1997-ல ரிலீஸ் ஆன டைட்டானிக் மூவி உலக சினிமாவையே திரும்பி பார்க்க வச்சது, நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான். டைட்டானிக் படம் வெளியாகி 13 ஆஸ்கார் விருத அள்ளி குவிச்சதும், இப்போ இருக்கிற GEN-Z kids வரை பிரபலமா இருக்கிறதும் சின்ன விஷயம் கிடையாது. இப்படி உலகமே கொண்டாடுன படத்துல நிறைய மிஸ்டேக்ஸ் இருக்குனு சொன்ன நம்ப முடியுதா? ஆமாங்க… இங்க நாம டைட்டானிக் படத்துல இருக்கிற 10 மிஸ்டேக்ஸ் என்னானு-தான் பாக்கப்போறம்.
- Rose என்ட்ரி scene ல உதட்டுக்கு இடது பக்கம் ஒரு அழகனான மச்சம் இருக்கும். அதே இந்த scene-ல rose உதட்டுக்கு வலது பக்கம் இருக்கும்
- 100-க்கும் மேல மக்கள் டைட்டானிக் புறப்படுற தருணத்துல கப்பலுக்கு டாடா சொல்லிட்டு இருப்பாங்க. ஆனா இதுக்கு அப்புறம் வர scene அ பாருங்க. அங்க இருந்த அத்தனை பெரும் எங்க? ஒரு நொடில மொத்த பேரையும் கானாம்.
- இந்த சீன் ல கப்பலை ரொம்ப அழகா காட்டிருப்பாங்க. நீங்க இந்த கதவை பாருங்க. ஒளிப்பதிவாளர் அதாவது cameraman ஓட நிழல் இங்க reflect ஆகுது.
- இப்போ ஜாக் கைய பிடுச்சு rose & molly ரெண்டு பேர் நடந்து வருவாங்க. இவங்க பின்னாடியே கேமராவும் போகும் ஆன ஒரே செகண்ட்-ல ஜாக் – rose மட்டும் நடக்கிற மாதிரி காட்டிருப்பாங்க. கூட வந்த molly-ய காணோம்
- 1912-ஆம் காலகட்டத்துல இருக்கிற டார்ச் லைட் மஞ்சள் நிறத்துல தான் எரியும். அப்போ வெள்ளை நிறத்துல எரியுற லைட் கண்டுபிடிக்கவே இல்ல. அனா இந்த scene ல வெள்ளை நிறத்துல எரியுற லைட் அ use பண்ணிருக்காங்க.
- வில்லன் ரோஸ்-அ வலுக்கட்டாயமா இழுத்துட்டு போகும் போது கடுப்பான ரோஸ் வில்லன் மூக்கு மேலையே நச்சுனு செம punch வைப்பாங்க. அப்போ இந்த நீங்க கவனிச்சுருக்க மாட்டிங்க. வில்லன் கைல ஏற்கனவே ரத்தம் இருக்கும். அத வச்சு மூக்குல தடவி ரத்தம் வர்றது மாதிரி காட்டிருப்பாங்க.
- Rose இப்போ emergency fire exit ஆ வச்சு தப்பிக்க பாப்பாங்க. அப்போ இவங்க இந்த கண்ணாடியை ஒடச்சு உள்ள இருக்கிற கோடாலியை எடுப்பாங்க. இப்போ இத நீங்க கவனிச்சு பாருங்க. அவங்க அந்த கண்ணாடிய உடைக்கும் போது அங்கிருக்க எல்லா கண்ணாடியும் ஒடஞ்சு கீழ விழுந்துரும். அடுத்து sceneல அவங்க இந்த கண்ணாடி டப்பா ல இருந்து கோடாலிய எடுக்கும் போது அங்க கண்ணாடி நிறைய இருக்கும். ஒடஞ்சு கீழ விழுந்த கண்ணாடி எப்படி அங்க திரும்ப வந்தது.
- ஜாக் பைப் லைன்-ல லாக் ஆகிருபாரு. அவர காப்பாத்துறதுக்கு கோடாலியா எடுத்துட்டு வர்ற Rose ஜாக்-அ லாக் பண்ணி வச்சுருக்க hand லாக் ஆ கோடாலி வச்சு உடைப்பாங்க. அப்போ நீங்க ஜாக் போட்டிருந்த டிரஸ்-அ கவனிச்சு இருக்கீங்களா? அவரு ஒரு angle ல கோட் மாதிரி ஒரு டிரஸ் போற்றுப்பாரு. அதே சீன்-ல வேறு ஒரு angle-ல சாதாரண TShirt மட்டும் தான் போட்டிருப்பாரு.
- வில்லன் துப்பாக்கிய எடுத்துக்கிட்டு jack & rose அ சுட try பண்ணுவாரு. அப்போ ஜாக் முன்னாடி ஷூட்டிங் ஸ்பாட் Stage light எரியும். இத எத்தனை பேர் நோட் பண்ணீங்க?
- இந்த பிரமாண்ட டைட்டானிக் கப்பல் ஒடஞ்சு விழும் பொது நிறைய மிஸ்டேக்ஸ் இருக்கு. ஒரு side ல இருந்து பாக்கும் போது இருக்கிற கப்பலோட Stuff மறுபுறத்துல இருந்து பாக்கும் போது இல்ல. கப்பல் ஒடஞ்சு துண்டாகும் சீன்-ல wire இருக்கிறதா நீங்க கவனிச்சுருக்க மாட்டீங்க.
இவ்ளோ ஏன் இந்த படத்தோட எமோஷன் சீன்-ல கூட mistake இருக்கு. ஒரு பலகை ல இருக்கிற ரோஸ் ஜாக்-அ எழுப்பும் போது அவரு பனி-ல உரஞ்சு கிடப்பாரு. அப்போ Jack ஓட மூக்க கவனிச்சு பாருங்க. முதல அங்க பனிக்கட்டி இருக்காது. ஆன அடுத்த சீன்-ல அவரு மூக்கு-ல பனி கட்டியா இருக்கும்.
இப்போ நம்ம தமிழ் சினிமா-ல லாஜிக் மிஸ்டேக்ஸ்-னு சொல்லியே பல படங்கள விமர்சனம் செஞ்சு அந்த படத்தை வீணாக்குறோம். பெரும்பாலான திரைப்படங்கள் நம்ம-ல entertainment பண்றதுக்காகவும், சில படங்கள் நம்ம-ல educate பண்றதுக்காக தான் தயாரிக்குறாங்க.
உலக சினிமாவையே திரும்பி பார்க்க வச்சு 13 ஆஸ்கார் வாங்கிய படத்துல எத்தனை லாஜிக் மிஸ்ட்கே இருக்குனு பாருங்க. ஒரு படத்தை படமா பாத்து என்ஜாய் பண்ணுங்க.. ஒரு திரைப்படம் நிஜ வாழ்க்கை தழுவுனா படம்-னு சொன்னாலும் அது நிஜம் இல்லை, அதுலையும் ஒருத்தரோட கற்பனை பதிவு தான் இருக்கு.
Article By Sakthi Harinath

