Cinema News Stories

ட்விட்டரை ஆக்கிரமிக்கும் விஜய் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய்.

விஜயின் 49வது பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி வரவுள்ள நிலையில் ரசிகர்கள் ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்தே ட்விட்டர் ட்ரெண்டிங் செய்யத் தொடங்கிவிட்டனர்.

அந்த வரிசையில் இன்று #AdvHBDDearThalapathyVijay ஹேஷ்டேக் ட்விட்டரை ஆக்கிரமித்துள்ளது.

சரியாக இன்னும் பிறந்தநாளுக்கு 10 நாட்கள் உள்ள நிலையில் 10 days to go என பிறந்தநாள் ஹேஷ்டேகை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் லியோ படத்தின் முக்கியமான அப்டேட் விஜய் பிறந்தநாளன்று வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் மிக ஆர்வமாக உள்ளனர்.

அதுமட்டுமின்றி வெங்கட் பிரபு இயக்கவுள்ள விஜயின் அடுத்த படம் குறித்த அப்டேட்டும் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் லியோ படம் வெளியான பிறகு தான் அடுத்த படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என வெங்கட் பிரபு சமீபத்தில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.