Specials Stories

இது மூடநம்பிக்கை இல்ல அறிவியல்!

நம்ம எவ்வளவோ விஷயங்கள, மூட நம்பிக்கைப்பா இது… அப்படின்னு சொல்லிருப்போம். ஆனா அது மூட நம்பிக்கை இல்ல அதுக்கு பின்னாடி ஒரு பெரிய அறிவியலே இருக்குன்னு சொன்னா எவ்வளவு ஆச்சரியமா இருக்கும். அப்படி ஒரு விஷயத்ததான் இப்ப நாம பாக்க போறோம்.

நம்ம பழைய சாமி படங்கள்ல கவனிச்சிங்கன்னா Climax Scene-ல ஹீரோக்கு உடம்பு சரி இல்லாமா எந்திரிக்க முடியாத அளவுக்கு போயிடும். அந்த Hero சாவ கூடாதுங்கறதுக்காக Heroine சாமி முன்னாடி பாட்டு பாடுவாங்க, கடைசில அந்த ஹீரோவும் உயிர் பொழச்சிடுவாங்க.

அதெப்படி சாத்தியமாகும்? கேக்கவே சிரிப்பா இருக்குல, ஏன் நிறைய பேர் யாகம் பண்ணுவாங்க, அதிக பிராத்தனைகள் நடக்கும், இதோட முடிவுல அவங்க அந்த நோய்ல இருந்து தப்பிச்சுடுவாங்க. இதெல்லாம் உண்மையா அப்படின்னா? கண்டிப்பா உண்மைதான்.

நம்மளுடைய உடல்நிலையோ, மனநிலையோ சரி இல்லைன்னா ஒரு பாட்டு கேக்கனும்னு தோணும், அந்த பாட்ட கேட்ட உடனே அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரியான மன நிலைக்கு நம்மளும் மாறிடுவோம். இதெல்லாம் எப்படி நடக்குதுன்னு கவனிச்சிங்களா? இதுக்குப் பின்னாடி எவ்வளவு பெரிய விஞ்ஞானம் இருக்குனு தெரியுமா?

2010, Mexico வளைகுடாவில் நடந்த எண்ணெய் விபத்துல பில்லியன் கணக்கான லிட்டர் Oil கடல்ல கலந்துடுச்சு. அதை எப்படி சுத்தப்படுத்தலாம்னு யோசிக்கிறப்போ, ஜான் ஹட்ச்ஹின்சன் என்ற மின் காந்த ஆற்றல் நிபுணர் 528Hz கொண்ட இசையின் மூலமா அந்த மொத்த கடல்ல கலந்த எண்ணெயையும் 4 மணி நேரத்துல சுத்தப்படுத்துனதா சொன்னாங்க.

இதுல என்ன முக்கியமான விஷயம் அப்படின்னா, அந்த 528Hz க்கு அவ்வளவு Power இருக்குன்னு சொல்லலாம். 528Hz க்கு நம்ம உடல்ல இருக்குற DNA வை சரிசெய்யக்கூடிய சக்தி இருக்குன்னு சொல்றாங்க. 528Hz அப்படிங்குறது தியானத்திற்கான ஒலி அதிர்வு-னு சொல்றாங்க.

Madhan Karky: பாடலாசிரியர் மதன் கார்க்கி பிறந்தநாள்

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ…’, ‘பூம் பூம் ரோபோடா..’ என முதல் படத்திலேயே தனக்கு கிடைத்த வாய்ப்பை வெகு சிறப்பாக பயன்படுத்தி தனிப்பெரும் சாம்ராஜ்யத்திற்கு அடித்தளம் அமைத்தார்.ஒரு பாடலின் வெற்றி என்பது அதன் இசை தீர்மானிக்கும் என்றாலும் அதன் உயிர் நாடியாக இருப்பது பாடல் வரிகளே என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. அந்த வகையில் பல கவிஞர்களைக் கண்ட தமிழ் சினிமாவுக்குள் ஒரு நிபுணராக புது வித ரசனையோடு தனக்கென ஒரு தனி முத்திரையோடு அடி எடுத்து…

Continue reading

பிம்பங்களின் கவிஞன்: செல்வராகவன் எனும் காட்சிமொழி மேதை

திரைப்படம் என்பது வெறும் கதையைச் சொல்லும் ஊடகமல்ல; அது ஒரு உணர்வை கடத்தும் கருவி என்பதைத் தமிழ் சினிமாவில் உரக்கச் சொன்னவர் செல்வராகவன். ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் அவர் எடுத்துக்கொள்ளும் நீண்ட இடைவெளி, அவரது ரசிகர்களைச் சோர்வடையச் செய்வதில்லை. மாறாக, அந்த இடைவெளி ஒரு தவம் போல அவரது அடுத்த படைப்புக்கான எதிர்பார்ப்பை “கல்ட்” (Cult) அந்தஸ்திற்கு உயர்த்துகிறது. Selvaraghavan Birthday Special Article 2026 ஒளியால் எழுதப்பட்ட உணர்வுகள் சினிமா விமர்சகர்கள் கொண்டாடும் ‘காட்சிமொழி’…

Continue reading

Shankar Mahadevan: இனிமையான இசை குரலுக்கு பிறந்தநாள்

இனிமையான இசைகளை ரசிக்க காதுகள் வேணும். அதே இனிமையான இசைகளோட சேர்ந்து அருமையான பாடல்களை நமக்கு கொடுக்கணும்னா, கண்டிப்பா அதுக்கு சங்கர் மகாதேவன் குரல் வேணும் அப்படின்னு தான் சொல்லணும். இவர் சிங்கர் மட்டும் கிடையாது. பாடகர், இசையமைப்பாளர், இசை பயிற்சியாளர்னு பன்முகத் தன்மை கொண்டவர் . இவரோட பேர சொன்னவுடனே, இவர் பாடுன பல பாடல்கள் இப்போ உங்க காதுக்குள்ளே ஒலிச்சுக்கிட்டு இருக்கும்னு நினைக்கிறேன். அந்த ஏரியா, இந்த ஏரியா, அந்த இடம், இந்த இடம்னு…

Continue reading

செந்தமிழை வளர்க்கும் கொங்குதமிழன் ஹிப்பாப் ஆதி

இன்னைக்கு இருக்க கூடிய இளைஞர்களுக்கு இசை மீதான ஆர்வமும், ரசனையும் இதுக்கு முன்னாடி இருந்த தலைமுறைய விட வித்தியாசமா இருக்குனுதான் சொல்லுனும். மெலோடி பாட்டு ,குத்து பாட்டு , கர்நாடக சங்கீதம் இப்படிப்பட்ட இசையை கேட்டு வளர்ந்துவங்க நம்ம பெற்றார்கள்.அடுத்த தலைமுறை இந்த இசையோட சேர்த்து கானா, Rap கேட்டு வளர்ந்தோம். ஆனா இப்போ Rap,Jazz, Western, K POP, Hiphopனு “இசை” தமிழ் சினிமால அடுத்த பரிமாணத்துக்கே போச்சுனு சொல்லலாம். அப்படி HIPHOP இசைய தன்னோட…

Continue reading

HIP HOP ஆதி

நமது திறமைகளை வெளிக்கொணர நமக்கென ஒரு மேடையை உருவாக்க தொழில்நுட்பம் கொடுத்த ஒரு வாய்ப்பு தான் சமூக ஊடகம். CONTENT CREATERS , STORY TELLERS, INFLUENCERS , என பலரும் புகழின் உச்சிக்கு செல்ல ஒரு பாதையாக இருந்த YOUTUBE சமூக ஊடகம் வழியே INDEPENDENT MUSICIANS தங்கள் கனவுகளை அடைய ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தவர். WESTERN CLASSIC-களில் அதிகம் பழகிய ரசிகர்களுக்கு பாப் இசையையும் ரசித்து கொண்டாடவைத்தவர்களில் இவரும் ஒருவர். தமிழ் இசை உலகில்…

Continue reading

சிவகார்த்திகேயன் – நம்ம வீட்டு பிள்ளை

இன்னைக்கு தமிழ் சினிமாவுல “நம்ம வீட்டு பிள்ளை”ன்னு சொன்னா எல்லாருக்கும் முதல்ல ஞாபகத்துக்கு வர்ற பேர் அப்படின்னா அது கண்டிப்பா நடிகர் சிவகார்த்திகேயனா தான் இருக்கும் . ரொம்ப சாதாரண பின்னணியிலிருந்து வந்து, முழுக்க முழுக்க தன்னோட உழைப்பால இவ்வளவு பெரிய உச்சத்துக்கு வந்த, உழைப்பால் உயர்ந்த மனிதர். சினிமாவுக்குள் வர்றதுக்கு முன்னாடி, ஒரு தனியார் தொலைக்காட்சியில ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில பார்ட்டிசிபேட் பண்ணி இருந்தாரு. சரியான டைமிங் காமெடி, பேச்சு ஸ்டைல் இது எல்லாமே மக்களோட…

Continue reading

இது மாதிரியான ஒலி அதிர்வுகள் நம்முடைய உடம்ப சரி செய்யுது அப்படினும், இதனாலதான் தியானம் பண்ணுறவங்க உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னும் சொல்றாங்க. நீங்க கோவில்ல பஜனை பாடுறதெல்லாம் கேட்டிருப்பீங்க… அதெல்லாம் 432Hz-ல இருக்கும்.

இது நம்மல இந்த உலகத்தோட இயற்கையோட இணைக்கும். இது நம்மளுடைய மனச தூய்மைப்படுத்தும்னு சொல்றாங்க. நம்ம தியானம் பண்ணும்போது கவனிச்சிங்கன்னா Aum, Ham, Om அப்படிங்குற வார்த்தைகளெல்லாம் இந்த ஒலி அதிர்வுலதான் இருக்கும்.

இன்னைக்கும் நிறைய வீட்டுல சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் போன்ற பாட்டை போட்டு கேக்குறதால நம்முடைய உடம்பு சுருசுருப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்குதாம். இந்த மாதிரியான பல விஷயங்கள மூடநம்பிக்கைகளா இருக்கும் அப்படிங்குறத தாண்டி அதுக்குப்பின்னாடி என்ன அறிவியல் இருக்கும்னு கண்டிப்பா யோசிக்கனும். இந்த மாதிரி உங்களுக்கு எதாவது விஷயங்கள் தெரிஞ்சா கமெண்ட் பண்னுங்க.

Article By Smily Vijay

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.