Specials Stories

ஆடி மாசம் பத்தின இந்த விஷயங்கள்லாம் உங்களுக்கு தெரியுமா?

ஆடி மாசம் எவ்வளவு சிறப்பான மாசம் தெரியுமா? வாங்க சொல்றேன். இந்த விஷயங்கள்லாம் உங்களுக்கு தெரியுமானு பாருங்க.

ஆடி மாசத்துல புண்ணிய காலம் தொடங்குறதாவும், ஆடி மாசம் சக்தி மாசம் அப்படின்னும் ஜோசியத்த வச்சு நம்ம முன்னோர்கள் கணிச்சு வச்சிருக்காங்க. ஆடி மாசத்துல தான் நல்ல மழை பெஞ்சு ஆத்துல புது வெள்ளம் வரும். ஊரே செழிப்பா இருக்கும். இத தான் ஆடிப்பெருக்குனு சொல்லுவாங்க. அந்த சமயத்துல கன்னிப் பெண்கள் நல்ல வரன் அமையனும்னு வேண்டிப்பாங்க. கல்யாணம் ஆனவங்க தீர்க்க சுமங்கலியா இருக்கனும்னு புதுத் தாலி மாத்துவாங்க.

அதனால விதை விதைக்குறத ஆடி மாசத்துல பண்ணிருக்காங்க. ஆடி மாசத்துல வரக்கூடிய சூரியக் கதிர்கள் விவசாயத்துக்கு நல்லதா இருக்கும் அப்படின்னும் சொல்லியிருக்காங்க. ஆடி மாசத்துல விதை விதைக்குறதால அந்த காலத்துல மக்கள் கைல இருக்க காசு செலவாயிடும். அதனால அந்த மாசத்துல பொருட்கள் எல்லாம் தள்ளுபடி விலைல கொடுக்க ஆரமிச்சாங்க. அப்படி உருவானது தான் ஆடித்தள்ளுபடி.

ஆடி மாசத்துல தான் நம்ம ஊர்ல இருக்க காவல் தெய்வங்களான அம்மன் , அய்யனார், மாடசாமி கோயில்கள்ல திருவிழா கொண்டாடுவாங்க. கூழ் ஊத்துவாங்க. ஊர் கூடி படையல் வைப்பாங்க. ஆடி மாசத்துல சேலம் மாவட்டத்துல மட்டுமே நடக்கக் கூடிய சிறப்பான ஒரு விஷயம் இருக்கு. அது என்னனா ஆடி 18 க்கு தேங்காய் சுட்டு சாப்டுவாங்க. அந்த தேங்காய் சாப்டாதவங்க ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமா இருக்கும்.

ஆடி மாசம் யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க. கல்யாணம் ஆனவங்களையும் பிரிச்சு வச்சுருவாங்க. அதுக்கு ஆன்மிகத்துல நிறைய காரணங்கள் சொன்னாலும் உண்மையான காரணம் என்னனா… ஆடி மாசம் தாம்பத்ய உறவுல இருந்தா சித்திரை மாசம் குழந்தை பிறக்கும். சித்திரை மாசத்துல வெயில் ரொம்ப அதிகமா இருக்கும், அது குழந்தைக்கு ஒத்துக்காது. அதனால தான் ஆடி மாசம் ஜோடிகள பிரிச்சு வைக்குறாங்க.

இது மாதிரி இன்னும் பல சிறப்புகள் ஆடி மாசத்துக்கு இருக்கு.