மதுரையில இருந்து வந்து வைகைபுயலா தமிழ் சினிமால வடிவேல் அண்ணன் எப்படி நகைச்சுவை புயலா ஒரு கலக்கு கலக்குனாரோ, அது போலவே நானும் “மதுரைக்காரன்தான்டானு ” இப்போ தமிழ் சினிமால காமெடி புயலா கலக்கிட்டு இருக்கவர் தான் நம்ம சூரி அண்ணன்.
தமிழ் சினிமால பலருக்கு பலவிதமான அடைமொழிகள் இருக்கும். சிலருக்கு அவங்க செஞ்ச கேரக்டர் பெயர், ஒரு சிலருக்கு அவங்களோட முதல் சினிமா பெயர் (எ.கா: நிழல்கள் ரவி, ஜெயம் ரவி) , பலருக்கு மக்களே தந்த பட்டங்கள் (தல, தளபதி), ஆனா நம்ம சூரிக்கு அடைமொழி தந்தது அவரோட படமோ, கேரக்டரோ இல்ல அவரு சாப்பிட்ட பரோட்டா…
இதுல வேடிக்கையான விஷயம் என்னென்னா நம்ம சூரிக்கு பரோட்டாவே பிடிக்காது… அதனால தான் என்னவோ அந்த பரோட்டாவே அவருக்கு அடையாளமாகிடுச்சு…
சூரி கூட பிறந்தவங்க 5 பேரு.. மதுரைல ரொம்ப ஏழ்மையான குடும்பம் தான் , அந்த ஏழ்மைய மாத்தனும்னு சூரி சின்ன வயசுலயே முடிவெடுத்துட்டாரு, அதனாலயே படிப்ப பாதிலயே விட்டுட்டு சென்னைக்கு போனா சினிமால நடிச்சு நல்லா சம்பாதிக்கலாம்னு முடிவெடுத்து வந்தாரு.
வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு முன்னாடியே தமிழ் சினிமால சாதிக்கனும்னு 13வருஷம் கஷ்டப்பட்டு
கிடைக்குற சின்ன சின்ன ரோல்கள்ல நடிச்சும் இருக்காரு, அப்படி அவர் பண்ணின சில படங்கள் தான் காதல், வின்னர்.
சினிமால 13வருஷமா இருக்கோம் இன்னும் நமக்கு நல்ல ரோல் கிடைக்கலையேனு காத்துக்கிட்டு இருந்த சூரிக்கு அவரோட வாழ்க்கையவே மாத்துற மாதிரி டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்துல வந்த வெண்ணிலா கபடிக்குழு படம் அமைந்தது. அந்த படத்துல வந்த பரோட்டா காமெடி உலக அளவுல இருக்க கூடிய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நம்ம சூரிய அறிமுகப்படுத்துச்சு.
அதுக்கப்புறம் கிராமத்து படங்களா காமெடிக்கு சூரிய புக் பண்ணுங்க, சிட்டி கதையா அதுக்கும் சூரிய புக் பண்ணுங்கனு, 2009ல இருந்து இப்ப வரை டைரக்டர்களுக்கு முதல் choice நம்ம சூரி தான். சிவகார்த்திகேயன், விமல் , விஜய் சேதுபதி-னு 2009ல இருந்து வளர்ந்த வந்த நடிகர்களோட படங்கள்ல நகைச்சுவை நடிகரா இருந்த நம்ம சூரிக்கு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கேடிபில்லா கில்லாடி ரங்கா மாதிரியான படங்கள் மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்துச்சு.
அதுக்கப்பறம் தமிழ் சினிமாவோட இரு துருவமா இருக்க நம்ம தல, தளபதியோட படங்கள்ல நடிச்சு இப்ப
உச்ச காமெடி நடிகரா இருக்காரு. சினிமால காமெடியும் தாண்டி நல்ல கேரக்டர் ரோல் கொடுத்தாலும் அதுலயும் சூரி தன்னோட முழு திறமைய காட்டுவாரு. அதுதான் சூரியை இப்போ வெற்றிமாறனோட “விடுதலை” படத்துல கதாநாயகனா மாத்தியிருக்கு.
வெண்ணிலா கபடிக்குழு-ல தன்னோட காமெடியால காந்தம் போல ரசிகர்களை கவர்ந்த சூரி, இப்போ தமிழ் சினிமாவோட ஒரே Superstar ரஜினிகாந்த் கூட “அண்ணாத்த” படம் பண்ணிட்டு இருக்காரு.
- Parvathy Stuns in New Photoshoot: A Look at the Indian Actress’s Beauty
- Happy Birthday to the Master of Realism: Vetrimaaran
- Bollywood actress Deepika Padukone baby bump pregnancy photoshoot
- இசைஞானியின் இசை வாரிசு!
- வித்தியாசமான த்ரில்லர் கதை “பிளாக்”
தன்னோட அப்பாக்கிட்ட இருந்து கத்துக்கிட்ட நகைச்சுவை மூலமா இப்ப சினிமால துணை நடிகர், காமெடி நடிகர், கதாநாயகன்னு பல அவதாரங்கள் எடுத்திருக்க நம்ம சூரி இன்னும் சினிமால பல உயரங்களை அடைய சூரியன் FMன் வாழ்த்துக்கள்.
Article by RJ Srini