Specials Stories

11 Years of ‘Kumki’

அனிமல் மாதிரி படம் பண்ணிடலாம், ஆனா அனிமல் வச்சு இந்த மாதிரி ஒரு படம் பண்ணுறது கஷ்டம். நடிகர் திலகம் பேரன், இளைய திலகம் பையன், இவர் அறிமுகம் ஆகிற இந்த படம் சும்மா அனல் பறக்கிற Punch Dialogues, Colour Colour ஆன Costumes, 100 பேர அடிச்சு பறக்க விடுற சண்டைனு எதுவுமே இல்லாம நல்ல ஒரு தரமான படத்துல அறிமுகம் ஆனார் விக்ரம் பிரபு.

இதுவே இந்த படத்துக்கு முதல் Plus. ஆமாங்க கும்கி படம் Release ஆகி 11 வருஷம் ஆகிடுச்சு, 14th December 2012 Release ஆன இந்த படத்துல, யாரும் எதிர்பாத்திருக்க மாட்டாங்க… படத்தோட Opening இப்படி இருக்கும் Climax இப்படி இருக்கும்னு. கும்கி படம் என்ன Genre? சும்மா ஒன்னு ரெண்டுனு சொல்ல முடியாதுங்க, இந்த படம் ஒரு Musical, Adventure, Romantic, Drama film. கும்கி யானை மாணிக்கத்துக்கும், யானை பாகன் பொம்மனுக்குமான பாசப் பயணமே படத்தோட ஆரம்பம். சம்மந்தமே இல்லாம பொம்மன் தன் நண்பருக்காக, கோவில் யானையை கும்கி யானையா, யானை மாறாட்டம் செஞ்சு மலை கிராமத்துக்கு கூட்டி போக, அங்க என்ன ஆகுது? அப்டிங்குறதுதான் படம்.

ஆரம்பத்துல இருந்து, தம்பி ராமைய்யா மற்றும் படத்துல வர சில கதாபாத்திரங்களோட Comedy வேற Level-ல இருக்கும். Love Portion, Songs-னு, Super-ஆ போயிட்டு இருக்குற கும்கி படம், Second Half வந்தவுடனே, எப்பிடிடா இந்த படத்தை முடிக்க போறாங்க’னு யோசிக்க ஆரமிச்சுருப்போம். படத்தோட வில்லனா வர கொம்பன் யானை, ஆரம்பத்துல ஒரு Scene, அப்புறம் Climax-ல ஒரு Scene அவ்ளோதான்… ஆனா மிரட்டியிருக்கும்.

படம் முடியும் போது, கடைசில என்னையே அழ வச்சுடீங்களேடானு, கணத்த இதயத்தோடு வந்துருப்போம், அதுதான் படத்தோட இயக்குனர் Prabhu Solomon Touch. ஒரு படம் Hit ஆக கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், முக்கியம். ஆனா, கும்கில Extra வா கதைக்களம், இடம், ஒளிப்பதிவு, இசை, பாடல் வரிகள்னு List பெருசாகிட்டே போகும். உங்களுக்கு கும்கி படத்துல பிடிச்ச விஷயம் என்ன? சொய் சொய் பாட்டா, விக்ரம் பிரபு நடிப்பா, லட்சுமி மேனன் அழகா, படத்தோட கண்கவரும் ஒளிப்பதிவா? எது பிடிக்கும்னு மறக்காம சொல்லுங்க.

Article by RJ Joe