Specials Stories

யார் இந்த கேதர் ஜாதவ்?

கிரிக்கெட் அப்படிங்கறது இந்தியாவ பொருத்தவரைக்கும் ஒரு unofficial தேசிய விளையாட்டு. சின்ன பசங்கல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே கிரிக்கெட் அப்படின்றது ரொம்ப பிடிக்கும். அப்படி இருக்கும் போது நாம கிரிக்கெட் விளையாடுற விதத்தை ஒரு சில பிளேயர்ஸ் ஓட ஒப்பிட்டு பார்க்கிறது வழக்கமா இருக்கு.

உதாரணத்துக்கு ஒருத்தர் ரொம்ப நல்லா பேட்டிங் விளையாண்டார் அப்படின்னா சச்சின் மாதிரி விளையாடுறாரு விராட் கோலி மாதிரி விளையாடுறாரு அப்படின்னு சொல்லுவாங்க. அதுவே அவர் அதிரடியா விளையாடினா அவர் தோனி மாதிரி அதிரடியாக விளையாடுறார் அப்படின்னு சொல்லுவாங்க. அதுவே ஒரு பிளேயர் ரொம்ப பொறுமையா அதிகமா பால் புடிச்சு கம்மியா ரன் அடிச்சா இவர் என்ன கேதர் ஜாதவ் மாதிரி விளையாடுறார் அப்படின்னு கடந்த சில ஆண்டுகள் எல்லாரும் கிண்டல் பண்ணாங்க.

யார் இந்த கேதர் ஜாதவ்? இப்படி கிண்டல் பண்ற அளவுக்கு உண்மையாலுமே ஒரு மோசமான பிளேயரா? தெரிஞ்சுக்கலாம். 1985 வது வருஷம் மார்ச் 26ஆம் தேதி மகாராஷ்டிரால பிறந்தாரு கேதர் ஜாதவ். சின்ன வயசுல இருந்தே கிரிக்கெட் மேல ரொம்ப ஆர்வமா இருந்த இவரு தன்னுடைய Carrier-அ டென்னிஸ் பால்ல ஆரம்பிச்சாரு.

அதுல சிறப்பா விளையாண்டு அப்படியே மகாராஷ்டிரா அணிக்காக விளையாடினார். அப்புறம் கடுமையா முயற்சி பண்ணி வருஷ வருஷம் நடக்குற இந்த டி20-ல டெல்லி அணிக்காக முதல்ல விளையாண்டாரு, அதுல வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் சிறப்பா விளையாட இவருக்கு அடுத்ததா கொச்சி அணில வாய்ப்பு கிடைச்சுது.

அப்புறம் மறுபடியும் டெல்லி அணியில தன்னுடைய கிரிக்கெட் பயணத்த தொடர்ந்தார். இவருடைய சிறப்பான ஆட்டம் மூலமா இவருக்கு இந்திய அணியில வாய்ப்பு கிடைச்சுது. இந்திய அணிக்காக விளையாடின இவரு ரெண்டு சதமும் ஆறு அரை சதமும் அடிச்சிருக்காரு. கஷ்ட காலம் அப்படின்றது எல்லாருக்குமே கண்டிப்பா வரும். அது இவருக்கும் வந்துச்சு.

கிரிக்கெட்ல தன்னோட ஃபார்ம்-அ இழந்து தவிச்சாரு. ஒவ்வொரு அணிக்கா மாறினாரு. ஒவ்வொரு அணியிலயும் இவரோட பேட்டிங் சுமாரா தான் இருந்துச்சு. ஆனா இருந்தாலும் இவர் தன்னோட முழு பங்களிப்ப அந்த அணிக்காக கொடுத்திருக்கார். 2018 டி20 டோர்னமெண்ட் முதல் மேட்ச்ல மும்பைக்கு எதிரா சென்னை அணிய ஜெயிக்க வச்சவர் இவர் தான்.

இந்த மாதிரி நிறைய மேட்ச் அவர் விளையாட்டு Win பண்ணி கொடுத்துருந்தாலும் ஒரு சில மேட்ச்ல நல்லா பர்பாம் பண்ண முடியாம போனதால ரசிகர்களால ஏற்றுக்கொள்ள முடியல. எது எப்படியோ கிரிக்கெட் விளையாடுறது எல்லாருக்கும் வர ஈஸியான விஷயம் இல்ல. இவர் அதுல தனக்குனு ஒரு தனி இடத்த பிடிச்சிருக்கார் அப்டின்றதுல எந்த வித சந்தேகமும் இல்ல.

Article By RJ Kavin