Cinema News Stories

தன்னம்பிக்கை நாயகன் ‘STR’

Simbu aka STR latest stills
Simbu aka STR latest stills

T.ராஜேந்திரன் பன்முகத் திறமை கொண்டவர்… இயக்குனர், எடிட்டர், வசனகர்த்தா, இசைஅமைப்பாளர், ஒளிப்பதிவாளர், நடனஇயக்குனர், நடிகர் இது போன்ற பல திறமைகள் இவருக்கு உண்டு. இப்படிப்பட்ட புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

தன் தந்தையின் திறமைக்கு சற்றும் சளைத்தவர் இல்லை என நிரூபிக்கும் வகையில் திரைத்துறையில் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் சிம்பு என்கிற சிலம்பரசன் என்கிற STR…. பிப்ரவரி 03, 1983-ல் பிறந்து, சிறு வயதில் இருந்து சினிமா மீது தீரா காதல் கொண்ட சிம்பு அவர்கள் தன்னுடைய முயற்சியின் மூலமாய் திறமையின் மூலமாய், பட்டிதொட்டி எங்கும் ரசிகர் மனதில் ஆழமாய் நிலைத்திருக்கிறார்.

இவர் தந்தை இயக்கிய பல படங்களில் குணச்சித்திர நடிகராக மற்றும் பல பாடல்களில் நடனமாடிய சிம்பு அவர்கள், 2002-ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை படத்தின் மூலமாய் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு தம், அலை, கோவில், குத்து என வரிசையாக திரைப்படங்களில் நடித்து இளைஞர்கள் மனதில் அசைக்க முடியாத கதாநாயகனாய் இடம்பிடித்தார்.

2004-ஆம் ஆண்டு மன்மதன் படத்தில் ஒரு இயக்குனராய் அறிமுகம் ஆனார் சிம்பு அவர்கள். அதன் பிறகு தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், விண்ணைத் தாண்டி வருவாயா இன்னும் சொல்லி கொண்டே போகலாம் இவரின் வெற்றி படங்களை. நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து மக்கள் மனதிலும் ரசிகர்கள் மனதிலும் நீங்கா வண்ணமாய் ஜொலித்தார் சிம்பு.

விரல் வித்தைக்காரர் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரான சிம்பு தன் வாழ்வில் பல தருணங்களில் பல தடைகளை சந்தித்தாலும் அவற்றையும் தாண்டி இன்றும் திரையுலகில் வெற்றி நாயகனாக உலா வருகிறார் என்றால் அதற்கு அவரின் தன்னம்பிக்கையும், விடா முயற்சியுமே காரணம்… தன்னம்பிக்கை நாயகனுக்கு இன்னும் பல வெற்றிகள் வாழ்வில் வசமாக மனமார வாழ்த்துகிறது சூரியன் FM.

Article By ர.சதீஷ்