Specials Stories

உங்களை சிரிக்க வைக்க வருகிறது “எங்க காமெடி வேற மாதிரி” !!!

“வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்று கூறுவதை போல மக்களை மகிழ்ச்சி கடலில் குளிக்க வைக்க சூரியன் FM எடுத்திருக்கும் புதிய முயற்சி “எங்க காமெடி வேற மாதிரி”. சமூக வலைதளங்களின் மூலமாக சூரியன் டிஜிட்டல் மக்களை சிரிக்க வைக்க தயாராகி விட்டது.

தங்களது தனித்துவமான நகைச்சுவை ஆற்றலால் தொலைக்காட்சி மூலம் மக்களை சிரிக்க வைத்த பிரபல நகைச்சுவை கலைஞர்கள் முல்லை மற்றும் கோதண்டம் இணைந்து சமூக வலைதளங்களில் மக்களை சிரிக்க வைக்க சூரியன் டிஜிட்டல் உடன் கைகோர்த்துள்ளனர். தினசரி வாழ்வில் இருக்கும் பிரச்சனைகளை மறந்து வாய்விட்டு சிரிக்க, இனி மக்கள் அணுக வேண்டியது “எங்க காமெடி வேற மாதிரி” Series-ஐ தான்.

வரும் வெள்ளிக்கிழமை சூரியன் டிஜிட்டலின் Facebook, YouTube, Instagram, Twitter மற்றும் ஷேர் சாட் பக்கங்களில் “எங்க காமெடி வேற மாதிரி” நிகழ்ச்சியின் முதல் Episode வெளியாகும். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு இந்நிகழ்ச்சி வெளியாகும்.

இந்த Series-க்கென பிரத்தியேகமாக முல்லை மற்றும் கோதண்டம் மக்களை சிரிக்க வைக்க எண்ணற்ற நகைச்சுவை Concept-களை தயார் செய்து மக்களை மகிழ்விக்க முயற்சி செய்துள்ளனர். “எங்க காமெடி வேற மாதிரி” நிகழ்ச்சிக்கு மக்களாகிய நீங்கள் கொடுக்கப்போகும் ஆதரவு எங்களை மேலும் புதுப்புது Episode-களை தயாரிக்க ஊக்குவிக்கும்.

வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் முதல் Episode-ல் ஒரு கிரிக்கெட் வீரருக்கும் தொகுப்பாளருக்கும் இடையே நடக்கும் நேர்காணலை மையப்படுத்தி நகைச்சுவையான Episode உருவாக்கப்பட்டுள்ளது.

“எங்க காமெடி வேற மாதிரி” Series-ன் Promo வீடியோவை கீழே காணுங்கள்.

இனி சூரியன் Digital-ஐ பாருங்க , வாய் விட்டு சிரிங்க !!!