Cinema News Stories

வுட்றாதீங்க யப்போவ் பாடலின் வீடியோ

கர்ணன் திரைப்படத்தின் வுட்றாதீங்க யப்போவ் பாடலின் வீடியோ Youtube-ல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் Climax-க்கு முன் இப்பாடல் ஊர் மக்களின் எழுச்சிப் பாடலாக இடம்பெற்றிருக்கும்.

கர்ணன் திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையில் அமைந்த அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் வுட்றாதீங்க யப்போவ் பாடலும் வெளியான நாள் முதலே ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர்ஹிட் பாடலாக அமைந்தது. இப்பாடலுக்கு பாடகி தீயின் குரல் உயிர் கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

தங்களது உரிமையை காக்க போராட்ட களத்தில் குதிக்கவிருக்கும் மக்களின் மனநிலையை எடுத்துரைக்கும் வகையில் இப்பாடலின் வரிகள் அமைந்திருக்கும். கர்ணன் திரைப்படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் அவர்களே இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். இப்பாடலின் Lyric வீடியோ ஏற்கனவே Youtube-ல் 60 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பாடலின் வீடியோவில் தங்களை எதிர்நோக்கி வரவிருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க மக்கள் தங்களை தயார் செய்து கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். திரையில் ரசிகர்களுக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்திய வுட்றாதீங்க யப்போவ் பாடல், இனி Youtube-ல் பார்ப்பவர்களுக்கும் புது வித எழுச்சி உணர்வை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வுட்றாதீங்க யப்போவ் பாடலின் வீடியோவை கீழே காணுங்கள்.

Tags