Suryan Explains Videos

10 Easy Steps to Lose Weight | உடல் பருமனும் குறைக்க 10 எளிய வழிகள்..

10 Easy Steps to Lose Weight | உடல் பருமனும் குறைக்க 10 எளிய வழிகள்..
10 Easy Steps to Lose Weight | உடல் பருமனும் குறைக்க 10 எளிய வழிகள்..

உடல் பருமனும் ஒருத்தர் லைப்-ல Confident-அ குறைக்குதோ என்னமோ. இப்போ உடல் பருமனா இருக்கிற பலர் அதை குறைக்குறதுக்கு Strict Diet, Gym, Excersice னு கஷ்டப்படுறாங்க. இப்போ இத பாக்குற உங்களுக்கு உடனே ஞாபகத்துக்கு வர்றது வாரணம் ஆயிரம் சூர்யா-வோட Body Building Transformation, அப்ரோம் சிலம்பரசனோட Transformation தான். அதுக்காக நீங்களும் இவங்கள மாதிரி கஷ்டப்பட்டு உங்க உடல் பருமன குறைக்க சொல்லல. குட் பேட் அக்லி படத்துல அஜித் குமார் மாதிரி ஈசிஆ உடல் பருமன குறைச்சு மாஸ் காட்டலாம். இதுக்கு strict diet follow பண்ணனும்-னு இல்ல, gym போய் கஷ்டப்பட்டு உடல வருத்தி குறைக்கும்-னு அவசியமும் இல்ல. இங்க சொல்லிருக்க இந்த 10 easy steps-ஆ dedication-ஆ follow பண்ணலே போதும்.


  1. சின்ன வயசுல நம்ம பெரிய-வங்க சொன்ன இந்த பழக்கத்தை தான் நாம மொத follow பண்ணனும். அதாவது ‘நல்லா தண்ணி குடிக்கணும்’.. நீங்க அதிகமா தண்ணி குடிச்ச உங்க உடம்பு நல்ல hydrate ஆகிட்டே இருக்கும். ஒரு நாளைக்கு சராசரியா 2 – 3 லிட்டர் தண்ணி குடிக்காரனால நம்ம உடம்புல இருக்கிற Fat ஈசியா melt ஆகும். இது weight loss -கே ஒரு கே key.
  2. காலை-ல எழுந்ததும் சுட தண்ணி குடிக்கணும். – நீங்க எழுந்ததும் வெறும் வயிற்றுல சுட தண்ணி குடிச்ச உங்க உடம்பு-ல இருக்கிற தேவையில்லாத Fat கரையும், டிடாக்ஸ்பன்னும், digestion நல்லா இருக்கும், கூடவே metabolism improve ஆகும். அதுவும் லெமன் வச்சா சுட தண்ணி குடுச்சா செமா! fat burn ஆகறது easy ஆகும்
  3. Sugar க்கு ‘Bye Bye’ சொல்லுங்க – நீங்க சாப்புடுற உணவுல சக்கரையை கம்மி ஆக்குங்க. டீ, காபி, ஜூஸ் எல்லாத்துலயும் முடுஞ்சவரை சர்க்கரை குறைக்கணும். அதுக்கு பதிலா தேன் & பனை வெல்லம் எடுத்துக்கலாம். white சுகர் நம்ம உடலுக்கு ரொம்ப ஆபத்தானது.
  4. நீங்க சாப்பிடுறத கவனிக்கணும், அதாவது Mindful Eating – டிவி பாக்கறப்போ சாப்பிடாதீங்க, Slow-வா சாப்பிடுங்க. சாப்பிடும் பொது தண்ணி குடிங்க. இதை செய்யுறனாள உங்க வயிறு வேகமா Full ஆகும். உங்களுக்கும் திருப்தியா சாப்பிட அனுபவம் கிடைக்கும், அதே சமயம் கம்மியா சாப்பிடலாம். அளவு கம்மியா ஊட்டச்சத்து அதிகமா இருக்கிற சாப்பாடா சாப்புட்றது ரொம்ப நல்லது.
  5. தினமும் குறைஞ்சது 30 நிமிஷம் கட்டாய நடக்கணும். – உடலுக்கு நாம நடக்கிற சாதாரண வாக்கிங் தான் பெரிய எக்ஸர்சைஸ். மெல்ல மெல்ல speed ஆக நீங்க வாக்கிங் பண்ணுங்க, இதனால நீங்க சாப்பிட சாப்பாடு நல்ல செரிமானம் ஆகும். Office-ல உட்காந்து வேலையை செய்ற நீங்க, ஒரு நாளைக்கு வேர்வை வர்ற அளவுக்கு கட்டாயம் நடக்கும்.
  1. நல்லா சாப்பிடணும் – அதாவது உடலுக்கு ஆரோக்கியமான நல்ல சாப்பாடுகள நல்லா சாப்பிடணும். தினமும் காலை உணவை skip பண்ணாம சாப்புடனும். காலை உணவா ராஜாக்கள மாதிரி சாப்பிட சொல்லுவாங்க. BreakFast அளவான சாப்பாடு சாப்பிட்றதுக்கு Oats, சுண்டல், idly, eggs, எடுத்துகிறது ரொம்ப நல்லது.
  2. தினமும் nightல சீக்கிரமா சாப்புடுங்க அதுவும் Light-ஆ சாப்புடுங்க.. நீங்க nightல late ஆ சாப்பிட்ட உங்க உடம்பு நீங்க உண்ட உணவ முழுமையா செரிமானம் ஆக்காது. இதனால உடம்புல ராத்திரி energy burn ஆகாம fat ஆகிடும்.
  3. அப்புறம் நம்ம எல்லாருக்கும் பிடிச்ச ‘தூக்கம்’. துக்கம் முக்கியம் பிகில்-லு. நல்ல ஆரோக்கியமான தூக்கத்தால உடம்பு-ல hormones வலுவாகும். அரைகுறை தூக்கம் காரணமா பலருக்கு leptin harmone அடிவாங்குது. இதனால நம்ம metabolism செயல்திறன் குறையுது. நம்ம உடம்பு செரிமானத்துக்கு முக்கியமான ஹார்மோன் ஆ இருக்க இந்த leptin ஹார்மோன் உணவை நல்ல செரிமானம் செஞ்சு அதன் சத்துக்களை உடல் முழுக்க பரவசெய்யுது.
  4. Junk Food க்கு No சொல்லுங்க. No means No. நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு பிடுச்சத எதையும் செய்யாம உங்கள வருத்தி diet இருந்து உடம்ப குறைச்சாலும் நீங்க சாப்புட்ற Junk food உங்க ஆரோக்கியத்தை மொத்தமா மாத்திடும். நீங்க சாதாரணமா சாப்பிடற குறைவான junk food உங்க ஆரோக்கியத்தை மொத்தமா அழிக்கிற வல்லமை படச்சது. ஒரு பக்கோடா – 400 கலோரி. ஒரு burger – 500!. நாம style, culture-னு சாப்பிடுற இந்த விஷயங்கள் தான் உடல் பருமணத்துக்கு முக்கிய காரணமே. உங்க லைப்-ல junk food ஆ கொறச்சலே நீங்க ஜாலியா இருக்கலாம்.
  5. கடைசியா ரொம்பவும் முக்கியமானது.. ‘Consistency’ – Consistency தான் Hero! – எந்த ஒரு செயலை செஞ்சாலும் விருப்பத்தோடு விடாமுயற்சி-யா இருக்கனும். ஒரே நாள்-ல யாரும் 1 கிலோ குறைக்க முடியாது. 1 மாசத்துக்கு 2-3 கிலோ குறைக்கனும்-னு நினச்சு தினமும் இத உங்க வாழ்க்கை பழக்கவழக்கத்துல சேத்துக்கோங்க. இதனால நீங்க life-long ஆரோக்கியமா Fit ஆ இருக்கலாம்.

Consistency கூட determination ஆ இருந்தா எதுவும் முடியாதது இல்ல! இப்போ இங்க இருக்கிற 10 steps நீங்க follow பண்ணலே போதும். எல்லா வாரத்துல ஒரு photo எடுத்து compare செஞ்சு பாருங்க – உங்க மாறுதல நீங்க உணர்வீங்க.

Article By Sakthi Harinath

About the author

Sakthi Harinath