ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் நான்காவது Single பாடலான ‘தில்லாலங்கடி லேடி’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் மூன்று பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது.
சிவகுமாரின் சபதம் திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக புதுமுக நாயகி மதுரி நடித்துள்ளார். இப்படத்திற்கு கதையின் நாயகனான ஹிப்ஹாப் ஆதி அவர்களே இசையமைத்துள்ளார்.
பொதுவாக ஹிப்ஹாப் ஆதியின் இசையில் வெளிவரும் பாடல்கள் அனைத்தும் டிரெண்டிங் பட்டியலில் வந்துவிடும். அந்த வகையில் இப்படத்தில் இருந்து வெளியான சிவகுமார் பொண்டாட்டி, பாகுபலிக்கு ஒரு கட்டப்பா, நெருப்பாய் இருப்பான் ஆகிய பாடல்கள் அனைத்துமே Youtube-ல் டிரெண்டிங் பட்டியலில் இடம்பெற்றது. குறிப்பாக சிவகுமார் பொண்டாட்டி பாடல் Youtube-ல் 45 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
இன்று வெளியாகியுள்ள தில்லாலங்கடி லேடி பாடலுக்கு வரிகளையும் ஹிப்ஹாப் ஆதியே எழுதியுள்ளார். காதலிக்கும் பெண்ணிடம் குறும்பு செய்யும் ஒரு காதலன் பாடும் பாடலாக தில்லாலங்கடி பாடல் அமைந்துள்ளது. இப்படத்தில் இருந்து வெளியான பாடல்களை வைத்துப் பார்க்கும்போது ‘சிவகுமாரின் சபதம்’ காமெடி கலந்த ஒரு மசாலா திரைப்படமாக இருக்கும் என கணிக்க முடிகிறது.
இப்பாடல் வெளியான சில நிமிடங்களில் இருந்தே ஆதியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இப்பாடலை கொண்டாடி வருகின்றனர். சிவகுமாரின் சபதம் திரைப்படம் வெற்றி அடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தில்லாலங்கடி லேடி பாடலின் Lyric வீடியோவை கீழே காணுங்கள்.