Cinema News Stories

பிரகாஷ் ராய் To பிரகாஷ் ராஜ்

HI செல்லம்-ன்ற வார்த்தை மூலமா எல்லாரோட செல்ல பிள்ளையாய் மாறியவர் தான் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ் அவர்கள். 90S கிட்ஸ் ஓட FAVOURITE வில்லன் ஆ இருந்தாலும் ஒரு நல்ல PERFORMER தான் நம்ம பிரகாஷ் ராஜ் அவர்கள்.

1965 ல மார்ச் 26ம் தேதி BANGALORE-ல பிறந்த இவரோட இயற்பெயர் பிரகாஷ் ராய். சினிமாத்துறைல பல பேரோட வாழ்க்கையையும் பேரையும் மாத்துன பத்மஸ்ரீ கே.பாலச்சந்தர் அவர்கள் தான் பிரகாஷ் ராய்-அ பிரகாஷ் ராஜ் னு மாத்துனாரு. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகள்ல பல படங்கள் நடிச்சிருக்காரு.

அப்பா, அண்ணன், நண்பன், வில்லன்னு எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஏற்ற ஒரு சிறந்த குணச்சித்திர நடிகரான பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு 1998-ல இருவர் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வாங்கிருக்காரு. அதுக்கு அப்புறம் 2007-ல காஞ்சிவரம் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்குனாரு.

எந்த கதாபாத்திரமா இருந்தாலும் அந்த கதாபாத்திரமாவே மாறி தன்னோட நடிப்பை உணர்வுப்பூர்வமா வெளிப்படுத்தக்கூடிய நம்ம பிரகாஷ் ராஜ் அவர்கள் இதுவரைக்கும் 398 படம் நடிச்சிருக்காரு. ஆனாலுமே ஒரு படத்தோட கதாபாத்திரத்துக்கும் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் எந்த ஒரு சின்ன ஒற்றுமையையும் காட்டாமல் நடிப்பது தான் இவரோட தனி திறமைனே சொல்லலாம்.

கில்லி படத்துல RUGGED வில்லனா ஆரம்பிச்சி திருவிளையாடல் ஆரம்பம்ல காமெடி வில்லனா மாறி குழந்தைகளுக்கும் பிடிச்ச FAVOURITE நடிகரா மாறி வசூல்ராஜா MBBS, அந்நியன், போக்கிரி, மொழி, பீமா, வேங்கைனு பலதரப்பட்ட கதாப்பாத்திரத்துல நடிச்சிருந்தாலும் அபியும் நானும்ல இப்படிப்பட்ட அப்பா இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சி முடிக்கிறதுக்குள்ள சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல இப்படிப்பட்ட அப்பா யாருக்கும் வேணாம்-ன்ற அளவுக்கு அவரோட நடிப்பை வெளிப்படுத்திருப்பாரு.

அடுத்தடுத்த படங்கள் வரிசைல இருந்தாலும் PERSONAL ஐயும் PROFESSIONAL ஐயும் BALANCE பண்ணி நம்மள எப்போவுமே RECHARGE பண்ணிட்டு இருக்கவர்னா நம்ம ALL TIME FAVOURITE பிரகாஷ் ராஜ் மட்டும் தான்.