Cinema News Stories

யானைகளை காக்கும் “காடன்” !!!

பிரபு சாலமனின் இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடித்துள்ள “காடன்” திரைப்படத்தின் டிரைலர் Youtube-ல் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது. காட்டில் வாழும் யானைகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரபு சாலமன் யானைகளை மையமாக வைத்து எடுத்த ‘கும்கி’ திரைப்படம் மக்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக அமைந்தது. மீண்டும் யானைகள் பற்றிய கதையை இவர் இயக்குவதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இந்த வருடத்தில் வெளிவரும் முதல் மும்மொழி (trilingual) படம் “காடன்” என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால், பாலிவுட் நடிகைகள் ஜோயா ஹுசைன் மற்றும் ஷரியா பில்கோன்கர், சம்பத் ராம், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். காட்டில் வாழும் யானைகளுக்கு எதிராக நடக்கும் அரசியலையும், அதை காப்பாற்ற துடிக்கும் மலை வாழ் மக்களையும் சார்ந்து இப்படத்தின் கதை அமைந்திருக்கும் என்பதை டிரைலர்-ஐ வைத்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்படத்திற்கு பாலிவுட் இசையமைப்பாளரான “சாந்தனு மொய்த்ரா” அவர்களே மூன்று மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னரே இப்படத்தின் படப்பிடிப்பு தள வீடியோக்கள் மற்றும் “தாலாட்டு பாடும்” Single பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தெலுங்குவில் “ஆரண்யா” என்றும் இந்தியில் “ஹாத்தி மேரே சாத்தி” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்துள்ளதாகவும், இப்படத்தில் நடிக்கும் போது யானைகளை பற்றி பல அரிய விஷயங்களை பிரபு சாலமனிடம் தான் கேட்டறிந்ததாகவும் விஷ்ணு விஷால் டிரைலர் வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.

பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள “காடன்” திரைப்படம் வருகிற மார்ச் 26-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படம் வெளியாகும் அதே நாளில் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. சினிமா ரசிகர்களுக்கு உற்சாகமான நாளாக மார்ச் 26 அமையும் என எதிர்பார்க்கலாம்.

காடன் திரைப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படத்தின் தமிழ் டிரைலர்-ஐ கீழே காணுங்கள்.