Cinema News Stories

மனதை மயக்கும் இனிமையான குரல் பிறந்தநாள்

மனதை மயக்கும் இனிமையான குரலுக்கு சொந்தமான Singer Sujatha Mohan-க்கு எங்களோட மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். எப்படி ஆரம்பிக்குறது… சரி அவங்க சாதனைகளை சொல்லியே ஆரம்பிக்குறேன். 20,000 பாடால்களுக்கு மேல பாடியிருக்காங்க. அதோட பல விருதுகளும் வாங்கிருக்காங்க.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தினு பல மொழி திரைப்படங்கள்ல பாடிருக்காங்க . மெல்லிசையின் ராணினு இவங்களுக்கு இன்னொரு பெயர் இருக்கு. 6 வயசுல ஜேசுதாஸ் அவர்களோட ஒரு மேடையில பாட ஆரம்பிச்சி அவங்க பயணத்தை ஆரம்பிச்சுருக்காங்க. 1975 ஆம் வருஷத்துல வெளிவந்த “Tourist Bangalo” மலையாள படத்துல அறிமுகமானாங்க அப்போ அவங்களுக்கு 10 வயசு.

ஆமா ரொம்ப கம்மியான வயசுல அவங்க பாட்டு பயணத்த தொடங்கினாங்க. 12 ஆம் வயசுல இசைஞானி இசையில வெளிவந்த கவிக்குயில் அப்டின்ற படத்துல பாடி தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிக்கு அறிமுகமானாங்க. தமிழ்ல இவங்க முதல்ல பாடின “காதல் ஓவியம் கண்டேன்” அப்படின்ற பாடல் அந்த படத்துல இடம் பெறல.

ஆனா அந்த பாட்டு Srilanka-ல நல்ல ஹிட் கொடுத்துச்சு. அந்த பாட்டுக்கு அப்பறமா சுஜாதா அவர்கள “காதல் ஓவியம் சுஜாதா”-னு அடைமொழி குடுத்து அழைக்க ஆரம்பிச்சாங்க. AR Rahman Music ல வந்த ரோஜா படத்துல பாடின புது வெள்ளை மழை, காதல் ரோஜாவே பாட்டு மூலமா புகழின் உச்சிய தொட்டாங்க. அதுக்கு அப்பறம் நிறைய நிறைய பாடல்கள் பாடிருக்காங்க.

எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்துச்சு. தமிழ் ரசிகர்கள் மனசுல நீங்காத இடத்தை புடிச்சுருக்காங்க. 2019-ல பாடகி சுசீலா அம்மா கையால சுஜாதா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுருக்கு. அனைவராலும் ஈர்க்கப்பட்ட குரலுக்கு சொந்தமான பாடகி சுஜாதா மோகன் அவர்களுக்கு இயதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்றும் உங்கள் குரலை சுவாசிப்பதில் பெருமிதம் கொள்கிறது சூரியன் பண்பலை.

Article by RJ Saranya