நீங்கள் தூங்குவதில் சிரமப்படுகிறீர்களா? மன அழுத்தம், கவலைகள், அன்றாட வேலைப்பளு… இவை எல்லாம் நம் நிம்மதியான உறக்கத்தைக் குறைக்கிறது. இப்போ இங்க 10 எளிய வழிகளைப் பற்றி பார்ப்போம், இது உங்கள் தூக்கத்தை விரைவாகவும் ஆழமாகவும் மாற்ற உதவும்!
Step 1: சரியான தூக்க நேரம் அமைத்துக் கொள்ளுங்கள்
நம்முடைய உடல் ஒரு நாம் செய்யக்கூடிய பழக்கவழக்கங்கள் அடிப்படியில் செயல்படுகிறது. தினமும் ஒரே நேரத்தில் படுக்கச் சென்று ஒரே நேரத்தில் எழுவது முக்கியம்!
Step 2: மங்கலான வெளிச்சம் பயன்படுத்துங்கள்
வெளிச்சம் மிகுந்த விளக்குகள், மொபைல், லேப்டாப் போன்றவற்றின் நீல ஒளி தூக்க ஹார்மோனான மெலட்டோனின் குறைவாக வெளிப்பட காரணமாகிறது. அதனால், உறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு மொபைல், டிவியைத் தவிருங்கள்.
Step 3: சூடான பானம் குடிக்கலாம்
சூடான பால், ஹெர்பல் டீ போன்றவை மனதை ஓய்வாக மாற்றும். காபி, டீ போன்ற கேஃபின் அடங்கிய பானங்களைத் தவிருங்கள்.
Step 4: சூடான நீராடுங்கள்
தூங்குவதற்கு முன்பு சூடான நீரில் குளிப்பது உங்கள் உடலின் வெப்பநிலையை சமப்படுத்தி விரைவாக தூங்க உதவும்.
Step 5: மனதை அமைதியாக்குங்கள்
தூக்கத்திற்குப் பிறகு உடல் முழுவதுமாக ரிலாக்ஸ் ஆகவேண்டும். இதற்காக, லேசான யோகா அல்லது மூச்சுப் பயிற்சி செய்யலாம்.
Step 6: படுக்கையில் புத்தகம் படிக்கலாம்
மென்மையான, கவலைகள் இல்லாத புத்தகங்கள் உங்கள் மனதை அமைதியாக்க உதவும்.
Step 7: ஆழ்ந்த மூச்சு விடும் பயிற்சி
4-7-8 முறையில் மூச்சு விடுங்கள் – 4 விநாடிகள் மூச்சை இழுத்து, 7 விநாடிகள் தக்கவைத்து, 8 விநாடிகள் வெளியே விடுங்கள்.
Step 8: மன அழுத்தத்தை விடுவிக்குங்கள்
நாளை செய்யவேண்டிய வேலைகளை நினைத்து கவலைப்பட வேண்டாம். பதினைந்து நிமிடங்கள் உங்கள் எண்ணங்களை எழுதிக்கொள்ளலாம்.
Step 9: அறையின் வெப்பநிலை சரி பார்க்கவும்
குளிர்ச்சியான அறை தூக்கத்திற்கு உகந்தது. ஆகவே, வெப்பநிலையை சரியான முறையில் வைத்துக்கொள்ளுங்கள்.
Step 10: நல்ல கம்பளி மற்றும் மெத்தை தேர்வு செய்யுங்கள்
உங்கள் உறக்கத்தின் தரம் நல்லதாக இருக்க, மென்மையான கம்பளி, உடலுக்கு ஏற்ற மெத்தை போன்றவை முக்கியம்.
இந்த 10 வழிகளையும் பின்பற்றுங்கள், உங்கள் தூக்கத்தின் தரம் எப்படி மாற்றம் அடைகிறது என்று கண்டுபிடியுங்கள். நீங்கள் அதிக நேரம் தூங்காமல், சிறந்த தரமான உறக்கத்திற்குப் பழக்கமடைந்தால் உங்கள் வாழ்க்கையின் தரமும் உயரும்!
Article By Sakthi Harinath

