Suryan Explains

10 steps to close You Loan | இந்த 10 வழிகளை பயன்படுத்துங்கள்.. உங்க கடன்கள் அனைத்தையும் அடையுங்கள்

10 steps to close You Loan
10 steps to close You Loan

10 steps to close You Loan – LOAN, இந்த வார்த்தைய கேட்காத ஆள் யாருமே இருக்கமாட்டோம் எப்படி Corona பேரிடர் காலத்துல Pandemic,Lockdown, Quarantine இந்த மாதிரி வார்த்தைகள் நம்ம Daily lifela வந்துச்சோ அதேபோல பணத்தேவை இருக்க எல்லாரோட lifeலையும் Loan ,EMI, Due date,Credit score, Cibil score, Repayment, Interest, Principalனு பல வார்த்தைகள் நல்லா இருக்கியா , சாப்பிடியானு கேக்குற மாதிரி Daily use பண்ற வார்த்தைகளா மாறிடுச்சு. Bike Loan,Car loan, Housing Loan,Gold loan, Personal loan இப்பிடி உங்களுக்கு எந்தவித Loan இருந்தாலும் அதை அடைக்க பத்து Steps என்னனு தெரிஞ்சிக்கோங்க.


1) மொதல்ல Loan எடுக்கும் போதே எல்லா documentsம் சரியா படிக்கனும் சின்ன வரிகளை விட்டா கூட அது நமக்கு வட்டியா மாறி extra நிறைய குட்டியா போட்டு ,நாம அதிக பணம் கட்டுற மாதிரி ஆகிறும்.Loan Period என்னென்றதுல தெளிவா இருக்கனும் foreclosure பண்ண எதும் conditions இருக்கானு கேள்விகள் நிறைய கேட்டு லோன் எடுத்திருக்கனும்.

2) சில லோன் குடுக்குற banksல forelcosureக்கு charges & Penalties இருக்கும்..ஒரு‌ வேலை நீங்க முன்கூட்டியே பணம் செலுத்தி loan close பண்ண போறீங்கனா direct ah பணத்த எடுத்துட்டு பேங்க் போகாம அதுக்கு முன்னாடியே தெளிவா போய் எல்லாம் விசாரிச்சிட்டு வாங்க.

3) உங்களுக்கு ஒரே ஒரு loan தான் இருக்குனா அதை அடைக்க இன்னும் எத்தனை வருஷங்கள் ஆகும்னு ஒரு கணக்கு எடுங்க அதை எடுத்த அப்பறம் வீட்ல ரெண்டு பேர் earn பண்றீங்கனா முடிஞ்ச அளவு ஒருத்தர் சம்பளத்த Loan அடைக்க பயன்படுத்துங்க …ஒரு ஆள் சம்பளத்துலையே குடும்ப செலவுகளை கட்டுப்படுத்துங்க.

4) உங்களுக்கு பல லோன்கள் இருக்குனா அதை அதிக வட்டிலிருந்து, கம்மி வட்டியா வர மாதிரி வரிசை படுத்துங்க…
எந்த Loanக்கு அதிக வட்டி கொடுக்குறீங்களோ அதுக்கு முக்கியதுவம் மொதல்ல கொடுத்து பணம் கட்டினா,loanக்கு கூட amount போறத குறைக்கலாம்.

5) அடுத்து car loan,home loan, personal loanனு நிறைய இருந்தா..அதை பண‌த்தோட அளவு படி 5லட்சம் ,3லட்சம் ,1 லட்சம்னு வரிசை படுத்துங்க , எதுக்கு கம்மியான பணம் செலுத்த வேண்டியது இருக்குனு பார்த்து சீக்கிரம் லோனை அடைச்சா.. ஒரு loan முடிஞ்சதுன்ற நம்மதி கிடைக்கும் …

6) பாபநாசம் படத்துல கமல் பஸ் டிக்கெட் மொதகொண்டு சேர்த்து வைப்பாரு ,அதை பார்த்த சிலருக்கு சிரிப்பு கூட வந்திருக்கும் ,ஆனா கடன் விஷயத்துல அதை நாம கடைபிடிக்கனும் , ஒவ்வொரு டைம்மும் லோன் EMI கட்டும் போது அதுக்கான Proofs collect பண்ணிவச்சுக்கனும்.

7) தீடீர்னு உங்களுக்கு increment,bonus இது மாதிரியான BULK amount கிடைக்கிதுனா அதை வச்சு உங்களுக்கு இருக்க சின்‌ன‌ சின்ன லோன்ன மொதல்ல அடைங்க…அப்போ பண்டிகையெல்லாம் கொண்டாட கூடாதானா…? Simple ah‌ பண்ணுங்க ,Loan முடிஞ்சு கிடைக்குற சந்தோஷத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமில்ல..

8) உங்களோட கடின‌ உழைப்பால ,சிக்கனத்தால இன்னைக்கு உங்க லோன் அடைக்க போறீங்கனா… அதுக்கு முன்னாடி என்னென்ன documents நாம கொடுத்தோம் அப்படின்ற ஒரு லிஸ்ட் எடுங்க.. பணமெல்லாம் கட்டிமுடிச்ச அப்பறம் உங்க original documents எல்லாமே கேட்டு வாங்கிருங்க.

9) அடுத்து முக்கியமான ரெண்டு இருக்கு ஒன்னு Loan எல்லாம் அசல் ,வட்டினு கட்டி முடிச்ச அப்பறம் No Objection Certificate bank கிட்டயிருந்து வாங்கிருங்க..முழுசா உங்க கடன் எல்லாம் முடிஞ்சதுனு…! விவரம் தெரியாம பலர் இதை வாங்குறதே இல்ல.

10) கடைசியா லோன் முடிஞ்சதுனு நிம்மதி மூச்சு விடுற‌ முன்னாடி உங்க CIBIL Score or Credit record செக் பண்ணுங்க அதுல Loan Closed or Paid in fullனு‌ வரனும் அப்போதான்‌ உங்க Loan பயணம் மொத்தமா முடிவுக்கு வருதுனு அர்த்தம்.

இந்த வழிகளை Follow பண்ணினா உங்க Loanனை சீக்கிரம் முடிக்கலாம்….கடைசியா ஒன்னு சொல்லனும்னா இன்னும் கொஞ்ச நாள் தான் எல்லாம் சரியாகிடும் ,பணம் தேவை தான் ,தேவைக்கு அதிகமா ஆசைவரும்போது தான் கடனாளி ஆகுறோம் , அளவான செலவு வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்…

About the author

Sakthi Harinath