Cinema News Stories

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்- Haricharan turns 37!!

நிறைய பாட்டு நமக்கு கேட்க ரொம்ப பிடிக்கும் அப்படிகிறத தாண்டி.. நம்ப மண்டைக்குள்ள ஓட ஆரம்பிச்சுரும்.. ஒரு நாள் முழுக்க கூட முணுமுணுத்துட்டே இருப்போம். அந்த மாதிரி பாடல்கள குடுக்குறதுல ஹரிச்சரண் அவர்களுக்கு-ன்னு தனி ஒரு இடமே இருக்கு.

ஸ்கூல் முடிச்சிட்டு சன் மியூசிக்-ல பாட்டு கேக்குறதுக்காகவே குடு குடு-ன்னு ஓடி வருவோம். ஒரு புது படம் பாடல் ரொம்ப புடிச்சுருச்சுன்னா ஸ்கூல் நோட்ல பின் பக்கம் எழுதி வெச்சு பாடிட்டே இருப்போம். அந்த வகைல துளி துளி பாடல், அரபு நாடே அசந்து நிற்கும் பாடல்-ன்னு நிறைய பாடல் சொல்லிட்டே போகலாம்.

பிறக்கும் போதே இசை வரம் பெற்று இசை குடும்பத்துல பிறந்த ஹரிச்சரண் (Haricharan Seshadri) அவர்கள் சென்னைல 1987-ல பிறந்தார். சின்ன வயசுல இருந்தே கன்னத்தில் முத்தமிட்டால், One two ka four போன்ற படங்களுக்கு Child chores artist-அ பாட ஆரம்பிச்ச அவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள்ல பின்னணி பாடகரா நிறைய அசத்தலான பாடல்கள் குடுத்துட்டு இருக்காரு.

‘உனக்கென இருப்பேன்’-ன்ற அவரோட முதல் பாடல் காதல் திரை படத்துல வெளி வந்துச்சு… 17 வயசுல அவர் பாடின இந்த பாடல் தேசிய திரைப்பட விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுச்சு. திரைப்பட பாடல், Album song-ன்னு 2000-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல் குடுத்துருக்காரு ஹரிச்சரண் அவர்கள்.

2015-ல சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது மலையாளத்துல வந்த பெங்களூர் நாட்கள் படத்திற்காகவும், 2016-ல சிறந்த பின்னணி பாடகருக்கான IIFA உத்ஸவம் விருது – ஆண் – தெலுங்கு – பாகுபலி படத்திற்காகவும், 2017-ல சிறந்த பின்னணி பாடகருக்கான IIFA உத்ஸவம் விருது – ஆண் – தெலுங்கு – கிருஷ்ணகடி வீர பிரேமகதா படத்திற்காகவும் இவருக்கு வழங்கப்பட்டுருக்கு.

‘உனக்கென இருப்பேன்’ பாட்டு-ல ஆரம்பிச்சு சமீபத்துல வெளி வந்த ‘kannil orithiri neram’-ன்ற மலையாளம் திரைப்பட பாடல் வரைக்கும் எல்லாமே மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்களாவே அமைஞ்சுருக்கு. இவ்ளோ இசை ஹிட்ஸ் குடுத்த இசை மனிதர்க்கு SURYAN FM சார்பாக “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்”.

Article by RJ Nandhu