Specials Stories

ATLEE என்னும் HITlee

சினிமால Experimental Film ,Historical Film, Horror Film, Commercial Film-னு ஒவ்வொரு Directors-உம் ஒரு Categoryல Strongஆ இருப்பாங்க. அதுல Commercial Film எடுக்குறதுல இப்போ கோலிவுட் சினிமாவோட King Makerஆ இருக்கவரு தான் நம்ம அட்லி என்கிற அருண்குமார்.

அட்லிக்கு Dance-னா ரொம்ப பிடிக்கும், நல்லா Danceம் ஆடுவாரு. நடன இயக்குனரா மாறி தனக்கு பிடிச்ச நடிகர்களுக்கு Choreo பண்ணி அவங்கள ஆட வைக்கனும்னு நினைச்ச அட்லி, தரமான 4 Commercial படங்கள தமிழ் சினிமாக்கு தந்து, அதிக சம்பளம் வாங்குற இயக்குனரா மாறி, பல கோடி ரூபாய் வசூல் சாதனை செஞ்ச தமிழ் சினிமாவோட Best Commercial Director-ஆ இன்னைக்கு கோலிவுட்ல ஆட்டம்போட்டுட்டு இருக்காரு.. “தலைக்கணத்தோட இல்ல தன்னம்பிக்கையோட”.

சினிமாவா அதெல்லாம் நமக்கு வேண்டாம்னு சொல்ற பெற்றோர்களுக்கு மத்தியில, சினிமால அதிக ஆர்வம் இருந்த நம்ம அட்லிக்கு அவர் அப்பாவோட ஆதரவும், அரவணைப்பும் மிக பெரிய பலமா இருந்துச்சு. அதனாலயே Dance கத்துகிட்டாரு. சென்னைல Visual Communication-ம் படிச்சாரு. காலேஜ் படிக்கும் போதே நிறைய Short Films எடுத்த நம்ம அட்லி அத தன்னோட Id-ஆ மாத்தி, பிரம்மாண்ட இயக்குனர் Shankar அவர்கள் கிட்ட அதை காட்டி, “அடடே நீ தான் பா என்னோட AD”-னு அவர் கிட்ட உதவி இயக்குனரா எந்திரன் படத்துல சேர்ந்தாரு அட்லி.

Shankar அவர்களுக்கு அட்லியோட Dedication, அவருக்கு சினிமா மேல இருக்க Passion-னு எல்லாமே ரொம்ப பிடிச்சு போக அட்லியையும் ரொம்ப பிடிச்சு போச்சு. அதுக்கப்பறம் இதே கூட்டணி நண்பன் படத்துலயும் ஒன்னா இணையுறாங்க. அங்க நம்ம அட்லிக்கு இளைய தளபதி விஜய் அவர்களோட அறிமுகம் கிடைக்குது, இளைய தளபதிக்கும் அட்லியோட Work ரொம்ப பிடிச்சு போச்சு.

அட்லி, தான் உதவி இயக்குனரா இருந்தது போதும் கத்துக்கிட்ட மொத்த வித்தையை இனி இறக்குவோம்-னு 2013ல ராஜா ராணி படம் மூலமா இயக்குனரா அறிமுகம் ஆகுறாரு. காமெடி, லவ்,பாட்டுனு எல்லாமே ரசிகர்களுக்கு பிடிச்சு போக படம் செம்ம ஹிட்டு. ஆனா படம் பாத்தவங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் எப்படி மொத்த படமுமே இப்படி எடுத்திருக்காருனு!!! அந்த ஆச்சரியத்துல இருந்து ரசிகர்கள் வெளிய வர்றதுக்குள்ள தெறி படத்தோட அறிவிப்பு வருது.

அட்லி அவர்களுக்கும் இளைய தளபதி விஜய் அவர்களுக்கும் “நண்பன்” படத்துல அறிமுகமான நட்பு தெறி படத்தை பண்ண வச்சது. First Look-ல மூணு getup அதுல ஒன்னு போலிஸ். அட்லி Direction, GV Prakash இசைனு தெறி படத்து மேல ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட குறையாம ‘தெறி’யா எடுத்து தெறிக்கவிட்டாரு அட்லி.

Did You Know, Sivakarthikeyan was the first choice for Atlee's blockbuster  film 'Raja Rani' | Tamil Movie News - Times of India

தெறியோட வெற்றி அட்லிக்கு இளைய தளபதி விஜயோட அடுத்த படமான “மெர்சல்” படத்தை இயக்க வாய்ப்பு தந்துச்சு. அங்க தான் நம்ம இளைய தளபதி விஜய்…”தளபதி விஜய்”-ஆ மாறினாரு. மெர்சல் படமும் அது கையாண்ட விஷயங்களும், விஜயோட மூணு கெட்டப்பும், இசைபுயலோட இசையும் குறிப்பா “ஆளபோறான் தமிழன் பாட்டு”-ம், அட்லியோட இயக்கமும் மெர்சல் படத்த Boxofficeல செம்ம Collectionஅ அள்ள வச்சது.

Hattrick வெற்றி இயக்குனரா தமிழ் சினிமால ரசிகர்களால கொண்டாடப்பட்ட அட்லி தளபதி விஜயோட Hattrick வெற்றி கொடுக்கனும்னு முடிவெடுத்து “பிகில்” படத்த பிரம்மாண்டமா எடுத்தாரு. பிகில் பெண்களோட விளையாட்டு கனவுகள மையப்படுத்தி இருக்கும். இதுல அட்லி சொல்ல வந்த விஷயங்கள் நேரடியா ஒவ்வொரு பெண்கள் கிட்டையும் சேர்ந்துச்சு. குறிப்பா சிங்கப்பெண்ணே பாட்டு பெண்களோட Anthemஆ இப்ப வரை இருக்கு. தளபதியை இயக்குன முதல் ரெண்டு படங்கள விட இதுல அவர இன்னும் வித்தியாசமா காட்டனும்னு முடிவெடுத்த அட்லி “ராயப்பன்”-னு ஒரு Characterல நடிக்க வைக்குறாரு, அதுல நம்ம தளபதி வாழ்ந்துட்டாருனு சொல்லலாம்.

நாம பார்த்த ஒரு படம், ஏன் ஒரு Scene-ஆ இருந்தா கூட அட்லி அதை எடுத்தா வேறுபாடு நல்லா தெரியும், ஏன்னா ரசிகர்களை எங்க சிரிக்க வைக்கனும்,எங்க அழுக வைக்கனும், எங்க அவங்கள பிரம்மிக்க வைக்கனும், எங்க விசில் அடிக்க வைக்கனும்னு அட்லியோட திரைக்கதை அதுக்கு பதில் சொல்லும். இன்னைக்கு வரைக்கும் அட்லியோட படங்கள்ல வர்ற Flashback காட்சிகளை யாராலும் மறக்க முடியாது, அது தான் அட்லியோட திரைக்கதையின் பலம்.

கோலிவுட்டின் Hitlee-யான Atlee-க்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article by RJ Srini.