Cinema News Stories

காலங்கள் கடந்தும்……… கடந்து போகா காதல்!

பொதுவா ரீமேக் படம் என்றாலே எதிர்பார்ப்புகள் மலையின் உச்சத்தை தொட்டு விடும். படம் எப்படி இருக்கும்? Screen play  எப்படி இருக்கும்-னு. Kollywood, sandalwood Journalல ரீமேக் படம் நிறைய பார்த்து இருக்கோம் ஆனா இந்த திரைப்படம் hallyuwood(Korean Cinema) ல இருந்து MY DEAR DESPERADO – ன்ற படத்தின் உரிமை வாங்கி ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம்.

நலன் குமார் + விஜய் சேதுபதி காம்பினேஷன் முன்னாடியே சூது கவ்வும் படத்துல ஹிட் கொடுத்துச்சு. அதை தொடர்ந்து இரண்டாவது காம்போவுமான “காதலும் கடந்து போகும்” ஹிட்டா அமைந்தது. நலன் குமார் அவர்களோட இயக்கத்துல விஜய் சேதுபதி, மடோனா, சமுத்திரக்கனி அவர்கள் நடித்த காமெடி கலந்த காதல் திரைப்படம்.

ஆசை, கனவு என்பது எல்லாருக்கும் பொதுவானது, ஆனா ஒரு ஒருத்தருக்கும் வேறு படும்.. படிச்சு முடிச்ச ஒடனே வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறும் பெண்… இந்த பக்கம் சொந்தமா Bar வைக்கணும்னு ஆசையோட இருக்க பையன்.. அவங்க ரெண்டு பெரும் விதியினால எப்படி சந்திக்கிறாங்க? எதிர்பாரத விதமா நம்ப வாழ்க்கை-ல ஒருத்தர, அதுவும் நம்ப பக்கத்துக்கு வீட்டுலையே பார்த்தா.. என்ன விஷியம் எல்லாம் கடந்து வருவோம் என்கிறதை எதார்த்தமாக காட்டி இருப்பாரு இயக்குனர் நலன் குமார் அவர்கள்.

ரவுடின்னு சொன்னாலே கொஞ்சம் அச்சமா இருக்கும் இருக்கும்… அவங்க தோற்றம் நடை உடை பாவனைன்னு எல்லாமே ஒரு பயத்தை குடுக்கும். ஆனா இந்த படத்துல விஜய் சேதுபதி அவர்கள் ரொம்ப கருணை உள்ள ரவுடியாய் இருப்பாரு … அவரை சுத்தி இருக்கவங்க எல்லாம் நல்லா இருக்கனும் -னு நினைக்குற ரவுடி… அடியே வாங்குனாலும் வெளிய வரும் பொழுது கெத்தா தான் இருக்கனும் -னு நினைக்கின்ற மாதிரி இருப்பாரு.

மடோனா அவர்களோட முதல் தமிழ் படமா “காதலும் கடந்து போகும்” அமைந்தது. THE GIRL NEXT-DOOR என்றத்துக்கு ஏற்ற மாதிரியே அவங்க ட்ரெஸ்ஸிங், ஆக்ட்டிங், பேசுற விதம்-னு எல்லாமே அமைந்து இருக்கும். இந்த படத்தோட கடைசில இரண்டு வருஷத்துக்கு அப்புறம் இரண்டு பெரும் பார்க்கிறாங்க என்கிறதை தாண்டி… VJS  திருந்திட்டாரு ன்ற சந்தோஷம் மடோனா கிட்ட…. மடோனா இந்த நிலைமை-ல இருக்காங்க என்கிற ஒரு வியப்பு… கலந்த அந்த சிரிப்போடு முடிச்சு இருப்பாரு நலன் அவர்கள்.

இப்போ இருக்க எல்லாருக்கும் காதல் சார்ந்த படம்-னா ரொம்ப பிடிக்கும் காதல் உடன் இளமை அதுகூட கொஞ்சம் கலாட்டா சேர்ந்த இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 8 வருடங்கள் ஆகிறது. நலன் குமார் அவர்கள் இது போன்று நிறைய படங்கள் கொடுக்கணும்-னு SURYAN FM சார்பாக வாழ்த்துகிறோம்.

Article BY RJ Nandhu