Cinema News Stories

‘மாஃபியா’ – Sneak Peek

துருவங்கள் பதினாறு வெற்றிப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் மாஃபியா. இப்படத்தில் அருண்விஜய், பிரஸன்னா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

அருண் விஜய் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்து 25 வருடங்கள் ஆகிய நிலையில் அவரது ரசிகர்கள் இப்படத்தை ஆரவாரமாக வரவேற்பதற்கு தயாராகி வருகின்றனர்.

லைக்கா Productions தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இப்படம் கடத்தல் கும்பலுக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் யுத்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது போல தெரிகிறது.

கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு திரைப்படம் எதிர்ப்பார்ப்பிற்கு மேல் வெற்றியை அவருக்கு பெற்றுத்தந்தது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இப்படத்தின் Sneak Peek வெளிவந்துள்ளது.