ஒவ்வொரு வாய்ப்பையும் வெற்றி வாய்ப்பாக மாற்றிய ‘கீர்த்தி சுரேஷ்’

அடுத்தடுத்து தளபதி விஜய் உடன் “பைரவா, சர்கார்”னு ரெண்டு படம்,  சூர்யாவோட “தானா சேர்ந்த கூட்டம்”, விஷால் கூட “சண்டைகோழி 2″னு அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆக கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் ராக்கெட் ஸ்பீட்ல போய்ட்டு இருந்துச்சு.

ஆனா கீர்த்தி சுரேஷ்க்கு படங்கள் அதிகமா இருந்தாலும் ஹிட்கள் ரொம்ப கம்மி. அதனால ராசி இல்லாத நடிகைனு சினிமா வட்டாரங்கள்ல பேச்சு ஆரம்பிக்கும் போதே, அத்தனை வாயையும் அடடா கீர்த்தி சுரேஷ் மாதிரி ஒரு நடிகை இனி பொறக்க போறதே இல்லனு சொல்லவச்ச படம் தான் “நடிகையர் திலகம்”.

சாவித்திரி அம்மா போல அப்படியே அந்த கதாபாத்திரத்துல வாழ்ந்து இருப்பாங்க கீர்த்தி சுரேஷ். ஊரே பாராட்டின நடிகையர் திலகத்துல நடிச்சதுக்காக தேசிய விருதும் கிடைச்சது கீர்த்தி சுரேஷ்க்கு. 

அந்த வெற்றிய தொடர்ந்து மறுபடியும் விக்ரம் கூட “சாமி 2”, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட “அண்ணாத்த”னு தமிழ்ல பெரிய படங்கள், அதுமட்டுமில்லாம தெலுங்குல பெரிய ஸ்டார்ஸ் கூட நெறைய பட வாய்ப்புகள் கீர்த்தி சுரேஷ்க்கு கிடைச்சுது. 

கிடைக்குற ஒவ்வொரு வாய்ப்பையும் வெற்றி வாய்ப்பா மாத்தி தன்னோட நடிப்பால அசத்துற கீர்த்தி சுரேஷ் இயக்குனர் செல்வராகவன் கூட சேர்ந்து நடிச்ச “சாணிக் காயிதம்” படம் அவங்க நடிப்ப உலகத் தரத்துக்கு எடுத்துட்டு போச்சு. 

ஒவ்வொரு படங்கள்லயும் வித்தியாசமான நடிப்ப தந்திட்டு இருக்க கீர்த்தி சுரேஷ் இன்னும் பல நல்ல படங்கள்ல நடிச்சு பல விருதுகள் குவிக்க சூரியன் FMன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article By RJ SRINI

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.