சாமானியன் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை தங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான தருணங்களையும், தங்களது அழகான புகைப்படங்களையும் பகிரும் ஒரு பறந்து விரிந்த சமூக வலைதளம் தான் இன்ஸ்டாகிராம்.
கோலிவுட் சினிமா நட்சத்திரங்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் தங்களுக்கென தனி கணக்கை தொடங்கி தினசரி Update-களை கொடுத்து ரசிகர்களை குஷிப் படுத்தி வருகின்றனர். இவர்கள் வரிசையில் தற்போது ஜெயம் ரவி-யும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய ஒரே நாளில் ஜெயம் ரவிக்கு 50000-ற்கும் மேற்பட்ட followers குவிந்து வருகின்றனர். தனது முதல் இன்ஸ்டாகிராம் post ஆக தன் குடும்பத்துடன் எடுத்த Selfie புகைப்படம் ஒன்றை ஜெயம் ரவி பகிர்ந்துள்ளார். இப்பதிவில் அவரது மனைவி ஆர்த்தி ரவி மற்றும் அவரது இரு அழகிய மகன்கள் இடம்பெற்றுள்ளனர். ரவியின் முதல் இன்ஸ்டா பதிவை கீழே காணுங்கள்.
ஜெயம் ரவியின் இன்ஸ்டா வருகையை நேற்றே அவரது மனைவி தனது இன்ஸ்டா பக்கத்தின் Story-ல் அறிவித்திருந்தார். அந்த story-ல் “ஜெயம் ரவியை ஒருவழியாக இன்ஸ்டாவிற்கு வர வைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, இது அவரது ரசிகர்களை மகிழ்விக்கவே தொடங்கப்பட்டுள்ள கணக்கு” என குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே ஆர்த்தி ரவி அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து எடுத்து பகிர்ந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவியின் இன்ஸ்டா வருகையை அவரது ரசிகர்களுடன் இணைந்து சூரியன் FM-ம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.