டிரெண்டிங்கில் ஜெய் சுல்தான் !!!

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் கார்த்தியை வைத்து இயக்கியுள்ள புதிய படம் ” சுல்தான் “. இப்படத்தின் ” ஜெய் சுல்தான் ” பாடலின் Lyric வீடியோ Youtube-ல் வெளியாகியுள்ளது. வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் Youtube-ன் டிரெண்டிங் பட்டியலில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

Image result for sultan karthi

சமீபத்தில் பல ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு வாரி வழங்கிய விவேக் – மெர்வின் கூட்டணி தான் சுல்தான் படத்திற்கு இசையமைத்துள்ளது. ” ஜெய் சுல்தான் ” பாடலை கானா பாடகர்கள் ஜூனியர் நித்யா மற்றும் ‘கானா’ குணாவுடன் இணைந்து Rockstar அனிருத்-ம் பாடியுள்ளார். இப்பாடலின் வரிகளையும், இசையையும் வைத்து பார்க்கும் போது, இப்பாடல் ஒரு Mass Opening பாடலாக அமைந்துள்ளது போல தெரிகிறது.

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் விவேகா அவர்களே ஜெய் சுல்தான் பாடலையும் எழுதியுள்ளார். விவேக் மற்றும் மெர்வினின் துள்ளலான இசையும், அனிருத்தின் அட்டகாசமான குரலும், விவேகாவின் வேற Level வரிகளும் இப்பாடலை Repeat Mode-ல் கேட்க வைக்கிறது என்றே கூறலாம்.

ரெமோ திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட்டான படமாக அமைந்ததால், பாக்கியராஜ் கண்ணனின் இரண்டாவது படமான சுல்தான் படத்தின் மீதும்  ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நெப்போலியன், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் வெளியானதிலிருந்தே, இப்படத்தை திரையில் காண கார்த்தி ரசிகர்கள் திரை மீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.

சுல்தான் திரைப்படத்தின் ‘ ஜெய் சுல்தான் ‘ பாடலை கீழே காணுங்கள்.