Suryan Explains Videos

10 steps of CPR | இனி ஈஸியா CPR செய்யலாம்…

10 steps of CPR | இனி ஈஸியா CPR செய்யலாம்...
10 steps of CPR | இனி ஈஸியா CPR செய்யலாம்...

நாம எல்லாருக்கும் CPR-நா எண்னானு தெரியும், எதிர்பாராத நேரத்துல ஒருத்தர் மயங்கி விழுந்த அவர காப்பாத்த நாம எடுக்கும் First-aid step. ஆனா அத எப்படி பண்ணனும்-னு கேட்ட பலருக்கும் தெரியாது. அது அவசியம் இல்லைனு நினைக்கும் பலருக்கும் ஒரு விஷயம் புரியல, இந்த CPR நம்ம வாழ்க்கைல எவ்ளோ அவசியமானது-னு. Stress, Work Life Imbalance, நேரத்துக்கு சாப்புடாம-னு இருக்கிற பலரும் அவங்க Health மேல பெருசா கவனம்-ஆ இருக்கமாற்றங்க.
Docter மட்டும் தான் மனுஷன் உயிர்-அ காப்பாத்தணும்-னு நினைக்காதீங்க. இங்கு இருக்கிற பலருக்கும் அந்த பொறுப்பு வேணும். இந்த CPR இங்க வாழ்ற சாதாரண மக்களுக்கும் தெருஞ்சுருக்கணும். அது கண்டிப்பா ஒரு நாள் உங்களால உங்கள சுத்தி இருக்கிறவங்களுக்கு use ஆகும்.


  1. Scene-ஐ check பண்ணுங்க.. எப்போ எங்கவேனாலும் ஒருத்தர் மயங்கி விழலாம். அப்போ நீங்க செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்க சுற்றி நடக்கிற விஷத்தை Absorbe பண்ணுங்க. கார், road, work place, பஸ் ஒருத்தர் மயங்கினாலும், முதல அவர ஒரு காற்றோட்டமான இடத்துல படுக்க வைங்க. அந்த இடம் நீங்க பண்ற முதலுதவி-க்கு ஏற்ற இடம்-ஆ இருக்கனும்.
  2. அவர் கூட intract ஆகுங்க.. அவர் கன்னத்தை தட்டி அவர எழுப்ப முயற்சி பண்ணனும். முகத்துல தண்ணி தெளிச்சு அவர react பண்ண வைக்கணும்.
  3. அப்புறம் நமக்கு தெரிஞ்ச விஷயம் தான், அவசர அழைப்புக்கு ‘108’. யாருக்கும் wait பண்ணாம ஒடனே 108-க்கு call பண்ணுங்க. அவங்ககிட்ட நடந்தத சொல்லி CPR எப்படி பண்ணனும் advice கேட்டு செய்ய ஆரம்பிங்க. உங்க சுத்தி யாரும் இல்லைனா உங்க போன்-அ speakerல போட்டு முதலுதவி பண்ண start பண்ணுங்க. யாராச்சு இருந்தா அவங்ககிட்ட உங்க மொபைல் ஆ குடுத்து அவங்க உதவியோடு காப்பாத்தனும்.
  4. நாலாவது மூச்சு இருக்கானு பாருங்க.. மூச்சு இல்லைனா ஒடனே CPR செய்ய ஸ்டார்ட் பண்ணுங்க. மூச்சு இருந்தா இங்க சொல்லிருக்க மோத 2 steps-ல அவரு எழுந்திருப்பாரு. ஆன நீங்க கண்டிப்பா 108-க்கு கால் பன்னிருக்கணும்.
  5. Chest compressions – மயங்கி விழுந்த நபரோட Chest பகுதி நடுப்பக்கத்தை உங்க ரெண்டு கைய இணைச்சு அலுத்தணும். அதாவது 30 compressions – deep ஆனதும், fast ஆனதும் (கிட்டத்தட்ட 100-120 compressions per minute).
  1. மூச்சு ஊதணும் அதாவது (Rescue Breaths) – மயங்குன நபரோட மூக்க மூடி அவரு வாயோடு வாய் வச்சு 2 நிமிஷம் நல்லா மூச்சு ஊதணும். கூடவே அவங்க chest Rise ஆறத பாத்து confrim பண்ணுங்க. இத செய்யுறதுக்காக நீங்க தயங்க கூடாது.
  2. steps 5 & 6-அ continue செய்யுங்க. 30 compressions + 2 breaths combo. நீங்க ambulance வர்றவரைக்கும் இல்லைனா அவங்க react ஆகுறவரைக்கும் இதையே நீங்க continue பண்ணனும். ஒரு வேல நீங்க Tired ஆகிட்டேங்கன்னா, மற்ற ஆளோட help கேளுங்க. அவருக்கு CPR செய்ய தெரியலைனா நீங்க Guide செஞ்சு CPR செய்ய வைங்க.
  3. AED இருந்தா Use பண்ணலாம், AED (Automatic External Defibrillator) – இத use செஞ்சு காப்பாத்தலாம். AED இப்போ public இடத்துல கண்டிப்பா இருக்கும், அதுல இருக்கிற instruction ஆ follow பண்ணி உயிர் அ காப்பாத்தலாம். இப்போ கிராமத்துல கூட AED பத்தின விழிப்புணர்வு இருக்கு.
  4. அவங்க (மொணங்குறாங்களா) அதாவது moan பண்ணுறாங்களா, மூச்சு எடுக்கறாங்களா-னு – Constant Observe பண்ணுங்க. அவங்களோட chest move ஆகுதா. வாய்மூச்சு வருறதா, கண் விழிக்குறாங்களா-னு பார்த்துக்கிட்டே இருங்க. இதுல எந்த sign இருந்தாலும் compressions stop பண்ணுங்க.
  5. காப்பாத்த Emergency Crew ஆளுங்க வந்ததும் clear explain பண்ணுங்க.. என்ன நடந்துச்சு.. எப்பலிருந்து CPR ஆரம்பிச்சீங்க. இதுக்கு மேல அவங்க proper care எடுத்துக்குவாங்க.

CPR நாம தெரிஞ்சுக்கவேண்டிய ரொம்ப முக்கியமான ஒன்னு. இத வச்சி உங்கள சுத்தி இருக்கிற family, friends, யாருக்கும் இது ஒரு நாள் தேவைப்பட்டாலோ. அப்போ நீங்க CPR use செஞ்சி காப்பாத்தின நீங்க hero ஆவேங்க. இந்த தகவல்கள் உங்களுக்கு பயன் உள்ளதா இருந்த இந்த knowledge-ஐ நிறைய பேருக்குப் போக மறக்காம Share பண்ணுங்க…

Article By Sakthi Harinath

About the author

Sakthi Harinath