Specials Stories

பாகிஸ்தான் குறித்த சுவாரஸ்யமான 10 விஷயங்கள்!

நம் அண்டை நாடு பாகிஸ்தான் குறித்த நமக்கு தெரியாத சுவாரஸ்யமான 10 விஷயங்கள் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

  • எவரெஸ்ட் சிகரத்திற்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது உயரமான மலை ‘K2’ காரகோரம் மலைத்தொடரில், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ளது.
K2 Mountain (Gilgit-Baltistan) - All You Need to Know BEFORE You Go
  • பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியிலுள்ள துறைமுக நகரம் குவாடர். அரபிக் கடலின் கரையில் அமைந்துள்ள இந்நகரம் பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரம். உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகம் இங்கு அமைந்துள்ளது.
Gwadar Port: New Dubai or pie in the sky? | Lowy Institute
  • உலகின் எட்டாவது அதிசயம் என கூறப்படும் காரகோரம் நெடுஞ்சாலை பாகிஸ்தானில் உள்ளது. இது சீனா-பாகிஸ்தான் நட்பு நெடுஞ்சாலை எனவும் அழைக்கப்படுகிறது. இது 4714 மீட்டர் உயரமுள்ள காரகோரம் மலைத்தொடரின் குஞ்செராப் கணவாய் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான சாலை ஆகும்.
The Karakoram Highway – the "Eighth Wonder Of The World"? - WorldAtlas
  • உலகின் ஒரே இஸ்லாமிய அணுசக்தி நாடு பாகிஸ்தான்.
Test results: Have nuclear weapons secured Pakistan? - Herald
  • உலகிலேயே மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் பாகிஸ்தானை சேர்ந்தவர்.
Malala Yousafzai graduates from college 8 years after Taliban gunned her  down
  • பாகிஸ்தானில் அமைந்துள்ள டார்பெலா அணை உலக அளவில் அதிகமாக நீர் தேக்கி வைக்கும் அணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
Tarbela Dam - Wikipedia
  • பாகிஸ்தான் உலகின் நான்காவது பெரிய நீர்ப்பாசன அமைப்பைக் கொண்டுள்ள நாடாகும்.
ADB approves $200M loan to develop irrigation system in Punjab in Pakistan  | Business
  • உலகின் இரண்டாவது பெரிய உப்புச் சுரங்கங்களான (கெவ்ரா சுரங்கங்கள்) பாகிஸ்தானில் அமைந்துள்ளன. உலகின் புகழ்பெற்ற இளஞ்சிவப்பு இமயமலை உப்பு பாகிஸ்தானிலும் வெட்டப்படுகிறது.
Khewra Salt Mine | Rising Pakistan
  • உலகின் மிக உயரமான போலோ மைதானம் பாகிஸ்தானின் ஷந்தூரில் அமைந்துள்ளது. இந்த மைதானத்தின் உயரம் 3700 மீட்டர்.
World's highest polo festival kicks off in Pakistan's Shandur
  • பாகிஸ்தானை சேர்ந்த மலையேற்றம் செய்யக் கூடிய சமினா பெய்க், 2013 ஆம் ஆண்டு தனது 21 வது வயதில் எவரெஸ்ட் மற்றும் 2014 ஆம் ஆண்டு உலகின் மிக உயரமான 7 சிகரங்களிலும் ஏறிய முதல் மற்றும் இளம் முஸ்லீம் பெண்மணி ஆவார். எவரெஸ்ட் சிகரத்திற்கான அவரது பயணத்தின் போது Beyond The Heights எனும் ஆவணப்படம் பதிவு செய்யப்பட்டது.
Climb every mountain: Pakistani women hope to make history on the world's  toughest peak - The Globe and Mail

இது போன்ற வேறு சில நாடுகள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை அடுத்தடுத்த வீடியோக்களில் பார்க்கலாம்.

Article By MaNo