Cinema News Specials Stories

சரவணன் சிவக்குமார் என்னும் Rolex..!

Legendary Actor சிவக்குமார் மகன், அதனால சினிமா வாய்ப்பு ரொம்ப எளிமையா கிடைச்சுருக்கும்னு நினைக்கலாம்.

ஆனா உண்மையில என்னதா பெரிய ஹீரோவோட பையனா இருந்தாலும் ரொம்ப சாதாரணமான வாழ்க்கை முறையை வாழ்ந்தவர் சூர்யா. பெரிய தொழிலதிபர் ஆகனும்னு ஆசைகளோட பி.காம் படிச்சாரு, படிச்சு முடிச்சதும் ஒரு கம்பெனில ₹8000 சம்பளத்துக்கு வேலைக்கும் போறாரு. இயக்குனர் வசந்த் 1995-ல மணிரத்னம் தயாரிப்புல படம் நடிங்கனு கேட்க, ஐயோ..! நடிப்பா..? -னு மறுத்துட்டாரு சூர்யா. அதுதான் அஜித், சுவலட்சுமி நடிச்சு 1995-ல வெளிவந்த “ஆசை” திரைப்படம்.

சரி நடிக்கதா மாட்டீங்க… எங்களுக்கு ஒரு போட்டோ ஷூட் பண்ணிதாங்கனு இயக்குனர் மணிரத்னம் கேட்க, மறுக்காம ஒத்துக்கிட்டார் சூர்யா. அப்போதான் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் 1997-ல தளபதி விஜய் கூட சேர்ந்து “நேருக்கு நேர்” திரைப்படத்துல நடிச்சார்.

அதுக்கு அப்புறம் நிறைய படங்கள் இருந்தும் பெருசா பேர் வாங்கி குடுக்கல. 2001-ல இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான ‘நந்தா’ படம்தா சூர்யாக்கு திருப்புமுனையா அமைஞ்சுது. வணிக ரீதியான வெற்றி பெற்ற திரைப்படம் 2003-ல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘காக்க காக்க’. போலீஸ்னா இப்படித்தா இருக்கனும்னு நல்ல வரவேற்பு கிடைத்த படம். அதுக்கு அப்புறம் தொட்டதெல்லாம் ஜெயம்தான்.

இப்படித்தான் சூர்யா சினிமா துறையில தடம் பதிச்சார். சும்மா அப்பா பேர மட்டும் வச்சுக்கிட்டு வரலை. 2006-ல சூர்யா அகரம் அறக்கட்டளையைத் தொடங்கினார், தமிழ்நாட்டுல பள்ளிப்படிப்பை ஆரம்பத்திலேயே நிறுத்தும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக இந்த அறக்கட்டளை ஆரம்பிச்சு நல்லபடியா நடத்திட்டும் வரார்.

ஆரம்பகாலத்துல பல அவமானங்களை கடந்து, சமூக அக்கறை கொண்டு, தன் துறையில் சிறந்து விளங்கும் நடிகர் சூர்யா சிவக்குமாருக்கு சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Article By Rj Meenu