Specials Stories

‘கான கந்தர்வனின் மகன்’

கான கந்தர்வன் K. J. Yesudas அவர்களோட மகன் அப்டின்ற பெருமையயும் தாண்டி தனக்குன்னு ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்குனவர் தான் Vijay Yesudas.

மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தினு பல மொழிகள்ல பாடி இருக்காரு… இவரோட Playlist ah கேக்காம நாட்களே நகராது.. premam படத்துல மலரே நின்னே song இப்ப கேட்டாலும் செம vibe ah இருக்கும் . சண்டக்கோழி படத்துல நா. முத்துக்குமார் வரிகள்ல “தாவணி போட்ட தீபாவளி “ல தொடங்கி, தீபாவளி படத்துல காதல் வைத்து பாட்டு, அம்மாவோட அன்ப அழகா நிழலினை நிஜமும் பாட்டுல இவரோட குரல் கேக்குறவங்கள கலங்கடிக்கும்.

குறிப்பா 3 படத்துல நீ பார்த்த விழிகள் பாடல் காதலர்களோட காவிய பாடலா இப்போ வரைக்கும் நிலைச்சிருக்கு… 1997 தொடக்கத்துல carnatic music ah கத்துக்க ஆரம்பிச்சாரு. Music director Vithyasagar Music பண்ண 2000 ல relaase ஆன மலையாள படமான millennium Stars படம் மூலமா vijay yesudas singer ah அறிமுகம் ஆனாரு… தமிழ்ல yuvan music ல பாடின songs மூலமா popular ஆனாரு vijay yesudas.

90s music directorல தொடங்கி current generation music director வரைக்கும் எல்லார் கூடயும் work பண்ணிருக்காரு… Harris jeyaraj, G. V. prakash, D Imman, Anirudh னு இவரோட unique voice னால எல்லாருக்கும் புடிச்ச ஒரு playback singer ah இன்னைக்கும் நம்மளோட play list ah rule பண்ணிட்டு இருக்காரு… 1000 songs-க்கு மேல பல languages ல பாடிருக்காரு… பாடல்கள் மூலமா கலக்கிட்டு இருந்த vijay yesudas acting ல கால் பதிச்சது தான் மாரி படம்.

ஒரு stylish cop ah எதார்த்தமான நடிப்ப கொடுத்து actor ah மக்கள் மனசுல நின்னாரு.. அத தொடர்ந்து director தனா direction ல படைவீரன் படம் மூலமா Hero va களம் இறங்குனாரு vijay yesudas… நடிகர், பாடகர் இது எல்லாத்தையும் தாண்டி oru நல்ல human being ah இன்னைக்கு மக்கள் மனசுல chair போட்டு உக்காந்து இருக்காரு. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமை கொள்கிறது சூரியன் FM.

Article By RJ Vicky