Specials Stories

நாம் இதுவரை அறிந்திடாத கடல் வாழ் உயிரினங்கள்!

உலகத்திலிருந்து ஆகாயத்தையும் தாண்டி விண்வெளியில் நெடுந்தூரம் பயணித்து பல்வேறு கிரகங்களில் மனிதர்கள் தடம் பதித்து விட்டார்கள். ஆனால் கடலின் ஆழம் என்பது இன்றும் மனித குலத்திற்கு ஆச்சரியமானதாகவும் அமானுஷ்யமாகவும் இருந்து வருகிறது.

உலகின் முதல் உயிரினம் உருவான இடமே கடல் தான் என்பது வியக்கத்தக்க உண்மை. அத்தகைய கடலில் இன்னமும் மனித இனம் பார்த்திடாத வித்தியாசமான பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் சில உயிரினங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

  1. Glaucus Atlanticus என்பது ஒரு வகை நத்தை இனம் ஆகும். இவை கடலின் மேற்பரப்பில் வாழ்கிறது. ஜெல்லிமீன் போன்று இவையும் சினிடேரியன்களை சாப்பிட்டு உயிர் வாழ்கிறது.
i call him the pokemon slug (or Glaucus Atlanticus) : r/pics

இவை விஷ ஜந்துக்களை உண்பதால் அவையும் விஷமுள்ளதாகிறது. இந்த விசித்திரமான விலங்கு 3 முதல் 5 செமீ நீளம் வளரும். இது சூடான ஆஸ்திரேலிய, ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க கடல் பகுதிகளுக்கு சொந்தமானது.

  1. பார்ப்பதற்கு புழு மற்றும் Squid எனப்படும் கணவாய் மீன் இரண்டும் கலந்தது போன்று காட்சியளிப்பதால் இந்த கடல் உயிரினம் Squid Worm என்று அழைக்கப்படுகிறது.

கலிபோர்னியாவில் உள்ள Woods Hole Oceanographic Institution மற்றும் The Scripps Institution ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இது ஒரு மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

Flamboyant" New Squid Worm Surprises, Delights Experts

உண்மையில் இந்த ஸ்க்விட் புழு இனத்தில் உள்ள ஒரே உயிரினம் இது மட்டுனே. ஏனெனில் இதே போன்ற குணாதிசயங்களைக் கொண்ட வேறு எந்த மாதிரியும் இதுவரை கண்டறியப்படவில்லை.

  1. The Axolotl : ஆக்சோலோட் எனும் இந்த மீன் மெக்ஸிகோ ஏரிகளிலிருந்து கண்டறியப்பட்டது. 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பான தி மாஸ்க்டு சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஆக்சோலோட் மக்களிடையே பிரபலமானது. இவை குறிப்பிட்ட வெப்பநிலையில் மட்டுமே வாழக்கூடியது.
Axolotl | San Diego Zoo Animals & Plants

அழிவின் விளம்பில் இருந்து மீட்கப்பட்ட உயிரினமாக இது உள்ளது. புழுக்களை விரும்பி உண்ணக் கூடியது. அழிவிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் தற்போது வளர்ப்பு உயிரினமாக உலகளவில் பரவலாக வளர்க்கப்பட்டு வருகிறது.

  1. Platypus எனப்படும் அழகான இந்த உயிரினம் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டது. நீரிலும் நிலத்திலும் வாழக் கூடியது.
Baby Platypus: 5 Puggle Pictures and 5 Facts - AZ Animals

விசித்திரம் என்னவென்றால் பாலூட்டி இனத்தை சேர்ந்த இவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. Harry Potter பிறப்பதற்கு முந்தைய காலத்தில் நடக்கும் கதையான Fantastic Beasts திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் இந்த பிளாட்டிபஸ் உயிரினம் வலம் வரும்.

  1. Sea Dragon : இவை ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டவை. 35 செமீ முதல் 14 இன்ச் வரையிலான நீளம் கொண்டது.
Hope for weedy sea dragon future following rare breeding success in  captivity | St George & Sutherland Shire Leader | St George, NSW

சாதரண மற்றும் இலை கடல் டிராகன் என 2 வகைகள் இதில் உள்ளன. இலை கடல் டிராகன் அதன் இலை வடிவ இணைப்புகளை உருவத்தை மறைப்பதற்காக பயன்படுத்துகிறது. இது கடல் குதிரையுடன் தொடர்புடைய கடல் மீன் ஆகும்.

  1. Spooky Fish – பயமுறுத்தும் மீன்

Barrel போன்ற வடிவத்திலான கண்களை கொண்டிருப்பதால் இவை Barreleye Fish எனவும் அழைக்கப்படுகிறது.

Barreleye Fish: One Of The Most Bizarre Fish Among Deep-Sea Creatures

இந்த மீனின் தலையில் உள்ள உள் உறுப்புகளை நாம் சாதாரணமாகவே காணலாம். இவை ஆழ்கடலின் இருட்டில் வெகு தொலைவில் வாழ்ந்து வருகிறது.

  1. Dumbo Octopuses : டம்போ ஆக்டோபஸ்கள் கடலின் ஆழத்தில் வாழும் ஆக்டோபஸ் இனங்களாகக் கருதப்படுகின்றன. இவை கடல் தளத்தில் அல்லது அதற்கு 3000 முதல் 4000 மீட்டர் ஆழத்தில் தென்படுகின்றன.
Dumbo Octopus - Oceana

டம்போ ஆக்டோபஸின் தலையில் உள்ள காது போன்ற துடுப்புகள் டிஸ்னி கதாபாத்திரமான டம்போ எனும் பறக்கும் யானையின் காதுகளை ஒத்திருக்கிறது. இதனால் இவை டம்போ ஆக்டோபஸ்கள் என அழைக்கப்படுகின்றன.

இன்னும் இது போன்ற நாம் அறிந்திடாத பல உயிரினங்கள் கடல் எனும் அதிசயத்திற்குள் மறைந்துள்ளன.