காலைல அரக்க பறக்க எழுந்து குளிச்சு சீவி சிங்காரிச்சு 9 மணிக்கு டானு உள்ள போகணும், சாயங்காலம் 5,6 மணிக்கு அங்கிருந்து வீட்டுக்கு போகணும். இதுதான் நம்ம நாட்ல இல்ல உலகத்துல சிறுசிலஇருந்து பெருசு வரை பலரும் செஞ்சுகிட்டு இருக்கிற தினசரி விஷயம். 9 மணிக்கு ஷார்ப் ஆ உள்ள போகணும் சாயங்காலம் 5 மணிக்கு வெளிய வரணும் – இத தான் corporate companiesல basic Time management-னு சொல்லுவாங்க. இந்த பாத்தா பலருக்கும் ஸ்கூல் life ஞாபகம் வரும்.. ஆனா இப்போ நாம corporate companiesல surview ஆக என்ன பண்ணலாம்-ன்றது தான் பாக்க போறோம்.
- ‘corporate companies’ ல நீங்க surview ஆக செய்ய வேண்டிய மொத விஷயமே ‘Time Management’ தான். கார்பொரேட்ல மட்டும் இல்ல நம்ம லைப்-லேயே Time Management ரொம்பவும் முக்கியமானது. மீட்டிங்க், டெட்லைன், டாஸ்க் – ஒன்னும் மிஸ் பண்ணக்கூடாது. Google Calendar, Reminders – use பண்ணுங்க. உங்களோட punctuality உங்க மேல நல்ல அபிப்ராயம் கொண்டு வரும்.
- ரெண்டாவது Communication – ”corporate companies” ல Communication ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும். நமக்கு தெரிஞ்ச விஷயத்தை மத்தவங்களுக்கு புரியுற மாதிரி explain செய்ய தெரியணும். Mail எழுதுறதும், Call-ல பேசுறதும், One-on-one meetings எல்லாத்திலயும் clarity முக்கியம். நாம பேச விரும்புற விஷத்தை easy ஆ convey பண்ணனும்.
- Boss-ஐ Handle பண்ணறதே ஒரு Art! நம்ம Boss நம்மகிட்ட என்ன எதிர்பாக்குறாங்கனு நமக்கு தெரியணும். அவங்க எதிர்பாக்குறத நேரத்துல டெலிவரி பண்ணிட்டாளே சினிமா-ல வில்லன் boss சித்தரிக்கப்படுறமாதிரி மோசமானவங்கள இருக்கமாட்டாங்க. அவங்களுக்கு நம்ம work பத்தின Regular update கொடுக்கணும், over commit பண்ணாம, Smartஅ impress பண்ணாலே கௌதம் மேனன் மாதிரி நல்ல boss ஆ இருப்பாங்க.
- Team work தான் பல விஷயங்களில் உங்கள காப்பாத்தும். நீங்க எவ்ளோ super star ஆனாலும், Team-ல் adjust ஆகணும். Help பண்ணுங்க, Help கேளுங்க. அதுதான் உங்க carrier ஆ long-term connection ஆக்கும். மறக்காதீங்க.
- corporate companiesல இருக்கிற ஆபத்தான விசயத்துல ஒண்ணுதான் ‘Office Politics’. இந்த ரொம்பவும் smart ஆ handle பண்ணனும். அப்படி உங்களுக்கு smart ஆ handle பண்ண தெரியலைனா அந்த பக்கம் போகாதீங்க. முடுஞ்சவரை ‘Office Politics’ avoid செய்யுங்க. எந்த ஒரு Gossip-ல involve ஆகாதீங்க. எப்பவும் உங்க கருத்துகளை வெளிப்படையா சொல்றேன்னு Volunteerஆ போய் பிரச்சனைல சிக்கிக்காதிங்க. office குள்ள நடக்குற விஷத்துக்கு professional angleல stay பண்றது best.
- Company, டெக்னாலஜி அடிக்கடி evolve ஆகும், நீங்களும் ஆகணும். New tools, certifications, learning – ஒரு 10-20 mins dailyயும் dedicate பண்ணுங்க. “Job secure” பண்ணுறதுக்கு knowledge update தான் key. இல்லைனா ‘layoff’ மாட்டிக்குருவீங்க.
- உங்க வேலைக்கான Feedback பாத்து improve செய்யணும். நம்ம வேலை நல்லா இருக்குன்னு நம்மையே நம்ம நெனச்சுக்க முடியாது. Manager-லிருந்து feedback வாங்குங்க. Negative-ஆ இருந்தாலும், accept பண்ணி improve பண்ணுங்க.
- Daily 14 மணி நேரம் வேலை பண்ணினா, burnout கண்டிப்பா வரும். அதனால, time-off, family, hobbies – எல்லாத்துக்கும் space வையுங்க. Weekends-ல முக்கியம் இல்லாத emails-அ avoid செய்யுங்க.
- Company Culture-க்கு adapt ஆகணும். ஒவ்வொரு companyக்கும் ஒரு culture இருக்கு. நீங்க அந்த culture-க்கு fit ஆகணும் – dress code, tone of communication, behavior – எல்லாத்துலயும்.
- கார்பெரேட்ல Confidence தான் Hero. Last but not least – எதுவா இருந்தாலும், confident இருங்க. Mistake ஆச்சா? Admit பண்ணுங்க. Learn பண்ணுங்க. நீங்க உங்கள capable-ன்னு நம்புறப்ப தான் மத்தவங்க உங்கள நம்புவாங்க.
Officeல stress எடுத்துக்காம, smart-ஆ adapt ஆகிட்டாலே corporate companies பாத்து பயப்பட தேவை இல்லை.
Article By Sakthi Harinath

