தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இப்படக்குழுவினரின் இந்த முடிவை வரவேற்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், ” சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தியேட்டருக்கு படம் பார்க்க செல்லும் போது அனைவரும் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
தனுஷின் இந்த டீவீட்டை ரசிகர்கள் பெரிதளவில் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளிவரும் என Update வந்த போது, அந்த அறிவிப்பை தனுஷ் Retweet செய்து ” Yes ! ” என Caption பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .
விஜயின் மாஸ்டர் படத்திற்கு தனுஷ் தொடர்ந்து ஆதரவு தரும் பதிவுகளை பதிவிட்டு வருவதால் தளபதி ரசிகர்கள் தனுஷை சமூக வலைத்தங்களில் கொண்டாடி வருகின்றனர். இது போன்ற ஒரு நல்ல கோலிவுட் நட்பு நீடித்து நிலைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது.
தனுஷ் மட்டுமின்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்-ம் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குளில் வெளியாவதை வரவேற்கும் விதத்தில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ்-ன் ட்விட்டர் பதிவுகளை கீழே காணுங்கள்.