Cinema News Stories

“எல்லா சூழலுக்கும் பொருந்தும் ஸ்ரேயா கோஷல்”

“உருகுதே மருகுதே” பாடல் வரிக்கு ஏத்த மாதிரி தன்னுடைய குரல் மூலமா ஒவ்வொரு மனசையும் உருக வச்சவங்க தான் ஸ்ரேயா கோஷல். ஸ்ரேயா கோஷலோட முதல் தமிழ் பாடல் 2002 ஆம் ஆண்டு வெளியான ஆல்பம் படத்துல வந்த “செல்லமே செல்லம்” பாடல் தான். ஹம்மிங் கொடுத்துட்டே ஸ்ரேயா கோஷல் பாடுன இந்த பாட்டு ரசிகர்களோட ஃபேவரட்.

இசைஞானி இளையராஜா இசைல சொல்ல மறந்த கதையில் வந்த “குண்டு மல்லி” பாடல் மூலமா யாருப்பா இந்த குரலுக்கு சொந்தக்காரங்க அப்படின்னு கேட்குற அளவுக்கு இசை ரசிகர்கள் மனசுல இசை பேரரசியா இடம் பிடிச்சாங்க. தன்னோட 4 வயசுல பாட ஆரம்பிச்ச ஸ்ரேயா கோஷல், ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமா இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் தாய்க்கு அறிமுகமானங்க. அதுக்கு அப்பறம் இவங்களுக்கு பன்சாலி ஓட தேவ்தாஸ் படத்தில் சான்ஸ் கிடைச்சது.

இந்த படத்துக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது, பிலிம் பேர் விருது, சிறந்த பெண் பின்னணி பாடகி விருதுன்னு பல விருதுகள் கிடைச்சுது. அமெரிக்கா ஓட ஒஹியோ மாநில கவர்னர் 2010 ஆம் ஆண்டு ஜீன் 26 ஆம் தேதிய ஸ்ரேயா கோஷல் தினமாக அறிவிச்சாரு. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 100 பிரபலமான இந்தியர்கள் பட்டியல்ல 5 முறை ஸ்ரேயா கோஷல் இடம் பிடிச்சுருக்காங்க.

அது மட்டுமா மெழுகு சிலை வைக்கப்பட்ட முதல் இந்திய பாடகி ஸ்ரேயா கோஷல் தான்.
வாழ்க்கைல நம்ம கடந்து வரக்கூடிய ஒவ்வொரு சூழ்நிலையிலும் இவங்க குரலும் நம்மோட சேர்ந்து பயணிக்கும்..

காதலர்களுக்குள்ள சண்டையா
மன்னிப்பாயா… மன்னிப்பாயா….,

Love ok ஆயிடுச்சா… அப்போ
சொல்லிட்டேனே இவ காதல….,

காதலர்களுக்கு
முன்பே வா… என் அன்பே வா…., கண்ண காட்டு போதும் நிழலாக நானும் வாரேன்…, பிடிக்குதே… திரும்ப திரும்ப உன்னை…, தேன் தேன் தேன்… உனை தேடி அலைந்தேன்….
சிவந்தேன்…. தாவணி போட்ட தீபாவளி… வந்தது ஏன் வீட்டுக்கு…., கள்வரே…. கள்வரே….
கண்கொண்டு காணீரோ….. ஏன் ஆள பாக்கப்போறேன்…

காதல்ல தோல்வி அடைஞ்சவங்களுக்கு,
நினைத்து நினைத்து பார்த்தால்… நெருங்கி அருகில் வருவேன்….,

சந்தோஷமான தருணத்துக்கு
நாரே… நாரே… நன்னன்நாரே நாரே… நன்னாரே…,

இப்படி எல்லா தருணங்களுக்கும் ஸ்ரேயா கோஷல் குரல், இசை மருந்தா இருக்கும். ஒருமுறையாவது இவங்களோட குரல ரசிக்காதவங்க நம்ம தமிழ்நாட்டுல இருக்கவே முடியாது. ஸ்ரேயா கோஷல் குரல் மீது ரசிகர்கள் மட்டுமில்ல அந்த இசையும் காதல் கொள்ளும். அப்படியான மாயக்குரலுக்கு சொந்தமான ஸ்ரேயா கோஷலுக்கு சூரியன் பண்பலையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

Article by RJ Vigi