்சு கதைக்கு suit ஆகுற மாதிரி actor & actress-ச முடிவு பண்ணுறாரு.பாதி பேர் கதைய கேட்ட உடனே சரி சொல்றாங்க சில பேரு கஷ்டம்னு சொல்றாங்க.

இந்த படத்துல மக்கள் செல்வன் விஐய் சேதுபதி,பகத் பாசில், மிஷ்கின்,சமந்தா,ரம்யா கிருஷ்ணன்,காயத்ரி,மிர்னாலினி ரவி,பகவதி பெருமாள், அஸ்வந்த், அசோக் குமார்,நோபில் கே ஜேம்ஸ் இப்படின்னு எக்கச்செக்கமானவங்க நடிக்குறாங்க. சமந்தா இந்த படத்துல நடிக்குறதுக்கு முன்னாடி நிறையா ஹீரோயின்ஸ் இந்த கதை முடியாது, எங்க acting carrierக்கு problem ஆகும்னு சொல்லிட்டாங்க.

சில ஹீரோயின்ஸ் 2 நாள் Time குடுங்கன்னு கேப்பாங்க ஆனா அதுக்கு அப்புறம் reply பண்ணமாட்டாங்க.Super Deluxe படத்துக்கு முன்னாடி வரைக்கும் சமந்தா நடிச்ச ஒரு படம் கூட பார்த்தது இல்லையாம் டைரக்டர் தியாகராஜன் குமாரராஜா.சமந்தானு ஒரு ஹீரோயின் நல்லா நடிப்பாங்கனு கேள்விபட்டிருக்காரு.ஒரு நாள் சமந்தா கிட்ட first phone-ல தான் தியாகராஜன் குமாரராஜா கதை சொல்லாறாரு.சமந்தா நேர்ல வர சொல்லி கதை கேக்குறாங்க.

கதை கேட்ட உடனே இவங்களும் 2 days time கேக்குறாங்க.தியாகராஜன் குமாரராஜா சிரிச்சிட்டே சரின்னு சொல்லிட்டு கெளம்பிட்டாரு.அவருக்கு நல்லா தெரியும் 2 நாள் அப்டின்னு சொன்னாலே அவளோதான்னு.ஆனா இங்கு scene-னே வேற சமந்தா நடிக்க ஓகே சொல்லிட்டாங்க.

எல்லாம் set ஆயிடுச்சு, story ஓகே actor actress ஓகே… முதல் கட்ட படப்பிடிப்பு விஐய் சேதுபதி வச்சி start பண்ணுறாங்க. மொதல ஒரு 6 நாள் shoot போகுது தியாகராஜன் குமாரராஜாக்கு ஒரே குழப்பம்.எப்படி எடுக்குறது?எப்படி 4 கதைய சேக்குறது?mind full blank!!!நேரா விஐய் சேதுபதிட போய் இத சொல்லறாரு.விஐய் சேதுபதி உடனே ஒன்னும் இல்ல நல்லா யோசிச்சு plan பண்ணுங்க பண்ணிக்களாம்னு சொல்லுறாரு,shooting stop ஆகுது.

தியாகராஜன் குமாரராஜா நல்லா time எடுத்து plan பண்ணி again shoot start பண்ணுறாரு.இந்த time எல்லாமே பக்கா.விஐய் சேதுபதி இந்த படத்துல ஒரு நடிகரா இல்லாம ஒரு திருநங்கை எப்படி நடந்துபாங்களோ அதே மாதிரி வாழ்ந்திருப்பாரு.சில shot-லாம் தியாகராஜன் குமாரராஜா சொல்லுறப்ப இத இப்படி பண்ணலாம்னு விஐய் சேதுபதி சொல்லுவாராம்.இதுல இருந்து தெரியுது விஐய் சேதுபதி ஒரு character-க்கு எவ்வளோ importance கொடுக்குறாருனு.

இவருக்கு ஜோடியா நடிச்ச காயத்திரியும் ஒரு மனைவியா தன்னோட கணவன் திருநங்கையா மாறிட்டாங்கனு நெனச்சி ரொம்ப அழுகுறதும், அதுக்கு அப்புறம் இதுதான் நிஜம்னு ஏத்துக்கிறத ரொம்ப அழகா நடிச்சு காமிச்சிருப்பாங்க. அஸ்வந்த் அசோக் குமார் விஐய் சேதுபதியோட பையனா ராசுக்குட்டி அப்டிங்குற role-ல நடிச்சிர்க்பாரு.துரு துருன்னு ஒரு குட்டி பையன் எப்படி இருப்பானோ அந்த மாதிரி ஒரு பையன்தான் ராசுக்குட்டி. ரொம்ப cute-டா அந்த character பண்ணிட்டாரு அஸ்வன்த் அசோக் குமார்.

பகத் பாசில் நடிப்புக்கு பேர் போனவருனு எல்லாருக்குமே தெரியும்.Shooting spot-ல பிச்சி பெடல் எடுக்குறாரு..தியாகராஜன் குமாரராஜாக்கு பகத் பாசில் வெச்சி எடுக்குற scene-லாம் ரொம்ப சுலபம்மா இருக்கு.இவருக்கு equal-லா சமந்தாவும் ரொம்ப நல்லா நடிச்சிருப்பாங்க.கடைசி நாள் shoot அப்போ அந்த shooting set-டே மிரண்டு போற அளவுக்கு சமந்தா வேற லெவல் act பண்ணிருப்பாங்க.

இந்த படத்துல மிஷ்கின் ரம்யா கிருஷ்ணன் ஓட pair ரொம்ப வித்யாசமானது.ஒரு scene-ல ரம்யா கிருஷ்ணன் மிஷ்கின் கன்னத்துல அரையுறமாதிரி வரும்.அந்த scene ரொம்ப perfect-டா வரணும்னு மிஷ்கின் ஒரு 80 வாட்டி அரைவாங்கிருக்காறு. அப்புறம் நோன்பில் கே ஜேம்ஸ் ஒவரோட friends எல்லாம் சேர்ந்து பண்ணுர fun அந்த time-ல அங்க ஒரு alien-னா மிர்னாலினி ரவி வருவாங்க இதெல்லாம் இந்த படத்த next level-க்கு கொண்டு போச்சு.

ஒரு படத்துக்கு actor,actress, director எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு music director ரொம்ப ரொம்ப முக்கியம்.இந்த படத்துல வர 4 கதையும் வேற வேற Zone-ல இருக்குறதுனால 4 கதைக்குமே Ultimate-டா different-டா மியூசிக் பண்ணியிருக்காறு. 5 வருஷம் ஆகியும் Super Deluxe படத்த பத்தி பேசுறோம்னா இந்த படத்துல நடிச்ச எல்லா actors,actress-ம் சூப்பரா நடிச்சிர்காங்க ,Director நல்லா படம் எடுத்திருக்காரு,Music director வேற லெவல்ல மியூசிக் compose பண்ணியிருக்காரு இப்படி எல்லாரும் தான் காரணம்.

Article by RJ Barath