Cinema News Specials Stories

Leo Vs Rolex

சின்ன வயசுல நாம School-க்கு போக கதறி அழுதுருப்போம். ஆனா School-க்கு போக ஆசைப்பட்டு போக முடியாம இருந்த குழந்தைங்க அழுது கேள்வி பட்ருக்கோமா?

அந்த நிலை நம்ம நாட்ல இன்னும் இருக்கு. புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அப்பா, அவரோட இறுதி நிமிஷத்துல ரத்த வாந்தி எடுக்குறாரு. அந்த ரத்த வாந்திய புடிச்சு ஊத்துறதுக்கு கூட வீட்ல ஒரு Mug இல்லாத அளவுக்கு அந்த வீட்ல கஷ்டம். அடுத்த வேலை சாப்பாட்டுக்கு காசு இல்லாத நிலை.

Suriya's Agaram Foundation q
Suriya’s Agaram Foundation

அப்படிப்பட்ட குடும்பத்துல இருந்து வந்த ஒரு பொண்ணு டிகிரி முடிச்சு, Placement Interview Training போக 1500 ரூபா கூட கட்ட முடியாத சூழ்நிலை. அதையும் தாண்டி இன்னைக்கு கேரளா-ல English Lecturer-அ அந்த பொண்ணு வந்துருக்குன்னா, அதுக்கு காரணம் ஒரு மனிதர் மற்றும் அவர் நடத்துற ஒரு Educational Foundation.

கல்விக்கு ஆணி வேரா இருக்க நடிகர் சூர்யாவோட அகரம் இருகுறதுனால தான் இது சாத்தியம் ஆச்சு. நடிகர் சூர்யா உடைய நடிப்புல சிலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம், பலருக்கும் புடிச்சிருக்கலாம். ஆனா அவர் செய்யக்கூடிய இந்த நல்ல விஷயத்துக்கு கண்டிப்பா எல்லாருமே ரசிகராதான் இருப்பாங்க.

Suriya's Agaram Foundation
Suriya’s Agaram Foundation

அகரம் Foundation, செப்டம்பர் 25, 2006-ல ஆரம்பிச்ச இந்த பயணம் இன்னைக்கும் தொடர்ந்து நடந்துட்டு இருக்கு. சூர்யாவோட அப்பா சிவகுமார் ஒரு முறை அவங்க ஊர்ல இருக்க ஒருத்தருக்கு 120 ரூபா காசு குடுத்துருக்கார். அத பாத்துட்டு இருந்த அவங்க அம்மா சொன்னாங்க, இன்னைக்கு நீ குடுத்துட்ட, நாளைக்கு அவங்க என்ன பண்ணுவாங்க? அடுத்த மாசம் என்ன பண்ணுவாங்க? அடுத்த வருஷம் என்ன பண்ணுவாங்க? அப்டின்னு கேக்க, அப்போ சூர்யாவோட மனசுல ஒரு கேள்வி வந்துது.

இந்த மாதிரி சூழல் வராம இருக்க, ஒவ்வொரு வருஷமும் படிக்க கஷ்டப்படுற மாணவ, மாணவியர்களுக்கு அகரம் மூலமா இலவச கல்வி வழங்க ஆரம்பிச்சாரு சூர்யா. ஒரு குடும்பத்துல ஒருத்தர் படிச்சிருந்தா அந்த குடும்பம் நல்ல இருக்கும்ன்றத தாண்டி, ஒரு தலைமுறையே சிறப்பா இருக்கும்.

மாசம் 3000 ரூபாய கூட முழுசா பாக்காத அளவு கஷ்டபட்ற குடும்பத்துல இருந்து வர மாணவ, மாணவிகளை படிக்க வைக்குற அகரம் அறக்கட்டளை, அந்த Students வேலைக்கு போய் அவங்க சொந்த கால்ல நிக்குற வர உதவி பண்றாங்க. அகரம் அறக்கட்டளைல இருந்து படிச்சிட்டு வெளிய வர குழந்தைகளுக்கு Leadership Quality நல்லாவே இருக்குன்னு சமீபத்துல நடந்த கல்விக்கான 44வது விருது வழங்கும் விழாவுல நடிகர் சூர்யா பெருமையா சொன்னாரு.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சமீபத்துல நடிகர் விஜய் 234 தொகுதிகள்ல 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுல முதல் மூன்று இடம் எடுத்த மாணவர் மாணவிகளுக்கு பரிசு குடுத்து ஊக்கப்படுத்தினார். ஆனா சூர்யா கொஞ்சம் வேற மாறி யோசிச்சு கஷ்டத்துல படிச்சு நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு குடுத்து ஊக்கப்படுத்தினார்.

Thalapathy Vijay

இப்போ இத வச்சு விஜய் பண்ணது நல்லதா, சூர்யா பண்ணது நல்லதா? LEO vs ROLEX-ன்னு Social Media-ல அவங்க Fans பேசிட்டு இருந்தாலும், 2 பேருமே கல்வின்ற ஒரு உன்னதமான விஷயத்துக்கு தான் Support பண்ணிருக்காங்க. அப்டி பாத்தா 2 பேருமே கெத்து தான். கல்வியோட முக்கியத்துவம் தெரிஞ்ச 2 பேருமே என்னைக்கும் சிறப்பு தான்.

Article By RJ Amuthan